மகிஷாசுரமர்த்தினி/கவிதை../- தஞ்சைதவசி
பொம்மை அரசர்கள் போதிசத்துவராக முடியாது
போகத்தின் தாளத்தில் பிசகிய விருவுப் பூனைகள்
பிணமாக இருந்த பிணம் நாறுகிறது கிழிசல்மனம்
தீர்த்துக்கட்டும் நடனம் மேய்ப்பர்கள் சுயவடிவம்
களமாடும் திரிசூலி அரூபத்தில் மகிஷாசுரமர்த்தினி
அஞ்சுவதும் அடிபணிவதும் அடிமாட்டுத் தொழுவம்
போரில் காயங்கள் வலிப்பதில்லை அகாலம் விடியும்
கலாச்சாரத்தின் கட்டுக்கதை காமத்தின் நிறம் நீலம்
Comments