சபரிமலைக்கு தனி போஸ்டல் பின்கோடு*
சபரிமலைக்கு தனி போஸ்டல் பின்கோடு*
சபரிமலை சன்னிதானத்தில் மாளிகைப்புறம் கோயில் அருகே சபரிமலை போஸ்ட் ஆபீஸ் செயல்படுகிறது. மண்டல, மகரவிளக்கு காலத்தில் மட்டுமே இது செயல்படும். இதற்கு பக்தர்கள் அனுப்பும் கடிதங்கள் பெரும்பாலும் வேண்டுதல் தொடர்பாக இருக்கும்.
சிலர் தங்கள் மகளுக்கு திருமணம் நடக்க வேண்டி எழுதுவர். சிலர் தங்கள் பிள்ளைகளின் திருமண அழைப்பிதழை அனுப்புவர். இதுபோல காணிக்கையை மணியார்டர் ஆக அனுப்புவர். இவற்றை அய்யப்பன் முன் வைத்து விட்டு நிர்வாக அதிகாரி அலுவலகத்தில் ஒப்படைத்து விடுவர். கடந்த 1963ல் இங்கு போஸ்ட் ஆபீஸ் செயல்பட துவங்கியது.
இதைத் தொடர்ந்து அய்யப்பன் படம் மற்றும் 18 படிகளுடன் கூடிய முத்திரை அறிமுகமானது. இந்த முத்திரை பதித்த கடிதம் தங்கள் வீடுகளுக்கு வருவதை பக்தர்கள் புண்ணியமாக கருதுகின்றனர். சபரிமலைக்கு 689713 என்ற பின்கோடும் உண்டு. நம் நாட்டில் சபரிமலை அய்யப்பனுக்கும், ஜனாதிபதிக்கும் மட்டுமே தனி பின்கோடு உள்ளது.
Comments