மதுரை சண்முகவடிவு சுப்புலட்சுமி - நினைவு தினம் இன்று டிசம்பர் 11
மதுரை சண்முகவடிவு சுப்புலட்சுமி - நினைவு தினம் இன்று டிசம்பர் 11
எம்.எஸ்.சுப்புலட்சுமியின் முதல் எழுத்தாக உள்ளது நம் மதுரை. எம்.எஸ். சுப்புலட்சுமி தென்னிந்திய மொழிகள் தொடங்கி இந்திய மொழிகள் பலவற்றிலும் பாடல்களைப் பாடியுள்ளார். இந்தியாவின் மிக உயர்ந்த விருதான பாரத ரத்னா விருது பெற்றவர்.
1916 செப்டம்பர் 16இல் மதுரையில் பிறந்தவர் எம்.எஸ். சுப்புலட்சுமி. இவரது தாயார் சண்முகவடிவு வீணை மீட்டுவதில் ஆர்வம் கொண்டவர். சுப்புலட்சுமியின் பாட்டி ஒரு வயலின் கலைஞர். இசைக்குடும்பத்தில் பிறந்த சுப்புலட்சுமி இளம்வயதிலேயே பாடல்கள் பாடுவதில் சிறந்துவிளங்கினார். 1926ம் ஆண்டு வெளியிடப்பட்ட இசைத்தட்டில் எம்.எஸ்.சுப்புலட்சுமி பாடிய பாடல் அவரது தாயார் வீணை இசையோடு சேர்ந்து வெளிவந்தது.
சேவாசதனம், சகுந்தலை, சாவித்திரி, மீரா, மீராபாய் என ஐந்து திரைப்படங்களில் நடித்திருக்கிறார். மகாத்மா காந்தி தனக்குப் பிடித்தமான பாடலை எம்.எஸ்.சுப்புலட்சுமியிடம் பாடச் சொல்லிக் கேட்டிருக்கிறார். எம்.எஸ்.சுப்புலட்சுமி பிரதமர் ஜவகர்லால் நேருவிடம் பாராட்டு பெற்றவர்.
பிலிப்பைன்ஸ் நாட்டின் உயரிய விருதான மகசாசே விருது 1974ல் எம்.எஸ்.சுப்புலட்சுமிக்கு வழங்கப்பட்டது.
திருப்பதி பெருமாளுக்கு இவரது பாடல்தான் திருப்பள்ளியெழுச்சி. குறையொன்றுமில்லை, காற்றினிலே வரும் கீதம் இன்னும் ஊரெங்கும் ஒலித்துக்கொண்டேயிருக்கிறது. மதுரையில் பிறந்து உலகெங்கும் புகழ்பெற்ற எம்.எஸ்.சுப்புலட்சுமியின் நினைவுதினம் டிசம்பர் 11.2004
.
Comments