தேசிய உழவர் நாளின்று
தேசிய உழவர் நாளின்று
நமது அன்றாட வாழ்க்கையிலும், பொருளாதாரத்திலும் விவசாயிகளின் பங்களிப்பு மிகப்பெரியது. அவர்களை போற்றும் வகையில் தேசிய உழவர் தினம் (National Farmers' Day) ஒவ்வொரு வருடமும் டிசம்பர் மாதம் 23ம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தியாவின் முன்னாள் பிரதமர் சவுத்ரி சரண் சிங் (Chaudhary Charan Singh) அவர்களின் பிறந்த நாளை நினைவுக் கூறும் வகையில் இந்த தேசிய உழவர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
பல்வேறு நெருக்கடியான அரசியல் சூழல்களுக்கிடையே ஜூலை 1979-ம் ஆண்டு, இந்தியாவின் 5-வது பிரதமராக சவுத்ரி சரண் சிங் பதவியேற்றார்.
பின்னர் 1980-ம் ஆண்டு ஜனவரி 14-ம் தேதி வரை 7 மாதங்கள் ஆட்சியில் இருந்த சரண் சிங் ஜமீன்தாரி ஒழிப்புமுறை சட்டத்தை கொண்டு வந்தார். அதேசமயம் நிலச் சுவான்தார்கள், வட்டிக்கு பணம் வழங்குவோர் மீது கடும் எதிர்ப்புகளையும், கண்டனங்களையும், விமர்சனங்களையும் முன் வைத்தவர் இவர். அவருடைய ஆட்சியின்போதே உழவர்களின் விளைபொருள் விற்பனைக்காக வேளாண் விளைபொருள் சந்தை மசோதாவையும் அறிமுகப்படுத்தினார். இதே போன்று அவர் ஆட்சியின் போது உழவர்களின் நலன்களுக்காக சில முக்கிய திட்டங்களை கொண்டு வந்தார்.
இந்த நிலையில், நாட்டில் அனைவருக்கும் போதுமான உணவு இருப்பதை உறுதி செய்வதற்காக அவர்கள் செய்த பணியை மதிக்கும் பொருட்டு, அவரது பிறந்த நாளிலேயே அதாவது டிசம்பர் 23ம் தேதி கிசான் திவாஸ் அல்லது தேசிய உழவர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. மேலும் சவுத்ரி சரண் சிங், சர் சோட்டு ராமின் மரபுகளை முன்னோக்கி கொண்டு சென்றார் என்றும் கூறப்படுகிறது. நாட்டில் விவசாயிகளின் பிரச்சினைகள் குறித்து விழிப்புணர்வை பரப்புவதற்காக 1978 டிசம்பர் 23 அன்று கிசான் டிரஸ்டையும் அவர் திறந்து வைத்தார்.
வேளாண் துறையின் சமீபத்திய கற்றல்களுடன் சமூகத்தில் விவசாயிகளுக்கு அதிகாரம் அளிக்கும் யோசனையை இந்த நாள் குறிக்கிறது. உழவர் தினம் விவசாயிகள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகள் குறித்து மக்களுக்கு அறிவுறுத்துவதில் செயல்படுகின்றன. சாதாரண சூழ்நிலைகளில், தேசிய விவசாய தினத்தன்று விவசாயிகள் செய்த பணிகளைப் பாராட்டும் விதத்தில் பல்வேறு நிகழ்வுகள், நாடகங்கள் மற்றும் திரைப்படங்களை ஏற்பாடு செய்யப்பட்டு இந்த தினம் கொண்டாடப்படுவது வழக்கம்.
இச்சூழலில், இந்த தேசிய உழவர் தினத்தில் உங்கள் அன்புக்குரியவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவிக்க விரும்பினால், நீங்கள் பகிர்ந்து கொள்ளும் வகையில் சில வாழ்த்து செய்திகள் பின்வருமாறு:
* எல்லாவற்றையும் சில்லறை விற்பனையில் வாங்கி, எல்லாவற்றையும் மொத்தமாக விற்று, சரக்குகளை இரு வழிகளிலும் செலுத்தும் ஒரே மனிதர் விவசாயி மட்டுமே - ஜான் எஃப். கென்னடி
* உழவு தொடங்கும் போது, பிற கலைகள் பின்பற்றப்படுகின்றன. எனவே, விவசாயிகள் மனித நாகரிகத்தின் நிறுவனர்கள் - டேனியல் வெப்ஸ்டர்
* உலக சக்கரவர்த்தியாக இருப்பதை விட நான் எனது பண்ணையில் இருப்பேன் - ஜார்ஜ் வாஷிங்டன்
* விவசாயம் தவறாக நடந்தால், வேறு எதுவும் நாட்டில் சரியாக நடக்க வாய்ப்பில்லை. -எம். எஸ். சுவாமிநாதன்.
Comments