நாகல்கேணியில் 200 வருட பாரம்பரியம்மிக்க 6வது தலைமுறை சொந்தங்கள் சந்திப்பு விழா

 


செங்கல்பட்டு மாவட்டம்

நாகல்கேணியில் 200 வருட பாரம்பரியம்மிக்க 6வது தலைமுறை

சொந்தங்கள் சந்திப்பு விழா


பல்லாவரம் டிச.19. செங்கல்பட்டு மாவட்டம் குரோம்பேட்டை அடுத்துள்ள நாகல்கேணி பகுதியில் சுமார் 200 ஆண்டுகளாக 6வது  தலைமுறையாக வாழ்ந்து கொண்டிருக்கின்ற சொந்தங்கள் ஒன்று கூடி பிரமாண்ட விழா நேற்று (18.12.2022) காலை 10 முதல் மதியம் 2 மணிவரை நாகல்கேணி திருநீர்மலை சாலையில் உள்ள அசின் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

நாகல்கேணி அங்காளம்மன் தெருவின் இரத்த சொந்தங்கள் ஆசிரியர் L.கிருஷ்ணன், M.ருக்குமங்காதன் ADMK, C.கண்ணாயிரம் Ex.MC, மு.சிகாமணிEx.MC, A.ஜெகநாதன்.A.A Transport  ஆகிய தலைமுறையினரை கொண்ட 400 க்கு மேற்பட்ட சொந்தங்கள் ஒன்றுகூடி ஒருவருக்கு ஒருவர் தங்களின் பாசங்களை பரிமாறிக்கொண்டனர்.

தற்போது இந்த சொந்தங்கள் பல்லாவரம், நாகல்கேணி, மற்றும் பம்மல் பகுதிகளில் வசித்து வருகின்றனர். இந்த விழாவில் சொந்தங்கள் அனைவரும் மேடையேறி தங்களை அறிமுகம் செய்துக்கொண்டனர்கள். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை தங்களின் அன்புகளை பகிர்ந்துக்கொண்டு நெகிழ்ந்தனர்.

இந்த அற்புதமான விழாவை கண்ட அப்பகுதி மக்கள் ஆச்சிரியத்தில் ஆழ்ந்தனர்



.

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி