*கைரேகை நிபுணர் தேர்வு: தேசிய அளவில் முதல் இடம் பிடித்து தமிழக பெண் எஸ்.ஐ. சாதனை..!
*கைரேகை நிபுணர் தேர்வு: தேசிய அளவில் முதல் இடம் பிடித்து தமிழக பெண் எஸ்.ஐ. சாதனை..!*
தஞ்சை: தேசிய அளவிலான விரல் ரேகை நிபுணர் தேர்வில் தஞ்சையை சேர்ந்த பெண் காவல் உதவி ஆய்வாளர் அமலா தேசிய அளவில் முதல் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். டெல்லியில் கடந்த மாதம் 8ம் தேதி முதல் 13ம் தேதி வரை தேசிய அளவிலான விரல் ரேகை நிபுணர் தேர்வு தேசிய குற்ற ஆவண கூடத்தில் நடைப்பெற்றது. இந்த தேர்வில் தேசிய அளவில் 236 பேரும், தமிழ்நாட்டில் இருந்து 174 பேரும் தேர்வு எழுதினார்கள். இவர்களில் தஞ்சை மாவட்ட காவல்துறையில் விரல் ரேகை பிரிவில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வரும் அமலா இந்த தேர்வில் பங்கேற்று தேர்வு எழுதினார்.
தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ள நிலையில் அமலா தேசிய அளவில் முதல் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். எம்.எஸ்.சி. வேதியியல் பட்டம் பெற்ற இவர் கடந்த 2019ம் ஆண்டு காவல் உதவி ஆய்வாளர் (விரல் ரேகை) பணியில் சேர்ந்தார். தேசிய அளவிலான தேர்வில் வெற்றி பெறுபவர்கள் பதவி உயர்வுக்கு தகுதி பெறுவது மட்டும் அல்லாமல் குற்றவாளிகள் செய்த குற்றங்களை நிருபிக்க நீதிமன்றத்தில் சான்றிதழ் இவர்கள். மட்டுமே வழங்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2011ம் ஆண்டு பிறகு 11 ஆண்டுகளுக்கு. பிறகு தமிழ்நாடு தேசிய அளவில் தேர்வில் பங்கேற்றுள்ளது....
Comments