சாதனை எழுத்தாளர் ஆரூர்தாஸ்



🔥
சாதனை எழுத்தாளர் ஆரூர்தாஸ் காலமானார்🥲
திருவாரூர் மாவட்டத்தில் பிறந்த ஆரூர்தாஸ் .
முன்னணி நடிகர், நடிகைகள் என பலர் நடித்த சுமார் 1,000 திரைப்படங்களின் உரையாடலில் அழுத்தமான பங்கு வகித்தவர் ஆவார். தான் பிறந்த ஊரான திருவாரூர் பெயரையும், தன் பெயரில் உள்ள ஏசுதாஸில் உள்ள பிற்பாதியை இணைத்து ஆரூர்தாஸ் என பெயர் வைத்துக் கொண்டார்.
சுமார் 60 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ்த் திரையுலகில் நெடியப் பணிப்புரிந்த அனுபவம் ஒரு சாதனையாகும்.
விதி என்ற படத்தினால் மிகப்பெரிய பெயர் கிட்டியது.
தினத்தந்தியில் , சுமார் 50 ஆண்டுகளுக்கு உரிய தமிழ் சினிமா நிகழ்வுகளை தொடராக விறுவிறுப்பாக எழுதியுள்ளார்.
யார் மனதும் நோகாமல் , உண்மையிலிருந்தும் விலகாமல் எழுதிய பண்பாளர்.
கொஞ்சம் விரிவான ரிப்போர்ட் From கட்டிங் கண்ணையா
தமிழ்த் திரையுலகை வசனங்களால் ஆட்சி புரிந்தவர்கள் வெகுசிலரே. அவர்களில் தன்னுடைய தனித்தமிழ் வசனங்களால் தமிழ்த் திரையுலகையே புரட்டிப்போட்டு, தனக்கென ஓரிடத்தைப் பிடித்தவர் மு.கருணாநிதி. மிக முக்கியமாக, 1952-ம் ஆண்டு தீபாவளிக்கு வெளியான `பராசக்தி' திரைப்படத்தின் வசனம், உலக அளவில் தமிழர்களிடையே ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது. தமிழகம் எங்கும் பட்டாசாகப் பற்றிக்கொண்ட அந்த வசனங்களின் தாக்கத்தால் இளைஞர் பட்டாளமே தங்களின் பார்வையைக் கூர்தீட்டிக் கொண்டது. அதைத் தொடர்ந்து, ஏராளமான இளைஞர்கள் கருணாநிதி பாணியில் பயணிக்க ஆரம்பித்தனர். அவர்களில் ஒருவர் ஜேசுதாஸ். கருணாநிதி படித்த அதே திருவாரூர் பள்ளியின் மாணவரான ஜேசுதாஸ், மு.கருணாநிதியைத் திரைத்துறையில் தன் மானசீக குரு, துரோணாச்சாரியாராக வரித்துக்கொண்டு, ஏகலைவன்போல் அவரைப் பின்பற்றி, திரைப்படங்களுக்குக் கதை, வசனம் எழுத ஆரம்பித்துப் பெரும்புகழ்பெற்றார். அவர் வேறு யாருமல்ல, சிறந்த கதை, வசனகர்த்தாவாக தமிழ்த் திரையுலகில் வெகுகாலம் கோலோச்சிய கலைவித்தகர் ஆரூர்தாஸ்தான்!
நாகப்பட்டினத்தில், 1931-ல் எஸ்.ஏ.சந்தியாகு நாடார் -ஆரோக்கியமேரி அம்மாள் தம்பதிக்குப் பிறந்தவர் ஆரூர்தாஸ். முதன்முதலில் 1955-ல் தமிழாக்கப் படமான `மகுடம் காத்த மங்கை’க்கு வசனம் எழுதினார். பின்னர் சாண்டோ சின்னப்பா தேவரிடம் சேர்ந்து கதை-வசனம் எழுதிய முதல் தமிழ்ப்படம் ஜெமினி கணேசன் நடித்த `வாழவைத்த தெய்வம்’. தமிழ்த் திரையுலகில் இரு துருவங்களாக விளங்கிய எம்.ஜி.ஆர்., சிவாஜி கணேசன் இருவருடனும் நெருங்கிய நட்பு கொண்டு, இருவருக்குமே ஒரேநேரத்தில் பல படங்களுக்குக் கதை-வசனம் எழுதியவர் இவர்.
`பாசமலர்', `புதிய பறவை', `தாய் சொல்லைத் தட்டாதே', `பெற்றால்தான் பிள்ளையா', `விதி' என ஆரூர்தாஸின் கைவண்ணத்தில் ஜொலித்த திரைப்படங்கள் அநேகம். மொழிமாற்றுத் திரைப்படங்களுக்கும் கச்சிதமாக வசனம் எழுதுவதில் கைதேர்ந்தவர் இவர். 500 திரைப்படங்களுக்கும் மேல் கதை-வசனம் எழுதி, தேசிய அளவில் சாதனை படைத்துள்ளார். `பெண் என்றால் பெண்’ என்னும் படத்துக்குக் கதை-வசனம் எழுதியதோடு, அதை இயக்கியும் உள்ளார்.
1972-ல் `கலைமாமணி’ விருது, 1996-ல் அறிஞர் அண்ணா விருதான `கலைவித்தகர்’ விருது, 2005-ல் பாரதி கலைக்கூடம் வழங்கிய `சாதனை நாயகர்’ விருது, 2006-ல் ஆர்.எம்
A. Ravichander
S/o Shri. Arurdoss,
Madha Castle,
Flat No. A1, (1st floor),
20/35, Nathamuni Street,
T. Nagar,
Chennai 600017.
(Land mark: Near Murugan Idli, G.N. Chetty Road).
Mob. : 9094611333
Son : Arur Ravi.
Sisters : 3
(2 elders & 1 younger)
 From The Desk of கட்டிங் கண்ணையா!

Comments

Popular posts from this blog

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி