*ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் கொட்டும் மழையில் சடலங்களை கொண்டு செல்லும் ஊழியர்கள்
*ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் கொட்டும் மழையில் சடலங்களை கொண்டு செல்லும் ஊழியர்கள்: பேட்டரி வாகனம் வழங்க கோரிக்கை*
தண்டையார்பேட்டை: சென்னை ராயபுரம் ஸ்டான்லி அரசு மருத்துத்துவமனை, கடந்த 1964ம் ஆண்டு கட்டப்பட்டது. வடசென்னையில் மிகப்பெரிய மருத்துவமனையான இங்கு தினமும் உள்நோயாளிகளாக 2,000 பேரும், புறநோயாளிகளாக 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரும் சிகிச்சை பெறுகின்றனர். இந்த மருத்துவமனையில் இதயம், கல்லீரல், நரம்பியல், சிறுநீரகம், காது, மூக்கு, தொண்டை உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட துறைகள் உள்ளன. தமிழகம் மட்டுன்றி ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரி உள்ளிட்ட பிற மாநிலங்களில் இருந்தும், உயர் சிகிச்சை பெறுவதற்காக 1,000க்கும் மேற்பட்டோர் இங்கு வந்து செல்கின்றனர்.
இந்த மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறப்பவர்கள் மற்றும் வெளியில் இருந்து கொண்டு வரப்படும் விபத்து, தற்கொலை, கொலை உள்ளிட்ட சம்பவங்களில் இறந்தவர்களின் சடலங்கள், அங்குள்ள பிரேத பரிசோதனை கூடத்திற்கு அனுப்பி வைக்கப்படுவது வழக்கம். மருத்துவமனையில் இருந்து இந்த பிரேத பரிசோதனை கூடம் 200 மீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது. இங்கு சடலங்களை ஸ்டெச்சரில் வைத்து மருத்துவமனை ஊழியர்கள் கொண்டு செல்கின்றனர். இவ்வாறு மருத்துவமனையில் இருந்து பிரேத பரிசோதனை கூடத்திற்கு செல்லும் பாதையில் மேற்கூரை இல்லாமல் திறந்த வெளியாக உள்ளதால், மழைக்காலங்களில் சடலங்களை நனைந்தபடி கொண்டு செல்லும் நிலை உள்ளது.
மருத்துவமனை பணியாளர்கள் மற்றும் சடலங்களின் உறவினர்களும் நனைந்தபடி செல்கின்றனர். எனவே, பிரேத பரிசோதனை கூடத்திற்கு செல்லும் பாதையில் மேற்கூரை அமைக்க வேண்டும் அல்லது சடலங்களை கொண்டு செல்ல பேட்டரி வாகன வசதி ஏற்படுத்தி தர வேண்டும், என மருத்துவமனை பணியாளர்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை.
இந்நிலையில், வியாசர்பாடி சர்மா நகரை சேர்ந்த ராபர்ட் கென்னடி என்பவர் இந்த மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்ல உத்தரவிடப்பட்டது. அப்போது, மழை பெய்து கொண்டிருந்ததால், இறந்தவரின் உறவினர்கள் பேட்டரி வாகனம் அல்லது சிறிய ஆம்புலன்ஸ் மூலம் உடலை பிரேத பரிசோதனை அறை வரை எடுத்துச் செல்லும்படி கேட்டனர்.
ஆனால், மருத்துவமனை நிர்வாகம் அதற்கு அனுமதிக்காததால், கொட்டும் மழையில் உடலை உறவினர்கள் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் ஸ்டெச்சரில் வைத்து தள்ளிக் கொண்டு சென்றனர். ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் இறந்தவர்களின் உடல்களை பிரேத பரிசோதனை கூடத்திற்கு எடுத்துச் செல்வதற்காக தனியாக பேட்டரி வாகனங்கள் இயக்கப்படுகிறது.
அதேபோல் இங்கும் பேட்டரி வாகன வசதி ஏற்படுத்தி தர வேண்டும் அல்லது இங்கு தனியார் தொண்டு நிறுவனம் கொடுத்துள்ள ஆம்புலன்ஸ் பயன்பாடின்றி உள்ளதால், அதன் மூலம் சடலங்களை பிரேத பரிசோதனை அறைக்கு கொண்டு செல்ல அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்....
[26/12, 6:41 am] +91 99407 62319: *வரத்து அதிகரிப்பு, தொடர் மழை காரணமாக கோயம்பேட்டில் காய்கறிகள் விலை சரிவு*
சென்னை: சென்னையில் நேற்று முன்தினம் இரவு முதல் தொடர்ந்து கனமழை பெய்தது. மேலும், வரத்து அதிகரிப்பு காரணமாக, கோயம்பேட்டில் காய்கறிகளின் விலை சரிந்துள்ளது. கோயம்பேடு மார்க்கெட்டுக்கு நேற்று காலை சுமார் 600 வாகனங்களில் 6,200 டன் காய்கறிகள் வந்தன. இந்நிலையில்,சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு முதல் தொடர்ந்து கனமழை பெய்தது.
இதன் காரணமாக ஒரு கிலோ நாட்டு தக்காளி ரூ.40ல் இருந்து ரூ.20க்கும், நவீன் தக்காளி ரூ.30 லிருந்துரூ.13 க்கும், கேரட் ரூ.40 லிருந்து ரூ.10க்கும், கோஸ் ரூ.20 லிருந்து ரூ.5க்கும், பச்சை பட்டாணி ரூ.120 லிருந்து ரூ.25க்கும், சவ்சவ் மற்றும் முள்ளங்கி ரூ.20 லிருந்து ரூ.10க்கும், வெண்டைரூ.45 லிருந்து ரூ.25க்கும் கத்திரிக்காய் ரூ.30 லிருந்து ரூ.15க்கும், பீட்ரூட் ரூ.30 லிருந்து ரூ.15க்கும், எலுமிச்சம் பழம் ரூ.90 லிருந்து ரூ.30க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இதுகுறித்து, கோயம்பேடு மார்க்கெட் சிறு மற்றும் மொத்த வியாபாரிகள் சங்க தலைவர் எஸ்எஸ். முத்துகுமார் கூறுகையில், ‘‘சென்னையில் நேற்று முன்தினம் இரவு முதல் தொடர்ந்து மழை பெய்தது. இதனால் நேற்று காய்கறிகள் வாங்க சென்னை மற்றும் புறநகர் வியாபாரிகள் வரவில்லை. காய்கறிகள் விலை குறைந்ததால் சில்லரை வியாபாரிகள், இல்லத்தரசிகள் மகிழ்ச்சியுடன் வாங்கி சென்றனர். இவ்விலை சரிவால், கோயம்பேடு வியாபாரிகள் வேதனை அடைந்துள்ளனர்.’’ என்றார்....
[26/12, 6:41 am] +91 99407 62319: *கொரோனா பாதிப்பு விவரங்களை வெளியிடுவதை நிறுத்தியது சீனா*
கொரோனா பாதிப்பு விவரங்களை வெளியிடுவதை சீனா நிறுத்தி உள்ளது.
பீஜீங்,
சீனாவில் கடந்த 3 ஆண்டுகளாக கடைப்பிடிக்கப்பட்டு வந்த கடுமையான கொரோனா கட்டுப்பாடுகள் ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து அங்கு தொற்று பரவல் வேகமெடுத்தது. அந்த நாட்டில் உருமாறிய புதுவகை கொரோனாவான பிஎப்.7 பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.
ஆனால் சீனாவில் தினமும் எத்தனை பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்படுகிறது, எத்தனை பேர் கொரோனாவால் இறக்கிறார்கள் என்பது குறித்த உண்மையான தகவல்களை அரசு வெளியிடுவதில்லை என பரவலாக குற்றம் சாட்டப்படுகிறது.
இந்த சூழலில் சீனாவில் தினமும் ஏறத்தாழ 10 லட்சம் பேர் கொரோனா பாதிப்புக்கு ஆளாகிறார்கள், 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தினமும் சாகிறார்கள் என்று லண்டனைச் சேர்ந்த சுகாதார தரவு நிறுவனம் 'ஏர்பினிட்டி' கடந்த சில நாட்களுக்கு முன்பு அதிர்ச்சி தகவலை வெளியிட்டது. இதுபற்றி சீன அரசு எந்த விளக்கமும் அளிக்கவில்லை.
இந்த நிலையில் சீனாவில் இதுவரை தினசரி கொரோனா பாதிப்பு விவரங்களை வெளியிட்டு வந்த அந்நாட்டின் தேசிய சுகாதார மையம் இனி கொரோனா பாதிப்பு விவரங்களை வெளியிட மாட்டோம் என நேற்று அறிவித்தது.
அதே வேளையில் கொரோனா பாதிப்பு விவரங்கள் இனி சீன நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தால் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாற்றத்திற்கான காரணங்களை சீன அரசு குறிப்பிடவில்லை
[26/12, 6:41 am] +91 99407 62319: *குறைந்த போட்டிகளில் 3 ஆயிரம் ரன்கள்… கபில்தேவ் சாதனையை முறியடித்த அஷ்வின்…*
India
கபில்தேவ் - அஷ்வின்
கபில்தேவ் - அஷ்வின்
டெஸ்ட் போட்டியில் 3 ஆயிரம் ரன்களை கடந்ததன் மூலம் கபில்தேவின் சாதனையை ஆல்ரவுண்டர் ரவிச்சந்திரன் அஷ்வின் முறியடித்துள்ளார்.
வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய கிரிக்கெட் அணி ஒரு நாள் கிரிக்கெட் தொடரை 2 க்கு 1 என்ற கணக்கில் இழந்திருந்தது. இதையடுத்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடைபெற்றது.
முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா வெற்றி பெற்ற நிலையில், இரண்டாவது போட்டி கடந்த 22ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. முதல் இன்னிங்சில் வங்கதேச அணி 227 ரன்களும் இந்தியா 314 ரன்கள் எடுத்திருந்தது. இரண்டாவது இன்னிங்சில் வங்கதேசம் 231 ரன்களை எடுத்தது.
இதையடுத்து 145 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன், இந்திய அணி களத்தில் இறங்கியது. இருப்பினும் அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரிந்ததால் டெஸ்ட் போட்டி மிகவும் பரபரப்பாக மாறியது. ஒரு கட்டத்தில் இந்திய அணி 7 விக்கெட்டுகளை இழந்து 74 ரன்கள் மட்டுமே எடுத்து தடுமாறிக் கொண்டிருந்தது.
இறுதியில் அஸ்வின் 42 ரன்களுடனும், ஷ்ரேயாஸ் 29 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்து அணியை வெற்றி பெற வைத்தனர். இந்த டெஸ்டில் ஆட்டநாயகன் விருது அஷ்வினுக்கு அளிக்கப்பட்டது.
அவர்6 விக்கெட்டுகளை கைப்பற்றியதுடன், மொத்தம் 54 ரன்களை எடுத்தார். இதன் மூலம் 88 சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் 400 விக்கெட்டுகள் மற்றும் 3 ஆயிரம் ரன்களை எடுத்து சாதனை படைத்துள்ளார். முன்னதாக இதே சாதனையை கபில்தேவ் 131 போட்டிகளில் பங்கேற்று இதே சாதனையை ஏற்படுத்தியிருந்தார். இதனை தற்போது அஷ்வின் முறியடித்திருக்கிறார்.
வங்கதேசத்திற்கு எதிரான 2 டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்றிருப்பதன் மூலம், டெஸ்ட் சாம்பியன்ஷிப்பிற்கான பாயின்ட்ஸ் டேபிளில், 2ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
அடுத்ததாக இந்தியா – ஆஸ்திரேலியா பங்கேற்கும் 4 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடர் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்குகிறது.
[26/12, 6:41 am] +91 99407 62319: *வழக்கறிஞரான தூய்மை பணியாளரின் மகள்... பிரமாண்ட வரவேற்பளித்த மதுரை மக்கள்..*
வழக்கறிஞரான தூய்மை பணியாளரின் மகள்
மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே உள்ள மேல வாசல் பகுதியில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளன.
இந்த குடியிருப்புகளில் மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் பணியாற்றக்கூடிய தூய்மை பணியாளர்கள் அதிக அளவு வசித்து வருகின்றனர். மேலும், மதுரையில் உள்ள அனைத்து வார்டுகளிலும் இப்பகுதி மக்கள் தூய்மை பணி செய்து வருகின்றனர்.
இந்நிலையில், அந்த குடியிருப்பு பகுதியில் வசித்து வருபவர் ஆறுமுகம் மற்றும் சுந்தரி. இவர்களது மகள் துர்கா சட்டப்படிப்பு முடித்தார். பின்னர் சென்னையில் உள்ள பார் கவுன்சிலில் பதிவு செய்தார். இதனைத்தொடர்ந்து அவரது சொந்த ஊரான மதுரைக்கு வழக்கறிஞர் உடையில் இன்று காலை சென்னையில் இருந்து மதுரை ரயில் நிலையத்திற்கு வந்தார்.
அப்போது அவரது உறவினர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் பெண் வழக்கறிஞர் துர்காவிற்கு மாலை அணிவித்து குதிரை மீது அமர வைத்து மேளதாளத்துடன் ஊர்வலமாக ரயில் நிலையத்திலிருந்து மேலவாசல் குடியிருப்பு பகுதிக்கு அழைத்துச் சென்றனர். இதனை கண்டு அங்கிருந்த பொதுமக்கள் நெகிழ்ந்தனர்.
Comments