அன்றும் இன்றும் என்றும் நிலைத்து நிற்கும் இயக்குனரான கே விஸ்வநாத்
தெலுங்கு திரை உலகில், தனக்கென தனி ஆளுமையுடன், கர்நாடக சங்கீத அடிப்படையில் பாடல்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து, அருமையான கதையை திரைக்கதை வசனத்துடன், மக்களை ஈர்க்கும் இயக்குனராய் தெலுங்கு திரை உலகில் பெரிதும் போற்றப் படுபவராய், அன்றும் இன்றும் என்றும் நிலைத்து நிற்கும் இயக்குனரான கே விஸ்வநாத் அவர்கள் நேற்றைய தினத்தில் காலமானார்.
93 வயதான கே. விஸ்வநாத் அவர்களின் அபார திறமை நாள் வெளிவந்த படங்களில் சிரி சிரி முவ்வா, சங்கராபரணம், சலங்கையில் ஒலி, சிப்பிக்குள் முத்து போன்ற படங்கள் மக்களால் பாராட்டப் பெற்றும் இசைக்கு முக்கியத்துவம் கொடுத்து, பரதநாட்டியக் கலையையும் மேம்படுத்தி அற்புதமாய் படம் எடுத்த இயக்குனர் கே விஸ்வநாத் அவர்கள்.
தமிழ் மொழியில் கே. பாலச்சந்தர் அவர்கள் எப்படியோ அதே போல தெலுங்கு மொழியில் கே. விஸ்வநாத் அவர்கள்
இவர் இயக்கிய சலங்கை ஒலியில், பத்மஸ்ரீ கமலஹாசன் கிணற்றின் மேல் நாட்டியம் ஆடுவது போன்ற காட்சி எவராலும் மறக்க முடியாது.
தமிழ்ப்படமான உத்தமவில்லன் படத்தில், கமலஹாசனின் மாமனாராக மார்க்கபந்து பாத்திரத்திலும், ரஜினிகாந்த் நடித்த லிங்கா படத்தில் ஊர்ப் பெரியவராகவும் நடித்திருப்பார்.
சங்கராபரணம் படத்தின் ஒளிப்பதிவாளராக இருந்தவர் தமிழ் படத்தில் கோலோச்சிய இயக்குனர் பாலு மகேந்திரா அவர்கள்.
தெலுங்கு மொழியில் சாதனை படைத்த இயக்குனர்களில் திரு கே விஸ்வநாத் அவர்களும் ஒருவர். அவர்களை நினைவை போற்றும் பதிவு.
முருக. சண்முகம்
Comments