பதான்’ திரைப்படத்தின் ‘பேஷரம் ரங்’



பதான் திரைப்படத்தை புறக்கணித்து, அந்தப் படம் ஓடும் திரையரங்குகளை தீ வைத்துக் கொளுத்துங்கள்" என்று பேசி சர்ச்சையைக் கிளப்பியுள்ளார் அயோத்தியின் ஹனுமன் காரி மடத்தைச் சேர்ந்த மத குரு ராஜு தாஸ்

ஷாருக்கான், தீபிகா படுகோனே நடித்த ‘பதான்’ திரைப்படத்தின் ‘பேஷரம் ரங்’ பாடலின் வீடியோ அண்மையில் வெளியானது. அதில் தீபிகா படுகோனே காவி நிற பிகினி ஆடையும், ஷாருக்கான் பச்சை நிற ஆடையும் அணிந்தவாறு டூயட் பாடுகின்றனர். இதனைச் சுட்டிக்காட்டிய மத்தியப் பிரதேச உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா, நடிகர்கள் தீபிகா, ஷாருக் அணிந்திருந்த ஆடை நிறத்தை சுட்டிக்காட்டி “காவி உடை வேண்டுமென்றே அவமதிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்திற்கு தடை விதிக்க வேண்டும்” என்றார். இணையவெளியில் இது தொடர்பாக காரசார வாதங்கள் எழுந்துள்ளன.
இந்தூரில் வீர சிவாஜி குரூப்பைச் சேர்ந்தவர்கள் ஷாருக் கான், படத்தின் நாயகி தீபிகா படுகோன் ஆகியோரி கொடும்பாவியை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் படத்துக்குத் தடைவிதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து கோஷமிட்டாய்ங்க.
from 
The Desk of கட்டிங் கண்ணையா!



Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி