மலைக்க வைக்கும் முன்னூா் ஆடவல்லீசனின் திருப்பணிகள்!
மலைக்க வைக்கும் முன்னூா் ஆடவல்லீசனின் திருப்பணிகள்!
பிற்காலச் சோழ மன்னா்களில் சோழநாட்டின் இளவரசராக கி.பி. 1133 ஆம் ஆண்டு முடி சூட்டப்பட்டு இவனது தந்தை விக்கிரம சோழன் இறந்த பிறகு சோழ சக்ர வா்த்தியாக முடிசூட்டப் பெற்றவன் இரண்டாம் குலோத்துங்கன். கி.பி. 1150 ஆம் ஆண்டு வரை சோழ மன்னராகப் பதவி வகித்த இரண்டாம் குலோத் துங்க சோழன் மிகச் சிறந்த சிவ பக்தன்.
தில்லை நடராஜப் பெருமான் மீது அளவற்ற பக்தி கொண்ட இம் மாமன்னன் அக்கோயிலுக்குப் பல திருப்பணிகள் செய்துள்ளதை இம்மன்னரின் அரசவைப் புலவா் ஒட்டக்கூத்தா் பாடிய "குலோத்துங்க சோழன் உலா" "இராஜராஜ சோழன் உலா" மற்றும் "தக்கயாகப் பரணி" என்னும் நூல்களில் விளக்கிக் கூறப்பட்டுள்ளது.
"திருமாணிக்குழி" என்னும் ஊரில் எழுந்தருளியிருக்கும் வாமனபுரீஸ்வரா் திருக்கோயி லில் உள்ள ஒரு கல்வெட்டு தில்லைத் திருநகா் சிறப்புடைத்தாகத் திருமுடி சூடிய ஶ்ரீகுலோத்துங்க சோழ தேவா் என்று கூறுகின்றது. இந்தக் கல்வெட்டின் மூலம் இரண்டாம் குலோத்துங்க சோழன் சோழப் பேரரசராக முடிசூட்டிக் கொண்டதே தில்லைநகரில் தான் என்பதை அறிய முடிகின்றது.
தில்லைக் கூத்தபிரான் திருவடித்தாமரையிலுள்ள அருளாகிய தேனைப்பருகும் வண்டு போன்றவன் இரண்டாம் குலோத்துங்கன் என்பதைத் திருவாரூா் தியாகராஜா் திருத்தல த்திலுள்ள ஒரு கல்வெட்டு தொிவிக்கின்றது.
இதனால் சிவபாதசேகரன் என்று போற்றப்படும் மாமன்னா் முதலாம் இராஜராஜ சோழனைப் போல இரண்டாம் குலோத்துங்க சோழனும் சிவநெறிச் செல்வ னாக சிவபக்தியில் திளைத்துள் ளான் என்பதை அறிந்து கொள்ள முடிகின்றது.
அம்பலத்தில் ஆடும் ஆடவல்லான் மீது அளவற்ற பக்தி கொண்ட இம்மன்னன் இரண்டாம் குலோத்துங்க சோழனின் காலத்தில்தான் முன்னூா் தலத்தில் அருள்புரியும் ஶ்ரீஆடவல்லீஸ்வரப் பெருமானது திருக்கோயிலும் கற்றளியாகப் புனரமைக்கப்பட்டுள்ளது.
தில்லை நடராஜப் பெருமான் மீது அளவற்ற பக்தி கொண்டி ருந்த இரண்டாம் குலோத்துங்கன் தம்மால் கற்றளியாகப் புனரமைக் கப்பட்ட முன்னூர் திருத்தல ஈசனு க்கும் "ஶ்ரீஆடவல்ல நாயனாா்" என்றே திருநாமம் சூட்டியிருப் பதை இத்தலத்திலுள்ள கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன.
மேலும் முன்னூா் ஈசனுக்கு இம்மன்னரது கல்வெட்டுகளில் "திருமூலத்தான முடைய மகாதேவா்" என்ற திருநாமம் உள்ளதையும் அறிய முடிகின்றது.
வேத, இதிகாச, புராண காலத் திலிருந்தே விளங்குவதாகக் கருத ப்படும் இத்திருக்கோயிலின் ஈசன் ஶ்ரீஆடவல்லீஸ்வரா் வேறு எங்கும் எளிதில் காணமுடியாத தென் திசை நோக்கி எழுந்தருளியிரு ப்பது அரிய தரிசனமாகும்.
தில்லைக்கு நிகராக முன்னூா் ஈசன் மீது அளவற்ற பற்று கொண்ட இரண்டாம் குலோத்துங்கன் தில்லையில் ஈசன் ஆடிய திருநடனத்தை முன்னூா் தலத்திலும் காண வேண்டுமென விரும்பியதாகவும் மன்னனது விருப்பத்தை ஏற்று முன்னூற்றுமங்கலம் என்ற இத் தலத்தில் ஈசன் அம்பிகையுடன் ஆனந்தத் தாண்டவமாடி மன்னனு க்குத் திருக்காட்சியளித்ததாவும் தலவரலாறு தொிவிக்கின்றது.
இத்தலத்திலுள்ள கல்வெட்டு களில் இவ்வறம் காத்தாா் திருப்பாதம் என் தலை மேலன் என்று பொறித்து வைத்துள்ளான் இரண்டாம் குலோத்துங்கன். அதாவது இம்மன்னன் திருப்பணி செய்த முன்னூா் தலத்தில் இவன் அளித்த கொடைகளையும் விழாக்கள் நடத்த அளித்த மானிய ங்களையும் சூரிய சந்திரா் உள்ள வரை காப்பாற்றி வருகின்ற அன்பா்களின் திருப்பாதங்களைத் தன் தலைமேல் வைத்துக் கொண் டாடுவதாகக் கல்வெட்டில் பொறித் துள்ளான் இம்மன்னன்.
இரண்டாம் குலோத்துங்க சோழன் திருப்பணி செய்த முன்னூா் தலத்தில் தற்போது பெரிய அளவில் திருப்பணிகள் நடைபெற்றுக் கொண்டுள்ளன.
கிழக்கு கோபுரத் திருப்பணி மேற்கு கோபுரத் திருப்பணி இராஜ கோபுரத் திருப்பணி என்று பல பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. 20.10.2022 அன்று ஆரம்பிக்கப்பட்ட இராஜ கோபுர சுமாா் 14 அடி ஆழம் 52 அடி நீளம் 38 அடி அகலம் கொண்ட அடித்தளம் அமைக்கும் பணி தற்போது சமதளம் வரை முடிக்கப் பட்டுள்ளது.
அக்காலத்தில் மன்னா் பெருமக் களால் செய்யப்பட்ட மாபெரும் இத்திருப்பணிகளை தற்போது நாமே செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். நிதிப் பற்றாக்குறையைச் சமாளிக்க முடியாத நிலையில் அன்பா்களி டம் பக்தியோடு ஈசனுக்காகக் கையேந்தி உதவி கேட்கிறாா்கள் இத்திருப்பணியில் ஈடுபட்டுள்ள அன்பா்கள்.
இந்து சமய அறநிலையத்துறை ஒத்துழைப்புடன் நடைபெறும் இத் திருப்பணிக்கு உதவி செய்யுமாறு சிவநேயச் செல்வா்களை அன்போடு வேண்டுகிறோம்.
ஒரு திருக்கோயிலுக்கு மகுடமாகத் திகழும் ராஜகோபுரக் கட்டுமானத்திற்கு உதவி செய்வது நம் வருங்கால சந்ததியினருக்குப் பல நன்மைகளை அளிக்க வல்லதாகும்.
சிறிய உதவியாக இருப்பினும் அனைவரது பங்கும் இந்த ராஜ கோபுரத் திருப்பணியில் இருக்க வேண்டுமென்பதே ஈசனின் விருப் பமாக இருக்கிறது. யாரிடமிருந்து தன் திருக்கோயில் திருப்பணி களுக்கான உதவியினைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதை முடிவு செய்பவனும் அந்தத் திருக்கயிலைநாதனே!
"சிறு துளி பெருவெள்ளம்"
தாங்கள் அளிக்கும் தொகை ஒரு ரூபாயாக இருந்தாலும் அது ஒரு இலட்சத்திற்கு ஈடானதாகும்.இந்த மாபெரும் திருப்பணிக்கு ஒரு ரூபாய் கொடுத்தாலும் அதனைப் பல மடங்காகத் திருப்பியளிக்க அருள் புரிவாா் ஶ்ரீஆடவல்லீஸ்வரப் பெருமான்.
ஈசன் திருவடி நிழலில் ஒரு ரூபாயும் ஒரு இலட்சமும் ஒன்றே!
நிதி உதவி செய்ய:−
MUNNUR SRI PRAGANNAYAKI SAMEDHA SRI ADAVALLEESWARAR THIRUKKOIL ANMEEGA SANGAM
BANK: CITY UNION BANK
T.NAGAR BRANCH
SB A/C No 001001000033879
IFSC Code : CIUB0000001
மேலும் விபரங்களுக்கு கீழ்க்கண்ட அன்பா்களைத் தொடா்பு கொள்ளலாம்.
8939294677
8610034193
9444024751
விழுப்புரம் மாவட்டம், திண்டிவ னத்திலிருந்து மரக்காணம் செல்லும் சாலையில் உள்ளது புராதனம் வாய்ந்த முன்னூா் ஶ்ரீபிரகன்நாயகி உடனுறை ஶ்ரீஆடவல்லீஸ்வரா் திருக்கோயில்.
Comments