இனி ஒரே டிக்கெட் போதும்! சென்னையில் மெட்ரோ, பஸ், புறநகர் ரயிலில்
இனி ஒரே டிக்கெட் போதும்! சென்னையில் மெட்ரோ, பஸ், புறநகர் ரயிலில் ஈஸியா பயணிக்கலாம்..செயலி அறிமுகம்
சென்னையில் மாநகர பஸ், மெட்ரோ, புறநகர் ரயில்களில் பொதுமக்கள் ஒரே டிக்கெட்டில் பயணிக்க வசதியாக செயலி ஒன்று அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதன்மூலம் ஒரே டிக்கெட்டில் பொதுமக்கள் 3 வகை போக்குவரத்து சேவைகளையும் ஈஸியாக பயன்படுத்த முடியும்.
சென்னையில் மாநகர பஸ், மெட்ரோ ரயில், புறநகர் ரயில் உள்ளிட்டவற்றை மக்கள் அதிகமாக பயன்படுத்தி வருகின்றனர். தற்போது மாநகர பஸ், மெட்ரா, புறநகர் ரயில்களில் மக்கள் தனித்தனியாக பயணச்சீட்டு (டிக்கெட்) எடுத்து பயணித்து வருகின்றனர்.
சென்னையில் மாநகர பஸ், மெட்ரோ ரயில், புறநகர் ரயில் உள்ளிட்டவற்றை மக்கள் அதிகமாக பயன்படுத்தி வருகின்றனர். தற்போது மாநகர பஸ், மெட்ரா, புறநகர் ரயில்களில் மக்கள் தனித்தனியாக பயணச்சீட்டு (டிக்கெட்) எடுத்து பயணித்து வருகின்றனர்.
இதனை மாற்ற தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி சென்னையில் 3 பயண சேவைகளுக்கும் ஒரே வகையான பயணச்சீட்டு பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை இந்நிலையில் தான் நேற்று முன்தினம் சென்னை நந்தனத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து குழும கூட்டம் நடந்தது. 2010ல் இந்த குழுமம் தோற்றுவிக்கப்பட்டாலும் கூட நேற்று முன்தினம் தான் முதல் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் மெட்ரோ, புறநகர் ரயில், நெடுஞ்சாலைத்துறை, மாநகராட்சி அதிகாரிகள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் சென்னை நகர போக்குவரத்து நெரிசல் உள்பட பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.
ஒரே டிக்கெட் திட்டத்துக்கு ஒப்புதல் குறிப்பாக சென்னையில் மாநகர பஸ், மெட்ரோ ரயில், புறநகர் ரயில் என அனைத்துக்கும் ஒரே பயணச்சீட்டை பயன்படுத்துவது தொடர்பான சாத்தியக்கூறுகள், வசதிகள் பற்றி விவாதிக்கப்பட்டது. இதையடுத்து மாநகர பஸ், மெட்ரோ ரயில், புறநகர் ரயில்களில் ஒரே பயணச்சீட்டு முறையை அமல்படுத்த சென்னை பெருநகர ஒருங்கிணைந்த போக்குவரத்து குழும கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
செயலி அறிமுகம் இதன்மூலம் விரைவில் இந்த திட்டம் செயல்பாட்டுக்கு வர உள்ளது. அதன்படி சென்னை பெருநகர ஒருங்கிணைந்த போக்குவரத்துக்கான டிக்கெட்டை பெற புதிதாக செயலி ஒன்று அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்த செயலி மூலம் சென்னையில் மாநகர பஸ், மெட்ரோ, புறநகர் ரயில்களில் ஒரே டிக்கெட்டில் பயணிக்க முடியும்.
நடைமுறை என்ன? உதாரணமாக ஒருவர் வீட்டில் இருந்து குறிப்பிட்ட இடத்துக்கு செல்ல வேண்டும் என்றால் புறப்படும் இடம், செல்லும் இடத்தை குறிப்பிட வேண்டும். அதன்பிறகு எத்தனை வகையான போக்குவரத்து முறையை பயன்படுத்த போகிறார்கள் என்பது பற்றிய விபரங்களை பதிவு செய்ய வேண்டும். ஒருவர் மாநகர பஸ், மெட்ரோ, புறநகர் ரயில்களை பயன்படுத்துவதாக இருந்தால் 3 போக்குவரத்து விபரங்களை பதிவு செய்ய வேண்டும். இவ்வாறு பதிவு செய்தால் அதற்கான டிக்கெட் கட்டணம் காட்டும். அதனை செலுத்தி மாநகர அரசு பஸ், மெட்ரோ ரயில், புறநகர் ரயில்களில் தனித்தனி டிக்கெட்டுகள் இன்றி ஒரே பயணசீட்டில் பயணிக்க முடியும் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளன.
Comments