சிறப்பு வகுப்பு மாணவர்களுக்கு சுண்டல்
செங்கல்பட்டு மாவட்டதில் நாகல்கேணி
அரசு (ஆதிந) மேல்நிலைப்பள்ளி
முன்னாள் மாணவர்கள் சார்பாக சிறப்பு வகுப்பு மாணவர்களுக்கு சுண்டல்
குரோம்பேட்டை – டிச.7 செங்கல்பட்டு மாவட்டம் நாகல்கேணி அரசினர் ஆதிதிராவிடர் நலத்துறை மேல்நிலைப் பள்ளியின் தலைமையாசிரியர்(பொறுப்பு) வேண்டுதளுக்கிணங்க, நம் பள்ளி நம் வீடு முன்னாள் மாணவர்கள் சங்கமத்தின் சார்பாக முதல் கட்டமாக 30 கிலோ கொண்டை கடலை(சுண்டல்) வழங்கப்பட்டது.
10,11,மற்றும்12ஆம் வகுப்பில் 200க்கு மேற்பட்ட மாணவ மாணவிகளுக்கு *தினமும் மாலையில் சிறப்பு வகுப்புகள் நடைபெற்று வருவதால்* மாணவ, மாணவிகள் ஆற்றலுடனும் உற்சாகத்துடனும் கல்வி கற்க மாலை சிறப்பு வகுப்புக்கு பின் இந்த சிற்றுண்டி வழங்கப்படுகிறது.
இந்த நிகழ்வில் நம் பள்ளி நம் வீடு முன்னாள் மாணவர்கள் சங்கமத்தின் அங்கத்தினர்கள் அல்லாபகேஷ், விநாயகமூர்த்தி, பிரான்சிஸ் ராஜ் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் ராஜசேகர்,சீதாலட்சுமி,மணிமேகலை ஆகியோர் கலந்துக்கொண்டனர்.
Comments