வடகிழக்கு பருவமழையை மேலும் தீவிரப்படுத்த இருக்கின்ற மேலடுக்கு சுழற்சிகள்
வானிலை நிலவரம் (
வடகிழக்கு பருவமழையை மேலும் தீவிரப்படுத்த இருக்கின்ற மேலடுக்கு சுழற்சிகள்...*
*🚨 வடகிழக்கு பருவமழை
அடுத்த நிகழ்வு 6,7 தேதிகளில் தெற்கு அந்தமான் பான்டா ஏஸ் அருகே உருவாக வாய்ப்பிருக்கிறது என்று தெரிவிக்கபட்டது அந்தமான் பான்டா ஏஸ் இடையே மேலடுக்கு சுழற்சி உருவாகி வலுப்பெற்று வருகிறது இந்த நிகழ்வு மேற்கு நோக்கி நகர்ந்து வருகின்ற 7,8 தேதிகளில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிக்கு வரும் இந்த நிகழ்வோடு தற்போது இலங்கை அருகே நிலவும் மேலடுக்கு சுழற்சி இணைந்து தமிழகம் மற்றும் இலங்கை இடையே வருகின்ற 9,10,11,12,13 தேதிகளில் வந்தமைய அதிக வாய்ப்பிருக்கிறது இதன் காரணமாக வடகிழக்கு பருவமழையானது மேலும் தீவரமடையும் தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலத்தில் மீண்டும் பரவலாக கனமழை மற்றும் தொடர்மழையை கொடுக்க அதிக வாய்ப்பிருக்கிறது இதன் காரணமாக தென் இந்திய பகுதிகளில் முழுவதுமாகவே பரவலாக கனமழை மற்றும் தொடர்மழை கிடைக்கும் வங்கக்கடல் வானிலை பொருத்துவரை நிலையான வானிலையாக இருக்காது அடிக்கடி வானிலையில் மாற்றம்
*🚨இலங்கைக்கு தென்கிழக்கே தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் மேலடுக்கு சுழற்சியும் தெற்கு அந்தமான் பான்டா ஏஸ் இடையே நிலவும் மேலடுக்கு சுழற்சியும் நான் கூறியதை போலவே இணைந்து பரவி நீடிக்க தொடங்கிவிட்டது இந்த நிகழ்வுகள் மேற்கொண்டு இணைந்து வலுப்பெற்று வரும் நாட்களில் குறைந்த காற்றழுத்த தாழ்வுபகுதியாக வலுப்பெற்று இலங்கை மற்றும் தமிழகத்திற்கு இடையே வந்தமைந்து தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலத்திற்கு பரவலாக கனமழை மற்றும் தொடர்மழையை கொடுக்கும்...*
இலங்கை அருகே நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று அதிகாலை முதலாகவே டெல்டா , இலங்கையை ஒட்டிய வடக்கடலோர தமிழகம் மற்றும் தென்தமிழகத்தில் சற்று பரவலாக கனமழை மற்றும் தொடர்மழையை கொடுத்து வருகிறது மேற்கொண்டு தற்போது கடலூர் (தெற்கு) , அரியலூர், மயிலாடுதுறை, காரைக்கால், நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, இராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, கரூர், நாமக்கல், தேனி, திருப்பூர், ஈரோடு, கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ஒருசில இடங்களில் தற்போது பரவலாக மிதமானது முதல் சற்று கனமழைக்கும் மற்றும் சற்று தொடர்மழைக்கும் வாய்ப்பிருக்கிறது...*
*🚨காரைக்கால் , மயிலாடுதுறை, நாகை மற்றும் திருவாரூர் மாவட்டத்தில் இன்று அதிகாலை முதலாகவே விட்டு விட்டு சற்று கனமழை மற்றும் சற்று தொடர்மழையை கொடுத்து வருகிறது மேற்கொண்டு மாவட்டங்களில் இன்று மாலை வரை இதே வானிலையே நீடிக்கும் சிறிது இடைவேளிக்கு பிறகு மீண்டும் சற்று கனமழை மற்றும் தொடர்மழையை கொடுக்கும் ...*
*🚨சென்னையில் பரவலான கனமழை மற்றும் தொடர்மழைக்கு தற்போது வாய்ப்பில்லை....*
*🚨புதுச்சேரியில் பரவலான கனமழை மற்றும் தொடர்மழைக்கு தற்போது வாய்ப்பில்லை ஒருசில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பிருக்கிறது...*
*🚨மேலடுக்கு சுழற்சி காரணமாக தற்போது தென்தமிழகத்திலும் மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளிலும் மிதமானது முதல் சற்று கனமழைக்கும் மற்றும் தொடர்மழைக்கும் வாய்ப்பிருக்கிறது ...*
*🚨இலங்கையில் இன்று பரவலாக கன மற்றும் மிககனமழை மற்றும் தொடர்மழைக்கு வாய்ப்பிருக்கிறது
Comments