ஆபிரகாம் லிங்கன் பர்த் டே டுடே

 ஆபிரகாம் லிங்கன் பர்த் டே டுடே


💐
🎯ஒரு மனிதர் தன்னுடைய 21 வயதில் வியாபாரத்தில் படுதோல்வி அடைந்தார்.
தனது 22வது வயதில் மக்களவைத் தேர்தலில் தோல்வியைத் தழுவினர்.
தனது 24 வது வயதில் வியாபாரத்தில் மீண்டும் தோல்வி அடைந்தார்.
தனது 26 வது வயதில் இளம் மனைவியை இழந்து துன்பத்தில் மூழ்கினார்.
தனது 27 வயதில் நரம்புத் தளர்ச்சியால் பெரிதும் பாதிக்கப்பட்டார்.
தனது 34வது வயதில் கட்சிப்பதவிக்கான தேர்தலில் தோல்வியடைந்தார்.
தனது 45வது வயதில் செனட்டர் பதவிக்கான தேர்தலில் தோற்றார்.
தனது 47 வது வயதில் உதவி ஜனாதிபதிக்கான தேர்தலில் தோற்றார்.
மீண்டும் தனது 49வது வயதில் செனட்டர் பதவிக்கான தேர்தலில் தோல்வி.
இவ்வாறாக தொடர்ச்சியான தோல்விகளைச் சந்தித்த பிறகு தனது 52வது வயதில் அமெரிக்காவின் ஜனாதிபதியாக வெற்றி பெறுகின்றார். அவர்தான் ஆபிரகாம் லிங்கன்,
ஆம்! எந்தத் தோல்வியும் அவருடைய முயற்சிகளை முடக்கிவிடவில்லை. முயற்சிகள் தொடர்ந்தால் தோல்விகள் எப்பொழுதும் நிலையானது அல்ல என்பதைத்தான் அவருடைய வாழ்க்கை நமக்குக் கற்றுத்தரும் பாடம்.
🚨எக்ஸ்ட்ரா ஒரு இண்டரஸ்டிங் ரிப்போர்ட்:🤟🏼
ஆப்ரகாம்லிங்கன் தனது 15-ஆம் வயதில் கல்வி கற்க துவங்கினார். அவர் வாழ்ந்த காலத்தின் தொடக்கத்தில் அமெரிக்காவில் காகிதம் பயன்பாட்டிற்கு வராத காலம். இதனை சற்றும் பொருட்படுத்தாத அவர், ஒரு மரப்பெட்டியின் மீது கரித்துண்டால் எழுதி எழுதி பழகினார். மேலும் அவர் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்ததால் குடும்பச்சூழல் காரணமாக புத்தகங்களை அவரால் விலை கொடுத்து வாங்கி படிக்க முடியவில்லை. அதனால் தனக்கு தெரிந்த நபர்களிடம் புத்தகங்களை இரவல் வாங்கி படித்தார். அப்படி ஒரு சமயம் இரவலாக வாங்கி வந்த புத்தகம் மழையில் நனைந்து கிழிந்து விட்டது. அந்நூலின் சொந்தக்காரருக்கு புதிய நூலை வாங்கித் தர அவரால் முடியவில்லை. அதற்கு பதிலாக அப்புத்தகத்தின் உரிமையாளரின் நிலத்தில் மூன்று நாட்கள் விவசாய வேலை செய்து அதை ஈடுகட்டினார். வாழ்வில் முன்னேறத் துடிப்பவர்களுக்கு சோதனை வருவது சாதனைக்காகத்தான் என்ற கருத்து ஆப்ரகாம் லிங்கன் வாழ்க்கை வரலாறு நமக்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டாகும்.

©தகவல் உதவி : 🎩கட்டிங் கண்ணையா🕶

Comments

Popular posts from this blog

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி