அறிவியலுக்காய் தன்னையே அர்ப்பணித்த அந்த மனிதன் கலிலியோ கலிலியின் பிறந்தநாள்

 நவீன அறிவியலின் தந்தை ,அறிவியலுக்காய் தன்னையே அர்ப்பணித்த அந்த மனிதன் கலிலியோ கலிலியின் பிறந்தநாள் இன்று (கி பி 1642 ).





கலிலியோ சூரியனை தொடர்ந்து அவதானித்து சூரியப்புள்ளிகளை கண்டுபிடித்தவர் .அதனாலேயே தனது கண் பார்வையை இறுதிக்காலத்தில் இழந்தவர் . மதத்தின் கொடும்கோல் ஆட்சி நிலவிய வேளையிலும் தனது கொள்கைகளை நிரூபிக்க தவறாதவர் பற்றி பெரிதாக அறிந்திராதவை பற்றி பார்ப்போம் .
அறிவியல் அவதானிகள் ,விஞ்ஞானிகள் வளர்ந்த காலம் அது . அவர்கள் மதங்கள் அழுத்தம் பிரயோகித்தன . விஞ்ஞான ,அறிவியல் வளர்ச்சியை அடக்கி ஒடுக்கிய காலம் அது . அவரது முதல் கண்டுபிடிப்பு பைசா நகர தேவாலயங்களில் தொங்கிக்கொண்டிருந்த எண்ணெய் விளக்குகள் ஆடிக்கொண்டிருந்தன.அவர் அதன் நேரத்தை கணக்கிட்டார் .நேரத்தை கணக்கிட தனது நாடித்துடிப்பையே பயன்படுத்தினார் .அது பிற்காலத்தில் ஊசல் மணிக்கூடுகள் வர உதவின .ஊசலை அதன் அலைவு வைத்து(அலைவில் எந்த நிறையை ஊசலில் கட்டினாலும் ஒரே மாதிரி தான் அலைவு இருக்கும் ) மேலிருந்து கீழே போடும் நிறைகள் எதுவாக இருந்தாலும் அது கீழே விழ ஒரே நேரம் தான் என முடிவுக்கு வந்தார் .
சிலர் நினைக்க கூடும் பாரமான பொருட்கள் தான் உடனே கீழே விழும் என்று .அவ்வாறே எல்லோரும் அப்படி நினைத்து இதை ஏற்க்கவில்லை . அதனை அவர் பரிசோதனை மூலம் அப்போதே மக்களுக்கு நிரூபித்தார் . பைசா கோபுரத்தின் மேலே ஏறி நின்று இரு வேறு பாரமான பொருட்களை கீழே போட்டார் .இரண்டும் ஒரே நேரத்தில் விழுந்தது .
1609 இல் வானியல் தொலைக்காட்டியை கண்டுபிடித்து அதன் உருப்பெருக்கும் வலுவையும் அதிகரித்தார் .அதன் மூலம் வியாழனின் 4 உப கோள்களையும் கண்டு பிடித்தார் .அவரே சந்திரனில் மேல் புறத்தில் இருக்கும் மலைகளையும் பள்ளங்களையும் கண்டறிந்தார் .
அவர் 1632 இல் பிரபஞ்சத்தின் பெரும் தொகுதிகள் எனும் ஆராய்ச்சியை வெளியிட்டார் . இவ்வளவு கண்டுபிடிப்புகளை செய்தவர் மகிழ்ச்சியாக வாழ்ந்தார் என்கிறீர்களா ? இல்லை என்பது தான் பதில் .
கலிலியோவின் நண்பன், இத்தாலியை சேர்ந்த Giordano bruno (ப்ருனோ )(கி பி 1548 -1600 ) எனும் வானவியலாளர் இந்த பிரபஞ்சம் முடிவிலி என்ற கூற்றை வெளியிட்டதற்கு கிறிஸ்தவ ஆட்ச்சியாளர்கள் அவரை தீ மூட்டி கொன்றனர் . கலிலுக்கு தெரிந்திருந்தது அந்த நேரத்தில் உண்மை எவ்வளவு ஆபத்தானது என்று . காரணம் கத்தோலிக்க தேவாலயங்கள் 1000 வருடங்களுக்கு மேலாக சூரியன்,மாற்ற கோள்கள் தான் தான் பூமியை சுற்றி வருகிறது என கற்றுக்கொடுத்துக்கொண்டிருதனர் . ஆனால் பூமியையும் சூரியனையும் பிரபஞ்சத்தையும் அவதானித்து கலிலியோ கலிலி தான் ஒரு முடிவுக்கு வந்திருந்தார் . பூமி தான் சூரியனை சுற்றுகிறது என்று .அதனை முதலில் நண்பர்கள் சிலர் ஏற்றுக் கொள்ளவில்லை . அப்படி உலகம் சூரியனை சுற்றுகிறது என்றால் நாம் அதை உணர வேண்டுமே என கேள்வி கேட்டனர் ?
ஒரு நீர் ஊற்றப்பட்டு மீன் போடப்பட்ட குடுவையை சுற்றி அசைத்தால் மீன் அப்படியே தான் இருக்கும் . அதே போலவே பூமியின் அசைவு நம்மை கடினப்படுத்தாத வகையில் நிகழ்கிறது என விளக்கினார் .ஆனாலும் அந்த நேரம் இதை வெளியிடுவது ஆபத்து என்று கலிலியோவுக்கு தெரிந்திருந்தது .அவர் தனது விளக்கங்களை புத்தகமாக வெளியிட்ட போது மக்களிடையே வரவேற்பு பெற்றது . இந்த விஷயம் போப்பை கோவத்துக்கு உள்ளாக்கியது . கலிலியோவை வீட்டுக்காவலில் வைத்து அவரது படைப்புகளை தடுத்தனர் . அங்கேயே அவர் இறந்தார் . அப்போது அவருக்கு மரண சடங்கு நடத்த தேவாலயம் அனுமதிக்கவில்லை .

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி