'காலா பாணி' மு.ராஜேந்திரன் இ.ஆ.ப
'காலா
பாணி' நாவலுக்காக எழுத்தாளர் மு.ராஜேந்திரன் இ.ஆ.ப
அவர்களுக்கு
2022
க்கான
சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டு மத்திய அரசின் சார்பில் எழுத்தாளர்களுக்கான உயர்ந்த விருதுகளாக சாகித்ய அகாடமி விருதுகள் வழங்கப்படும். ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ராஜஸ்தானி, உருது, சிந்தி, 24 மொழிகளில் சிறந்த நூல்களை தேர்ந்தெடுத்து அதை எழுதிய எழுத்தாளர்கள் கௌரவிக்கப்படுவார்கள். தாமிர பட்டயம் விருதுடன் ரூ.1,00,000 பணமும் வழங்கப்படும்.
இந்திய
மொழிகளில் வெளியாகியுள்ள சிறந்த இலக்கியப் படைப்புகளை பெருமைப்படுத்தும் விதமாக 1954 ம்
ஆண்டு முதல்
ஒவ்வொரு ஆண்டும் மிகச்
சிறந்த நூல்களுக்கு சாகித்ய அகாடமி விருது மத்திய அரசு
சார்பில் வழங்கப்பட்டு வருகிறது.
.
அந்தவகையில் இந்த 2022ம் ஆண்டு தமிழ்மொழிக்கான சாகித்திய அகாதமி விருது எழுத்தாளர் மு. ராஜேந்திரன் எழுதிய 'காலா பாணி' நாவலுக்கு வழங்கப்படுகிறது. கிழக்கிந்திய கம்பெனி அதிகாரிகளின் கடிதங்கள், நினைவுக் குறிப்புகள் ஆகியவற்றையும் கே.ராஜய்யன், எஸ்.ஜெயசீல ஸ்டீபன் முதலிய வரலாற்று ஆய்வாளர்களின் நூல்களையும் ஆதாரங்களாகக் கொண்டு எழுதப்பட்ட இந்த நாவல் 1801 ஆம் ஆண்டு நடந்த காளையார் கோவில் போரை முன் வைத்து எழுதப்பட்ட ஒரு வரலாற்று புதினமாகும்.
மு.ராஜேந்திரன் மதுரை மாவட்டத்தைச் சார்ந்த வடகரை கிராமத்தில் பிறந்தவர். ஆங்கில இலக்கியத்தில் முதுகலை பெற்ற மு. ராஜேந்திரன், தமிழ் இலக்கியத்திலும் தமிழக வரலாற்றின்மீதும் தீராத ஆர்வம் கொண்டவர். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் சட்ட மேற்படிப்பும் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் திருக்குறளில் சட்டக்கூறுகள் குறித்து ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றார்.
தமிழக வரலாற்றுகால செப்பேடுகளை ஆய்வு செய்தல், ஆனந்தரங்கம் பிள்ளை நாட்குறிப்புகளின் பிரதிகளை தேடியெடுத்து தொகுத்தல் போன்ற பணிகளில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார்
.
நேரடியாக களப்பணியாற்றி தொகுத்த வரலாற்றின் உண்மைத் தகவல்களை ஆவண புத்தகங்களாகவும் வெளியிட்டார். அதனையொட்டி எழுந்த விடுபட்ட வரலாற்று சொல்லாடல்களை தனது புனைவில் புகுத்தி நாவல்களாகவும் எழுதி வந்தார்.
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில்
சட்ட மேற்படிப்பும்
தஞ்சை தமிழ்ப்
பல்கலைக்கழகத்தில் திருக்குறளில்
சட்டக்கூறுகள் குறித்து
ஆய்வு செய்து
முனைவர் பட்டம்
பெற்றார்.
இந்திய ஆட்சிப்பணியில் பொறுப்பேற்று
தமிழகத்தின் பலவிதமான
துறைகளில் பணியாற்றியானார்.
திருவண்ணாமலை மாவட்ட
ஆட்சியராக பதவி
வகித்தபோது அப்பகுதியில்
இயற்கை வளம்
சார்ந்த மலைப்
பகுதிகளை கனிம
வளக் கொள்ளையர்களிடம்
பறிபோவதைத் தடுத்துநிறுத்திய
பெருமை இவருக்குண்டு.
மேலும், ஜவ்வாது மலைவாழ் மக்களுக்கு
கரடுமுரடான பாதைகளை
செப்பனிட்டு சாலைகள்
அமைத்துக் கொடுத்துள்ளதாக
தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதே காலகட்டங்களில் தனது
தணியாத ஆர்வமான
வரலாற்றின்மீது தணியாத
ஆர்வம் கொண்டு
நேரில் களப்பணிகளில்
ஈடுபட்டார். தமிழக வரலாற்றுகால செப்பேடுகளை
ஆய்வு செய்தல்,
ஆனந்தரங்கம் பிள்ளை
நாட்குறிப்புகளின் பிரதிகளை
தேடியெடுத்து தொகுத்தல்
போன்ற பணிகளில்
தன்னை ஈடுபடுத்திக்கொண்டார்.
நேரடியாக களப்பணியாற்றி
தொகுத்த வரலாற்றின்
உண்மைத் தகவல்களை
ஆவண புத்தகங்களாகவும்
வெளியிட்டார். அதனையொட்டி எழுந்த
விடுபட்ட வரலாற்று
சொல்லாடல்களை தனது
புனைவில் புகுத்தி
நாவல்களாகவும் எழுதி
வந்தார். 1801, வடகரை ஒரு வம்சத்தின்
வரலாறு, 'காலாபாணி' போன்ற நாவல்கள் அவரது
ஆராய்ச்சியில் கிடைத்த
நல்முத்துக்கள் எனலாம்
சாகித்ய அகாடமி விருது
பெறும் ‘காலா பாணி’ நாவல்,
இந்திய சுதந்திரப்
போராட்டத்தை மையப்படுத்தி
எழுதப்பட்டுள்ளது. இந்திய சுதந்திர போராட்ட
வரலாறு சிப்பாய்
கலகத்துடன் தொடங்கவில்லை.
அதற்கு முன்னரே
தமிழகத்தில் தொடங்கப்பட்டுவிட்டது. எனவே, ஆங்கிலேயர்களுக்கு எதிராக
நடந்த இந்திய
விடுதலை வரலாற்றை
தமிழகத்தில் விடுபட்ட
தியாகச் சுடர்களை
பேசியபிறகே அதற்கு
பின்வந்த மற்ற
விடுதலை வீரர்களை
பேசவேண்டும் என்பதுதான்
காலாபாணி நாவல்
முன்வைக்கும் வாதமாகும்.
எனவே, இந்நாவலின் செய்தி,
தேசிய அளவில்
கவனிக்கப்பட வேண்டிய
ஒரு செய்தியாக
மிளிர வேண்டியதும்,
அதற்கு விருது
கிடைத்திருப்பதும் மிகவும்
பொருத்தமானதுதான். இந்நாவல் அகநி
பதிப்பக வெளியீடாக
கிடைக்கிறது.
.
1801ஆம் ஆண்டு 6 மாதங்கள் நடைபெற்ற காளையார் கோவில் போரை முன் வைத்து எழுதப்பட்ட நாவல் இதுவாகும். காலா பாணி நாவலில் அன்றைய கால தமிழர்களின் வாழ்க்கை, சூழல், ஆங்கிலேயர்களின் நடவடிக்கைகள் குறித்து நாவலில் இடம்பெற்றுள்ளது.
இவரது படைப்புகளுக்காக தமிழகத்தில் வழங்கப்பட்டு வரும் பல்வேறு அறக்கட்டளைகள் இவருக்கு விருதுகள் பல வழங்கி கவுரவித்துள்ளன. இவர் டான்சீறி சோமா விருது, புதுமைப்பித்தன் படைப்பிலக்கிய விருது உள்ளிட்ட விருதுகளை பெற்றுள்ளார்.
இந்திய ஆட்சிப்பணியில் பொறுப்பேற்று தமிழகத்தின் பலவிதமான துறைகளில் பணியாற்றியானார். தமிழ்நாடு கூட்டுறவு சங்க தேர்தல் ஆணையராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் ராஜேந்திரன்.
தனக்கு விருது கிடைத்தது பற்றி தனியார் செய்தி ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள மு. ராஜேந்திரன், இந்த நாவல் கொரோனா காலக்கட்டத்தில் சிவகங்கையில் வெளியானது. காலா பாணி நூலுக்கு வரவேற்பு இருக்கும் என்றே நான் எதிர்பார்த்தேன். இதற்கு சரியான அங்கீகாரம் கிடைக்கும் என்று எதிர்பார்த்தேன்.
இந்த நாவலில் அதிகம் அறியப்படாத ஜெகநாதன் ஐயர், மனக்காடு சாமி, மருதுபாண்டியர் மகன் 15 வயது சிறுவன் துரைசாமி ஆகியோரை குறித்து எழுதியது சந்தோசமாக இருந்தது என்று கூறினார். இளைஞர்கள் வரலாற்று புத்தகங்களை விரும்பி படிக்கின்றனர். குறிப்பாக நமது வரலாற்றை தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறார்கள் என்றும் மு. ராஜேந்திரன் கூறியுள்ளார்.
இலக்கியப் பணிகள்
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பழமையான கோயில்களில் இருந்த 1500 கல்வெட்டுகளை பணியெடுக்கும் பணியை துவக்கி வைத்த பெருமை இவருக்கு உரியதாகும். வரலாற்றுச் செப்பேடுகள் சொல்லும் செய்திகளை அனைத்து நிலை வாசகர்களும் புரிந்துகொள்ளும் வகையில் எளிய மொழி நடையில் தொடர்ந்து எழுதிவருகிறார். சோழர் காலச் செப்பேடுகள், பாண்டியர் காலச் செப்பேடுகள், சேரர் காலச் செப்பேடுகள், பல்லவர் காலச் செப்பேடுகள் முதலியவை தொடர்பான இவருடைய நூல்கள் தமிழ் மொழியில் முன்னெடுக்கப்பட்ட புதிய முயற்சிகளாக அமைந்தவையாகும்.
அறுநூறு ஆண்டுகளுக்கு முந்தைய இவருடைய மூதாதையரின் கதையில் இருந்து தொடங்கி, மூன்று தலைமுறையின் தொடர் வாழ்வினை ‘வடகரை ஒரு வம்சத்தின் வரலாறு’ என்ற தன் வரலாற்று நூலாக எழுதியுள்ளார். 2018 ஆம் ஆண்டு சாகித்திய அகாதெமியின் விருதுக்கான தேர்வில் இறுதிப் பட்டியலில் இந்நாவல் இடம்பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
1801ஆம் ஆண்டு தென் தமிழகத்தில் நடந்த காளையார் கோயில் போரை மையமாக வைத்து,1801 என்ற வரலாற்று நாவலை எழுதியுள்ளார். 2018, 2019 ஆகிய இரண்டு ஆண்டுகளும் சாகித்திய அகாதெமியின் விருதுக்கான தேர்வு இறுதிப் பட்டியலில் இந்நாவல் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் ஐரோப்பிய ஆட்சியில் முதன்முதலில் மன்னர்களை நாடு கடத்துதல், காளையார் கோயில் போரில்தான் தொடங்கியது. அப்போது சிவகங்கையின் அரசராக இருந்த வேங்கை பெரிய உடையணத் தேவரையும் அவருடன் போராளிகள் 71 பேரையும், தங்களின் வெற்றிக்குப் பிறகு பினாங்குக்கு நாடு கடத்தினார்கள். தமிழகத்தின் மிக முக்கியமான இப்போராட்டத்தினை மையமாகக் கொண்டு ‘காலா பாணி’ என்ற நாவலை இவர் எழுதியுள்ளார். 1857 சிப்பாய்க் கலகத்திலிருந்து தொடங்கும் இந்திய சுதந்திரப் போராட்ட இயக்கத்தின் வரலாறு தென் தமிழகத்தில் ஆங்கிலேயர்களுக்கு எதிராக நடந்த 1801 போர்களிலிருந்தே தொடங்கவேண்டும் என்பதற்கான ஆதாரங்களைக் கொண்டிருப்பதால் காலா பாணி நூல் தேசிய அளவில் கவனத்தை ஈர்க்கும் நூலாக உள்ளது.
எழுதிய நூல்கள்
நாவல்
1. காலா பாணி
2. 1801
3. வடகரை ஒரு வம்சத்தின் வரலாறு
சிறுகதை]
1. பாதாளி
கட்டுரை
1. வெயில் தேசத்தில் வெள்ளையர்கள்
2. கம்பலை முதல் (கவிஞர் அ.வெண்ணிலாவுடன் இணைந்து)
பயண நூல்
1. யானைகளின் கடைசி தேசம்
பணி அனுபவம்
1. செயலே சிறந்த சொல்
செப்பேடுகள்
1. பல்லவர் காலச் செப்பேடுகள்
2. சேரர் காலச் செப்பேடுகள்
3. பாண்டியர் காலச் செப்பேடுகள்
4. சோழர் காலச் செப்பேடுகள்
ஆய்வு நூல்
1. சட்ட வல்லுநர் திருவள்ளுவர்
பதிப்பித்த நூல்
1. ஆனந்தரங்கப்பிள்ளை தினப்படிசேதிக்குறிப்பு 12 தொகுதிகள் (கவிஞர் அ.வெண்ணிலாவுடன் இணைந்து)
தொகுத்த நூல்கள்
1. வந்தவாசிப் போர் - 250
(கவிஞர் அ. வெண்ணிலாவுடன் இணைந்து)
2. திருவண்ணாமலை
3. மகாமகம்
4. காவிரி தந்த கலைச் செல்வம்
மொழி பெயர்ப்பு
1. இந்திய பழங்குடிகளின் வாழ்க்கை (ஆங்கிலத்திலிருந்து)
இலக்கியப் பணி விருதுகள்
1801 – நூலுக்காக
1. மலேசியா கூட்டுறவு நிலநிதி கூட்டுறவுச் சங்கம் வழங்கும் டான்ஸ்ரீ சோமா விருது. விருதுத் தொகை பத்தாயிரம் அமெரிக்க டாலர்(ரூ 7 லட்சம்
2. கவிதை உறவு - முதல் பரிசு
3. கவிமுகில் அறக்கட்டளை பரிசு
4. தமிழ்நூல் வெளியீடு மற்றும் தமிழ்நூல் விற்பனை மேம்பாட்டுக் கழகத்தின் சிறந்த நாவலுக்கான விருது
வடகரை ஒரு வம்சத்தின் வரலாறு நூலுக்காக
1. எசு.ஆர்.எம் பல்கலைக்கழகம் வழங்கும் புதுமைப்பித்தன் படைப்பிலக்கிய விருது. பரிசுத் தொகை ரூ.
1,50,000
2. கோவை மா.பொ.சி. சிலம்புச் செல்வர் இலக்கிய விருது
பாண்டியர் காலச் செப்பேடுகள் நூலுக்காக
1. தமிழக அரசின் சிறந்த நூல் பரிசு
சோழர் காலச் செப்பேடுகள் நூலுக்காக
1. கலை மேம்பாட்டு உலகப் பேரவை (நாகர்கோவில்) வழங்கிய தினமலர் இராமசுப்பையர் வரலாற்று நூல் விருது
2. கவிதை உறவு சிறந்த வரலாற்று நூல் விருது.
3. கம்பம் பாரதித் தமிழ்ச் சங்க விருது
சமூகப் பணிகள்
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியராக இருந்த நேரத்தில் கவுத்தி-வேடியப்பன் மலைகளைத் தனியாருக்கு 99 ஆண்டுகள் குத்தகை விட இருந்த நிகழ்வை மக்களிடம் கருத்துக் கேட்டறிந்து, அவர்கள் சக்தியுடன் தடுத்து நிறுத்தினார்.
·
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள மலைகளின் பசுமையை பாதுகாக்கவும், பராமரிக்கவும் 10 இலட்சம் விதைகளை திருகிறக்கை வானூர்தி மூலம் தூவினார்.
·
போக்குவரத்திற்கு வசதியில்லாமலிருந்த சவ்வாது மலையின் 55
கிலோமீட்டர் மலைப்பாதையை சீரமைத்து போக்குவரத்திற்கு உகந்த பாதையாக மாற்றிக் கொடுத்தார்.
சமூகப்பணி விருதுகள்
தமிழகத்தின் மிக அதிகமான உணவு உற்பத்தி 110 லட்சம் மெட்ரிக் டன் என்ற சாதனைக்காக 2 கோடி ரூபாய் கிரிஷி கர்மான் விருது மாண்புமிகு பாரத பிரதமர் நரேந்திர மோடியிடம் 19, பிப்ரவரி 2015 அன்று பெற்றார்.
1. தமிழகத்தின் மிக அதிகமான உணவு உற்பத்தி 121 லட்சம் மெட்ரிக் டன் என்ற சாதனைக்காக 2 கோடி ரூபாய் கிரிஷி கர்மான் விருது (2013-2014) மாண்புமிகு பாரத பிரதமர் நரேந்திர மோடியிடம் பெற்றார்.
2. தமிழகத்தின் மிக அதிகமான உணவு உற்பத்தி 137 லட்சம் மெட்ரிக் டன் என்ற சாதனைக்காக 2015 -2016 ஆம் ஆண்டிற்கான ரூ.5 கோடி பணப் பரிசுடன் கிருஷி கர்மான் விருதினைப் பெற்றார்.
3. மக்கள் தொகை கணக்கெடுப்பில் சிறப்பாகப் பணிபுரிந்தமைக்காக 2011-ஆம் ஆண்டிற்கான இந்திய குடியரசுத் தலைவரிடம் வெள்ளிப் பதக்கம் பெற்றார்.
4. திருவண்ணாமலை ஆட்சியராக இருந்தபோது 2010-ஆம் ஆண்டு 100 நாள் வேலைத் திட்டத்தினை சிறப்பாக நடைமுறைப் படுத்தியதற்காக இந்தியாவில் உள்ள 650 மாவட்டங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பத்து மாவட்டங்களில் ஒரு மாவட்டம் திருவண்ணாமலை மாவட்டமாகும். இச்சிறப்பிற்காக வழங்கப்பட்ட விருதை மாண்புமிகு பாரதப் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் மற்றும் ஐக்கிய முற்போக்கு கூட்டணித் தலைவர் திருமதி சோனியா காந்தி ஆகியோரிடம் இருந்து பெற்றார்.
5. மின் ஆளுமையை (e-governance) விவசாயத் துறையில் சிறப்பாக பயன்படுத்தியதற்காக தங்க விருதும் ரூ.2 லட்சம் ரொக்கம் பரிசும் துறையின் மற்ற 5 அலுவலர்களோடு சேர்ந்து பெற்றார்.
6. 2001 - ஆம் ஆண்டு கள்ளக்குறிச்சி சர்க்கரை ஆலை தனி அலுவலராக இருந்தபோது தொழில் நுட்பத் திறமைக்காக இந்திய அளவில் முதல் பரிசும், கரும்பு உற்பத்தியில் இந்திய அளவில் இரண்டாம் பரிசும் பெற்றார்.
வகிக்கும் பதவிகள்
1. தலைவர்- தமிழக - கேரள கண்ணகி கோயில் கூட்டமைப்பு
2. தலைவர் – மங்கலதேவி கண்ணகி அறக்கட்டளை, கம்பம்.
3. தேசியத் தலைவர் – இந்திய மற்றும் தமிழ்நாடு சிலம்பாட்டக் கழகம்
4. தலைவர் – தமிழ்நாடு ஒலிம்பிக் அல்லாத விளையாட்டுகள் சங்கம்.
வகித்த பதவிகள்
1. மேலாண்மை இயக்குனர், சேலம் சேகோசெர்வ்.
2. ஆணையர்- வேளாண்மைத் துறை, சென்னை.
3. ஆணையர்-பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை.
4. ஆணையர், ஒழுங்கு நடவடிக்கைகள், சென்னை
5. மாவட்ட ஆட்சித் தலைவர், திருவண்ணாமலை
6. உறுப்பினர் செயலர், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், சென்னை
7. இணை மேலாண்மை இயக்குநர், ஆவின்,
சென்னை
8. மாவட்ட வருவாய் அலுவலர், தேனி
9. தனி அலுவலர், (கோயில் நிலங்கள்) இந்து சமய அறநிலையத் துறை
10.
தனி அலுவலர், கள்ளக்குறிச்சி சர்க்கரை ஆலை
11.
தனி அலுவலர், தஞ்சாவூர் நகராட்சி
12.
மாவட்ட வழங்கல் அலுவலர், தஞ்சாவூர்
13.
வருவாய் கோட்ட ஆட்சியர், ராணிப்பேட்டை மற்றும் தஞ்சாவூர்
14.
கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளர் - திருவள்ளூர்
15.
மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் மூன்றாண்டுகள் வழக்கறிஞர் பணி
இவருக்கு
பீப்பிள் டுடே பத்திரிக்கை சார்பாக வாழ்த்துகள்
ருத்ரா
Comments