Posts

Showing posts from February, 2023

ஏனிந்த அவசரம் மயில்? ஏற்க முடியவில்லையே....

Image
 ஏனிந்த அவசரம் மயில்? ஏற்க முடியவில்லையே.... * 'சண்டைக் கோழி- 2' திரைப்படத்தில் குடிகாரனாக நடித்த ஒரே ஒரு காட்சியில் அமர்க்களப்படுத்திவிட்டார் மயில்.  அற்புதமான மிமிக்ரி கலைஞர். சண்டைக் காட்சிகளின் டப்பிங்கின் போது நாயகனிடம் அடி வாங்கும் எல்லாச் சண்டைக்கலைஞர்களுக்கும்  ஒரே நேரத்தில் விதவிதமாக இவர் குரல் தருவது கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும். 'ஆனந்தம்' முதல் நான் பணியாற்றிய பெரும்பாலான படங்களில் டப்பிங் குரல் கொடுக்க வருவார்.  கையில் ஏதேனும் வித்தியாசமான தின்பண்டம் இருக்கும். அவித்த பனங்கிழங்கு.... சுட்ட சோளக்கருது... தேன் குழல் முறுக்கு... இப்படி....  அடைந்த புகழை விட பெரிய கலைஞன் அவர்.  ஆனால் குறையின்றி வாழ்ந்தார்.  தன்னைச் சுற்றி ஈரத்தையும் பசுமையையும் பரப்பினார். உதவி தேவைப்பட்ட நண்பர்களுக்கு உதவினார்.  பெருமழை, பெருந் தொற்று ஆகிய நெருக்கடி நேரங்களில் தன் பகுதியில் களப் பணி ஆற்றினார்.  சந்தித்தாலே சிரிப்பை உதடுகளில் அல்ல...  உள்ளத்துக்கு உள்ளேயும் பற்ற வைத்து விடுவார். நாள் முழுக்க அது நமக்குள் வெடித்துக் கொண்டு இருக்கும். யாரேனும் ப...

முட்டாள்களிடையே வாழ்ந்துகொண்டிருந்த கெட்டிக்காரனொருவன், கெட்டிக்காரர்களோடு பழகத்தொடங்கி முட்டாளாக செத்துப் போனேன்.”

Image
  கண்ணதாசன் எழுதிய பாடல் வரிகளை கேட்டதால்தான், அவர்களுக்கு அத்தனை ஆத்திரம். 'பாவ மன்னிப்பு' படம் தயாராகிக் கொண்டிருந்த நேரம் அது. அதற்கான பாடல்களை எழுதியவர் கண்ணதாசன். படப்பிடிப்பு நல்லபடியாக முடிந்து சென்சாருக்கு போனது. படத்தில் ஆரம்பத்தில் சிவாஜி பாடுவதாக வரும் 'வந்த நாள் முதல் இந்த நாள் வரை..' பாடலைப் பார்த்த சென்சார் அதிகாரிகள் பதறிப் போனார்கள். "இல்லை . இந்த பாடல் வரியை அனுமதிக்க முடியாது." "ஏன் ?" "அந்தப் பாடலின் இடையில் கண்ணதாசன் எழுதிய வரியில் மாபெரும் தவறு இருக்கிறது." "தவறா ?" "ஆமாம். அது என்ன 'எதனைக் கண்டான் மதங்களை படைத்தான்' என்று எழுதி இருக்கிறார் ? அதை மாற்றி எழுதித் தர சொல்லுங்கள். இல்லாவிட்டால் இந்தப் பாடலை அனுமதிக்க முடியாது." படக் குழுவினர் கண்ணதாசனிடம் போய் சொன்னார்கள். சென்சார் கண்டித்து அனுப்பிய தன் பாடலை கண்ணதாசன் வாசித்துப் பார்த்தார். "பறவையை கண்டான் விமானம் படைத்தான் பாயும் மீன்களில் படகினை கண்டான் எதிரொலி கேட்டான் வானொலி படைத்தான் எதனைக் கண்டான் மதம்தனைப் படைத்தான்." கண்ணதாசன்...

நீச்சல்குளத்தில் நீரின் மேற்பரப்பில் நடிகர் கமல் பிரம்மாண்ட ஓவியம்..!

Image
  நீச்சல்குளத்தில் நீரின் மேற்பரப்பில் நடிகர் கமல் பிரம்மாண்ட ஓவியம்..! நீச்சல் குளத்தில் தண்ணீர் மேற்பரப்பில், நரைத்த தாடி, தலைமுடியுடன் நடிகர் கமல்ஹாசன் சிரிக்கும் பிரம்மாண்ட ஓவியம். கேரளா மாநிலம், திருச்சூர் மாவட்டம் கொடுங்கலூர் பகுதியை சேர்ந்த இளைஞர் டவன்ஸி சுரேஷ். இவர் ஒரு வித்தியாசமான சிந்தனைகள் உடைய ஓவியர். சக ஓவியர்களை காட்டிலும் ஏதாவது சாதிக்க வேண்டும் என நினைப்பவர். ஓவியர் டவன்ஸி சுரேஷ், பிரபலங்களின் படங்களை அடிக்கடி வரைவதை வழக்கமாக கொண்டு இருந்தார். நடிகர் கமல்ஹாசனின் உருவப்படத்தை தண்ணீரின் மேல் வரையும் புதுமையான எண்ணம் ஏற்பட்டது. மூணாறில் உள்ள ஒரு விடுதியின் மூன்றாவது மாடியில் உள்ள நீச்சல் குளத்தில், தண்னீரின் மேற்பரப்பில் 2,500 ஏ போர் பேப்பர் சீட் மற்றும் வர்ணங்களை கொண்டு கமலஹாசன் படத்தை காட்சிப்படுத்தினார். இந்தப் படம் 50 அடி உயரமும் 30 அடி நீளமும் உடையது. ஓவியர் டவின்ஸி சுரேஷ், நீச்சல் குளத்தில், தண்ணீரின் மேற்பரப்பில் இந்த படத்தை உருவாக்குவதற்கு மூன்று நாட்கள் ஆகியுள்ளது என்பது தான் கூடுதல் தகவல்! நரைத்த தலை, தாடியுடன் சிரிக்கும் கமலின் தற்போதைய தோற்றத்தை அந்த ஓவியத...

மம்முட்டியின் 70வது பிறந்தநாளின் போது 600 மொபைல் போன்களை பயன்படுத்தி பிரமாண்ட ஓவியத்தை உருவாக்கிய கேரள கலைஞர்!

Image
  நடிகர் மம்முட்டியின் 70வது பிறந்தநாளின் போது 600 மொபைல் போன்களை பயன்படுத்தி பிரமாண்ட ஓவியத்தை உருவாக்கிய கேரள கலைஞர்! ஓவியர் டாவின்சி சுரேஷ் கருத்துப்படி, 600 மொபைல் போன்கள் மற்றும் 6,000 மொபைல் பாகங்கள் மூலம் உருவப்படம் 20 அடி பெரியது. திரையுலகில் 50 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி அவருக்குப் பரிசளிக்கும் வகையில் இந்த தனித்துவமான உருவப்படம் உருவாக்கப்பட்டது. "நடிகர் மம்முட்டியின் பிறந்தநாளை முன்னிட்டு, தொழில்துறையில் 50 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி, மொபைல் கடை உரிமையாளர் அனஸ் வழங்கிய பரிசு இது. "மொபைல் போன்கள் மற்றும் துணைக்கருவிகளைப் பயன்படுத்தி இந்த உருவப்படத்தை உருவாக்குவதன் மூலம், எந்தவொரு பொருளையும் பயன்படுத்தி கலைப்படைப்புகளை உருவாக்கும் திறமையை அவர் நிரூபித்துள்ளார்," என்று Kbees தர்பார் கன்வென்ஷன் சென்டரின் உரிமையாளர் பாபு கூறினார். நன்றி: இந்தியன் எக்ஸ்பிரஸ்

இயக்குனர், எழுத்தாளர், பாடலாசிரியர், நடிகர் என்று பல்கலை வித்தகரான கொத்தமங்கலம் சுப்பு காலமான நாளின்று

Image
இயக்குனர், எழுத்தாளர், பாடலாசிரியர், நடிகர் என்று பல்கலை வித்தகரான கொத்தமங்கலம் சுப்பு காலமான நாளின்று ஆம் ஜெமினியின் புகழ்பெற்ற படங்களான சந்திரலேகா, ஒளவையார், நந்தனார், மிஸ் மாலினி, வஞ்சிக்கோட்டை வாலிபன் போன்ற படங்களின் வெற்றியில் சுப்புவின் பங்கு அளப்பரியது. ஜெமினியில் நடிகர், கதாசிரியர், இயக்குநராக, கதை வசனகர்த்தா கவிஞர் என தன் பன்முக திறமையுடன் இயங்கி திரையுலகில் புகழ்பெற்றார் சுப்பு. ஜெமினியில் நான்கு படங்களை இயக்கிய சுப்பு, ஏழு படங்களுக்குத் திரைக்கதை எழுதினார். அவரது பல நுாறு பாடல்கள் மக்களால் பெரிதும் பேசப்பட்டது. ஜெமினியின் தயாரிப்பான ஒளவையார் கொத்தமங்கலம் சுப்புவுக்கு பெரும்புகழ் அளித்தது. சினிமாவையே பார்த்திராத, அதன் மீதுவெறுப்பு கொண்ட ராஜாஜி விரும்பி பார்த்த திரைப்படம் ஔவையார் திரைப்படம். விகடனின் அவரது மாஸ்டர் பீஸ் 'தில்லானா மோகனாம்பாள்'. அது வெளிவந்த காலத்தில் ஆனந்தவிகடன் பரபரப்பான விற்பனையானது. திரையுலகில் அவரது அத்தனை புகழையும் இந்த ஒற்றை நாவல் அவருக்கு அளித்தது. தொடர்ந்து விகடனில் அவர் எழுதிய'ராவ் பகதூர் சிங்காரம்' என்னும் ஒரு தொடரும் வாசகர்களிடையே நல்ல...

தமிழ் நாடக மேதை அவ்வை டி.கே.சண்முகம் மறைந்த நாளின்று

Image
தமிழ் நாடக மேதை அவ்வை டி.கே.சண்முகம் மறைந்த நாளின்று புராண நாடகங்கள்,தேசபக்தி நாடகங்கள் அறநெறி மற்றும் சீர்திருத்தக்கருத்துக்கள் கொண்ட நாடகங்கள் என பல்வேறு நாடகங்களை அரங்கேற்றித் தமிழ் மக்களின் அமோக ஆதரவைப் பெற்று மிகவும் பிரபலமாக விளங்கியது, டி. கே. எஸ். சகோதரர்களின் நாடக சபா, டி.கே.சங்கரன்,டி.கே.முத்துசாமி,டி.கே.சண்முகம்,டி.கே.பகவதி,என்னும் அந்த சகோதரர்கள் நால்வரில் ஒருவர்தான் டி.கே.சண்முகம்.அவர்கள் நாடகத் துறையின் மறுமலர்ச்சிக்கு வித்தூன்றியவர்களில் தலையாய இடத்தைப் பெற்றவர் என்றும் நாடகத்துறையின் தொல்காப்பியர் என்றும் மக்கள் குறிப்பிட்டாங்க. சண்முகம் தமது ஆறாவது வயதிலேயே நாடகத் தந்தை என்று போற்றப்பட்ட சங்கரதாஸ் சுவாமிகளின் மதுரை தத்துவ மீனலோசனி வித்துவ பால சபையில் நடிகராகச் சேர்த்தார்.74,நாடகங்களில் பல்வேறு குணச்சித்திரபாத்திரங்களை ஏற்றுத் தம் சீரிய நடிப்பால் மக்கள் மனதை ஈர்த்தார். அவற்றுள் சிறுவர்களுக்கும் பெரியவர்களுக்கும் அறநெறிப் பாடல்களைப் பழந்தமிழ்ப் பெண்பாற்புலவரான அவ்வை ,என்பவரின் வாழ்க்கை வரலாற்றை நாடகமாக்கி வயது முதிர்ந்த அவ்வைப் பாட்டி வேடத்தை இவர் தாங்கிச் சிறப்பாக நடித...

அறிவியலுக்காய் தன்னையே அர்ப்பணித்த அந்த மனிதன் கலிலியோ கலிலியின் பிறந்தநாள்

Image
  நவீன அறிவியலின் தந்தை ,அறிவியலுக்காய் தன்னையே அர்ப்பணித்த அந்த மனிதன் கலிலியோ கலிலியின் பிறந்தநாள் இன்று (கி பி 1642 ). கலிலியோ சூரியனை தொடர்ந்து அவதானித்து சூரியப்புள்ளிகளை கண்டுபிடித்தவர் .அதனாலேயே தனது கண் பார்வையை இறுதிக்காலத்தில் இழந்தவர் . மதத்தின் கொடும்கோல் ஆட்சி நிலவிய வேளையிலும் தனது கொள்கைகளை நிரூபிக்க தவறாதவர் பற்றி பெரிதாக அறிந்திராதவை பற்றி பார்ப்போம் . அறிவியல் அவதானிகள் ,விஞ்ஞானிகள் வளர்ந்த காலம் அது . அவர்கள் மதங்கள் அழுத்தம் பிரயோகித்தன . விஞ்ஞான ,அறிவியல் வளர்ச்சியை அடக்கி ஒடுக்கிய காலம் அது . அவரது முதல் கண்டுபிடிப்பு பைசா நகர தேவாலயங்களில் தொங்கிக்கொண்டிருந்த எண்ணெய் விளக்குகள் ஆடிக்கொண்டிருந்தன.அவர் அதன் நேரத்தை கணக்கிட்டார் .நேரத்தை கணக்கிட தனது நாடித்துடிப்பையே பயன்படுத்தினார் .அது பிற்காலத்தில் ஊசல் மணிக்கூடுகள் வர உதவின .ஊசலை அதன் அலைவு வைத்து(அலைவில் எந்த நிறையை ஊசலில் கட்டினாலும் ஒரே மாதிரி தான் அலைவு இருக்கும் ) மேலிருந்து கீழே போடும் நிறைகள் எதுவாக இருந்தாலும் அது கீழே விழ ஒரே நேரம் தான் என முடிவுக்கு வந்தார் . சிலர் நினைக்க கூடும் பாரமான பொருட்கள்...

ஒடுக்கப்பட்ட இனத்தின் திராவிடக் குரல்! சத்தியவாணி முத்து நூற்றாண்டு பிறந்தநாள்!

Image
  ஒடுக்கப்பட்ட இனத்தின் திராவிடக் குரல்! சத்தியவாணி முத்து நூற்றாண்டு பிறந்தநாள்! திராவிட இயக்க முன்னோடியும் திமுகவின் நிறுவன உறுப்பினர்களில் &ஒருவருமான சத்தியவாணி முத்துவுக்கு 100வது பிறந்தநாள் இன்று! 1967ஆம் ஆண்டு மீண்டும் பெரம்பூர் தொகுதியில் வெற்றி பெற்று பேரறிஞர் அண்ணாவின் அமைச்சரவையில் 8 அமைச்சர்களில் ஒரு அமைச்சராக பொறுப்பேற்று, சமூகநலம், மீன்வளம், செய்தித்துறை, ஆதிதிராவிடர் நலன் உள்ளிட்ட இலாகாகளை கவனித்தார்.அண்ணா மறைவுக்கு பிறகு அடுத்து அமைந்த கருணாநிதி தலைமையிலான அமைச்சரவையிலும் அங்கம் வகித்த சத்தியவாணி முத்து கருத்து வேறுபாடு காரணமாக திமுகவில் இருந்து பிரிந்து 1974ஆம் ஆண்டு தாழ்த்தப்பட்டோர் முன்னேற்றக் கழகம் என்ற கட்சியை தொடங்கினார். பின்னர் 1977 தேர்தலுக்கு முன்னதாக அதிமுக உடன் தனது கட்சியை இணைத்தார். 1977 சட்டமன்றத் தேர்தலில் உளுந்தூர்பேட்டை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்த சத்தியவாணி முத்து, 1979-இல் அமைந்த பிரதமர் சரண்சிங் அரசில் மத்திய அமைச்சராக பொறுப்பேற்று திராவிடர் இயக்க வரலாற்றில் முதன்முதலில் மத்திய அமைச்சராகி புதிய வரலாற்றை படைத்தார். புற்றுநோய்...

உறவு, நட்பு இடையே பிரைவசி முக்கியம்..? அந்தரங்கம் காப்பது எப்படி

Image
  உறவு, நட்பு இடையே பிரைவசி ஏன் முக்கியம்..? அந்தரங்கம் காப்பது எப்படி தனித்து வாழ்தல் மனிதரின் இயல்பல்ல. ஆனால், ஒவ்வொரு மனிதருக்கும், அவருக்கு மட்டுமே உரிய, அவருக்கு மட்டுமே தெரிந்த, அவருக்கு மட்டுமே சொந்தமான ஒரு விஷயம் பொ துவான பார்வையிலிருந்தும் கவனத்திலிருந்தும் விலகி, ஓரிடத்தில் அது வீடோ, வெளியிடமோ, யாராலும் கண்காணிக்கப்படாமல், யாருடைய தொல்லையும் இல்லாமல், தன் விருப்பப்படி இயல்பாக இருக்கும் நிலையை `பிரைவசி' எனலாம்.  இன்றைய நிலையில் தனிப்பட்ட வாழ்க்கையில் மட்டுமல்ல, உறவுகளுக்கிடையிலும் பிரைவசி தேவையாக இருக்கிறது. சில விஷயங்களைப் பகிர்ந்துகொள்வதும், சிலவற்றைப் பகிராமல் இருப்பதும், பிறருடைய அந்தரங்க எல்லையை மதிப்பதும் அதன் அங்கம்தான். தனித்து வாழ்தல் மனிதரின் இயல்பல்ல. ஆனால், ஒவ்வொரு மனிதருக்கும் அவருக்கு மட்டுமே உரிய, அவருக்கு மட்டுமே தெரிந்த, அவருக்கு மட்டுமே சொந்தமான விஷயங்கள் பல உண்டு. அவர் அனுமதிக்காத பட்சத்தில் அவருக்கான வெளிக்குள் நுழைய யாருக்கும் உரிமையில்லை. தனிமையில் தம்பதியினர் நெருக்கமாக இருத்தல், எந்தவித தொந்தரவும் இல்லாமல் தன் அறைக்குள் பாடல் கேட்டுக்கொண்ட...