பாடகர் எஸ். ஜி. கிட்டப்பா காலமான தினமின்று



🔥
பாடகர் எஸ். ஜி. கிட்டப்பா காலமான தினமின்று.😢
எஸ். ஜி. கிட்டப்பா ( S. G. Kittappa) என்று அழைக்கப்பட்ட செங்கோட்டை கங்காதரன் கிட்டப்பா சினிமா காலத்துக்கு முன்பே 1920களில் பிரபலமாயிருந்த ஒரு பாடகர் மற்றும் நாடகக் கலைஞர். இவர் சினிமா நடிகையும் பாடகியுமான கே. பி. சுந்தராம்பாளின் கணவர்.
கிட்டப்பா செங்கோட்டையில் பிறந்தவர். இயற்பெயர் ராமகிருஷ்ணன். அப்பொழுது செங்கோட்டை திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் கீழ் இருந்தது. இவரது தந்தையின் பெயர் கங்காதர அய்யர். தாயார் மீனாட்சி அம்மாள். இவருடன் பிறந்தோர் சுப்புலட்சுமி, சிவகாமி, அப்பாத்துரை, சுப்பையா, செல்லப்பா, சங்கரன், காசி, பிச்சம்மாள், நாராயணன் ஆகியோர். வீட்டிலுள்ளோர் செல்லமாக அழைத்த பெயர் கிட்டன். அதுவே கிட்டப்பா என்ற பெயராக நிலைத்து விட்டது.
குடும்பத்தின் வறுமையினால் இவருக்கு முறையான கல்வி கிடைக்கவில்லை. ஆனால் சங்கரதாஸ் சுவாமிகள் ஆதரவால் இசையிலும் நாடகக்கலையிலும் நல்ல தேர்ச்சி பெறமுடிந்தது. மிகச் சிறிய வயதிலேயே நாடகங்களில் நடித்து நல்ல பெயர் எடுத்தார். இவர் 5-ஆம் வயதில் முதன்முதல் மேடையேறினார். தனது 8-ஆவது வயதில் சிலோனில் நடைபெற்ற நாடகங்களில் நடித்தார். அங்கிருந்த இந்திய வர்த்தக அமைப்பு இவரது கலைத்திறமையைப் பாராட்டித் தங்கப் பதக்கமும் சான்றிதழும் வழங்கிப் பெருமைப் படுத்தியது.
பாடகியாக வளர்ந்து கொண்டிருந்த கே. பி. சுந்தராம்பாளுக்கும் இவருக்கும் 1927ல் திருமணம் நடந்தது. இவர்கள் திருமணம் காதல் திருமணமாகும். திருமணத்துக்குப் பின் இருவரும் சேர்ந்து நடித்த பல நாடகங்கள் அமோக வெற்றி பெற்றன.
ஓயாத உழைப்பே இவரது உடல் நலத்துக்குக் கேடாக அமைந்தது. திருவாரூரில் நடித்துக் கொண்டிருக்கும்போது மேடையிலேயே மயங்கி விழுந்து இவரது உயிர் பிரிந்தது.
1933ல் இவர் இறந்தபோது இவருக்கு வயது 28தான்
 From The Desk of கட்டிங் கண்ணாயா

Comments

Popular posts from this blog

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி