ஆவடி மோரை ஊராட்சி கன்னியம்மன் நகரில் கோலாகலமான தைத்திருநாள் கொண்டாட்டம்
திருவள்ளூர் மாவட்டம் ஆவடி மோரை ஊராட்சி
கன்னியம்மன் நகரில் கோலாகலமான
தைத்திருநாள் கொண்டாட்டம்
ஆவடி.ஜன-15. திருவள்ளூர் மாவட்டம் ஆவடி மோரை ஊராட்சி புதிய கன்னியம்மன் நகரில் உள்ள இனிய உதயம் தொண்டு நிறுவனத்தின் மாலைநேர திறண்வளர் மையத்தில் 14.01.2023 அன்று காலை 11மணி முதல் மதியம் 2.30 மணி வரை கோலாகலமாக பொங்கல் தைத்திருநாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
இந்த விழாவிற்கு சிறப்பு விருந்தினராக இனிய உதயம் தொண்டு நிறுவனத்தின் தலைமை செயல்பாட்டாளரும் சமூக ஆர்வலருமான அல்லா பகேஷ் அவர்கள் கலந்துக்கொண்டார். இந்த பொங்கல் தின விழாவில் குழந்தைகள் மற்றும் பெற்றோர்கள் புத்தாடை அணிந்து சூரிய பகவானுக்கு பொங்கல் வைத்து, குழந்தைகளின் ஆடல் பாடலுடன் உங்கள் விழா சிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவில் பொங்கல் கொண்டாடப்படுவதற்கான நோக்கம் என்ன என்பதை பத்தாம் வகுப்பு மாணவி திவ்யதர்ஷினி அருமையாக விளக்கி நிகழ்ச்சியும் தொகுத்து வழங்கினார்.
இந்த விழாவில் குழந்தைகள் புத்துணர்ச்சியுடன் ஆடல் பாடல்கள் நடனமாடி கூடியிருக்கும் குழந்தைகளுக்கு சந்தோசத்தை கொடுத்தனர். முன்னதாக குழந்தைகளுக்கும், பெற்றோர்களுக்கும் போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்ற குழந்தைகளுக்கும் பெற்றோர்களுக்கும் அல்லாபகேஷ் அவர்கள் பரிசுகள் வழங்கினார். இந்த பொங்கல் விழாவில் கலந்து கொண்ட 100 மேற்பட்ட குழந்தைகள் அனைவருக்கும் பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நன்னாளில் அனைவரும் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் கலந்துக்கொண்ட அனைத்து குழந்தைகள் மற்றும் பெற்றோர்கள் அனைவருக்கும் பரிசு பொருட்கள் மற்றும் இனிப்பு வகைகள் வழங்கப்பட்டது.
இந்தப் பொங்கல் தைத்திருநாள் விழாவை இனிய உதயம் தொண்டு நிறுவனத்தின் ஆசிரியர்கள் ஜீவிதா, கீர்த்தனா, புனிதா, மரியம் மற்றும் கிறிஸ்து காலேஜ் மாணவர் சசிவகிரி ஆகியோர் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர். பெற்றோர்களும் உதவியாக இருந்தனர். மொத்தத்தில் பொங்கல் தைத்திருநாள் மிக சிறப்பாக சந்தோஷமாக இனிமையாக நடைபெற்றது
இந்த விழாவிற்கு தேவையான பந்தல், பரிசு பொருட்கள், இனிப்பு மற்றும் கார வகைகள் வழங்க உதவிய நன்கொடையாளர்கள் அனைவருக்கும் இனிய உதயம் தொண்டு நிறுவனத்தின் குழந்தைகள் மற்றும் ஆசிரியர்கள் சார்பாக புதிய கன்னியம்மன் நகர் இனிய தொண்டு நிறுவனதின் மாலை நேர திறண்வளர் மையத்தின் ஆசிரியர் ஜீவிதா அவர்கள் நன்றி கூறினார்.
Comments