கடலுக்கு நடுவே மிகவும் அபாயகரமாக அமைந்துள்ள ஏர்போர்ட் எது தெரியுமா..
கடலுக்கு நடுவே மிகவும் அபாயகரமாக அமைந்துள்ள ஏர்போர்ட் எது தெரியுமா..
உலகிலேயே கடலுக்கு நடுவே மிகவும் அபாயகரமான முறையில் அமைந்துள்ள ஏர்போர்ட் எங்குள்ளது தெரியுமா.. அது வேறெங்கும் இல்லை. இந்தியாவில்தான்.. அகத்தி விமான நிலையம் - லட்சத் தீவுகள்- விமான ஓடுதளத்தை சுற்றிலும் கடல் இது தான் அகத்தி விமான தளத்தின் பிரம்மாண்டம். இந்தியாவின் லட்ச தீவுகளில் அமைந்துள்ளது அகத்தி விமான தளம். விமானத்தில் இருந்து பார்க்கும் போது ரன்வே கடலில் மிதப்பது போல காட்சி அளிக்கும் அனுபவம் மிகப் பெரிய அனுபவம். 1988 முதல் இந்த விமான தளம் செயல்பட்டு வருகிறது. டோர்னியர் 228 ரக விமானங்களை இயக்குவதற்காகவே விமான தளம் முதலில் உருவாக்கப்பட்டது.பின்னர் அருகிலுள்ள கல்பட்டி தீவையும் இணைத்து பாலத்தில் நெடிய விமான ஓடுபாதையை அமைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் சூழலியல் காரணங்களால் இந்த திட்டம் கைவிடப்பட்டது. உலகின் அபாயகரமான விமான ஓடுதளங்களில் இதுவும் ஒன்று.
Comments