பூஜை பாத்திரங்களை கஷ்டப்பட்டு தேய்த்து சுத்தம் செய்யாமல் 10 நிமிடத்தில் அத்தனை பொருட்களையும் பளபளன்னு ஜொலிக்க

 பூஜை பாத்திரங்களை கஷ்டப்பட்டு தேய்த்து சுத்தம் செய்யாமல் 10 நிமிடத்தில் அத்தனை பொருட்களையும் பளபளன்னு ஜொலிக்க செய்வது எப்படி?



பூஜை பொருட்கள் பளபளன்னு செய்வதற்கு முதலில் ஒரு பெரிய எலுமிச்சை அளவிற்கு புளி தேவை. இதை நீங்கள் ஃபிரஷ் ஆக எடுத்து வீணாக்க வேண்டிய அவசியம் இல்லை, ஏற்கனவே பயன்படுத்திய சக்கைகளை எடுத்து வைத்திருந்தாலே போதும் எனவே இனி ரசம், குழம்பு வைக்க பயன்படுத்தும் புளியை வீணாக்காதீர்கள், எடுத்து பிரிட்ஜில் வையுங்கள். ஒரு பெரிய பாத்திரத்தில் எல்லா பூஜை பாத்திரங்களையும் வைத்து தண்ணீர் ஊற்றி நிரப்பும் அளவிற்கு இருக்க வேண்டும். இதில் நீங்கள் சேகரித்து வைத்துள்ள புளி சக்கைகளை போட்டு கரைத்து விட்டுக் கொள்ளுங்கள்.

பூஜை பாத்திரங்களை அதற்குள் சேர்ப்பதற்கு முன்பு ஒரு ட்ரையான துணியை வைத்து மஞ்சள், குங்குமம், எண்ணெய் போன்றவற்றை சுத்தம் செய்து கொள்ளுங்கள். பின்னர் அடுப்பை பற்ற வைத்து கொதிக்க ஆரம்பித்ததும், அரை மூடி எலுமிச்சை பழத்தை சேர்த்துக் கொள்ளுங்கள். நன்கு கொதித்து தண்ணீரின் நிறம் மாறியதும் அடுப்பை அணைத்து விடுங்கள். பின்னர் ஆற விட்டு விடுங்கள். நன்கு ஆறியதும் ஒவ்வொரு பூஜை பாத்திரத்தையும் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். இதிலேயே பாதி அளவிற்கு எண்ணெய் பிசுக்குகள் முழுமையாக நீங்கி, பாத்திரங்கள் பளிச்சிட ஆரம்பித்திருக்கும்.

பிறகு ஒரு சிறிய பௌலில் கொஞ்சம் போல அரிசி மாவு எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். இதனுடன் கோல்கேட் பேஸ்ட் அல்லது உங்களிடம் இருக்கும் ஏதாவது ஒரு டூத் பேஸ்ட் சிறிதளவு சேர்த்துக் கொள்ளுங்கள். பிறகு பாத்திரம் தேய்க்க பயன்படுத்தும் ஜெல் அல்லது ஹேண்ட் வாஷ் ஏதாவது ஒன்றை சேர்த்து கெட்டியான பேஸ்ட் போல கரைத்துக் கொள்ளுங்கள். கரைத்துள்ள இந்த பேஸ்ட்டை ஒவ்வொரு பாத்திரத்தையும் எடுத்து எல்லா இடங்களிலும் படும்படி நன்கு தேய்த்து ஊற விட்டு விட வேண்டும்.


ஒரு ஐந்து நிமிடம் நன்கு ஊறியதும் லேசாக தேய்த்து கழுவினாலே போதும், எல்லா பாத்திரங்களும் பளபளன்னு புதியது போல ஜொலிக்க ஆரம்பிக்கும். பித்தளை பாத்திரங்கள் அனைத்தும் கஷ்டப்படாமல் ரொம்ப ஈசியாக இந்த முறையில் சுத்தம் செய்து விடலாம். நீங்கள் இதனுடன் வெள்ளி பொருட்கள் வைத்திருந்தால் வெள்ளிப் பொருட்களை கோல்கேட் டூத் பவுடர் அல்லது விபூதி வைத்து தேய்த்தாலே போதும் பளபளன்னு பளிச்சுன்னு ஜொலிக்க ஆரம்பிச்சிடும்.

வெள்ளி பொருட்களை புளி போட்டு தேய்க்க வேண்டாம். எந்த பூஜை பொருட்களையும் சுத்தம் செய்த பின்பு உடனடியாக நல்ல ஒரு காட்டன் துணியை வைத்து ஈரப்பதம் இல்லாமல் துடைத்து வைத்து விட வேண்டும். அப்பொழுது தான் எளிதில் கறுத்துப் போகாமல் இருக்கும். துடைத்து ஃபேன் காற்றில் வைத்து விடுங்கள். அதன் பிறகு நீங்கள் குங்குமம், சந்தன பொட்டிட்டு அலங்கரித்துக் கொள்ளலாம். பூஜை பொருட்களை ஒருபோதும் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமையில் துலக்க கூடாது. இது அதிர்ஷ்டத்தை வெளியில் போக செய்து விடும் எனவே முந்தைய நாளே இவற்றை செய்து விடுங்கள்.




Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி