ஃப்ரீசரில் இருக்கும் ஐஸ் கட்டிகள் உருகினால்

 ஃப்ரீசரில் இருக்கும் ஐஸ் கட்டிகள் உருகினால் இனி வெளியே ஒரு சொட்டு தண்ணீர் கூட வராது. 

இந்த ஐடியா மட்டும் உங்களுக்கு தெரிஞ்சா.



ஃபிரிட்ஜ் இருக்கிறவங்க வீட்டில் இந்தப் பிரச்சனையை எல்லோருமே சந்தித்திருப்பீர்கள். ஃப்ரீசரில் ஐஸ் கட்டி அடிக்கடி கட்டும். அதன் பின்பு அந்த ஐஸ் கட்டிகளை நாமே கரைக்க வேண்டும் என்பதற்காக ஃப்ரிட்ஜில் இருக்கும் அந்த defrost button னை அழுத்தி, ஐஸ் கட்டிகளை கரைத்தாலும் சரி அல்லது ஒரு நாள் முழுவதும் கரண்ட் கட் ஆகி தானாக அந்த ஐஸ் கட்டிகள் உருகி வெளியேறினாலும் சரி, பிரிட்ஜ் உள்ளேயும் தண்ணீர் சொட்டும். பின்னால் தண்ணீர் வரும் டரேவை நாம் கவனிக்காமல் விட்டு விடுவோம். தண்ணீர் நிரம்பி வழிந்து தரை முழுவதும் ஈரம் ஆகி பெண்களுக்கு பெரிய வேலை வைத்து விடும். இப்படி பிரிட்ஜ்க்கு உள்ளேயும் சில சமயம் தண்ணீர் சொட்டு சொட்டாக ஊற்றி, பிரிட்ஜுக்கு உள்ளே இருக்கும் பொருட்களின் மேல் எல்லாம் தண்ணீர் தேங்கி நிற்கும்.


ஃப்ரீசரில் நிறைய ஐஸ் கட்டிகள் பிடிக்காமல் இருக்கவும், கரைந்த ஐஸ் தண்ணி வெளியே வராமல் இருக்கவும் நாம் என்ன செய்யலாம். சின்ன சின்ன ஐடியாக்கள் இதோ உங்களுக்காக முயற்சி செய்து பாருங்கள். பிடித்திருந்தால் தொடர்ந்து பின்பற்றுங்கள்


முதலில் ஐஸ் கட்டிகள் சேராமல் இருக்க வேண்டும் என்றால், ஐஸ் கட்டிகளை உருக்கி சுத்தம் செய்த ஃப்ரீசருக்கு உள்ளே கொஞ்சமாக உப்பு தூளை தடவி வையுங்கள். அல்லது கால் டம்ளர் அளவு தண்ணீரில் கொஞ்சமாக உப்பு போட்டு கலந்து, அந்த உப்பு தண்ணீரை ஃப்ரீசர் முழுவதும் ஸ்பிரே செய்து விடலாம். சீக்கிரமாக ஃப்ரீசரில் ஐஸ் கட்டாமல் இருக்கும். அப்படி இல்லை என்றால் சிறிய அகலமான பிளாஸ்டிக் கிண்ணத்தில் கொஞ்சமாக கல் உப்பு போட்டு, அந்த கிண்ணத்தை ஃப்ரீசருக்குள் வைத்தால் ஃபிரீசரில் அடிக்கடி மலை போல ஐஸ் கட்டி நிற்காது. (மலைபோல ஐஸ் கட்டி குவிந்து இருந்தால் அதன் மேலே உப்பை தடவினாலும் அந்த ஐஸ் கட்டி சீக்கிரம் கரைந்து விடும்.) இது முதல் விஷயம்.

அடுத்தபடியாக உங்களுடைய வீட்டில் பவர் கட். அப்படி இல்லையென்றால் நீங்களே அந்த ஃப்ரிட்ஜில் இருக்கும் பட்டனை அழுத்தி ஐஸ் கட்டியை கரைய வைக்க போகிறீர்கள் என்றால் ஒரு கனமான டர்க்கி டவல் அல்லது கனமான வேறு ஏதாவது துணியை ஃப்ரீசர் அளவுக்கு மடித்து அந்த பிரீசருக்குள்ளே வைத்து விடுங்கள் . (சிறிய அளவில் காட்டன் பெட்ஷீட் இருந்தால் கூட அதை மடித்து ஃப்ரீசருக்குள் வைக்கலாம். தவறு கிடையாது.) ஐஸ் கட்டி உருகும். அந்த தண்ணீரை எல்லாம் இந்த துணி இழுத்துக் கொள்ளும். தண்ணீர் வெளியே ஒரு சொட்டு கூட வராது. ஐஸ் கட்டி எல்லாம் உருகி முடித்த பின்பு இந்த துண்டை வெளியே எடுத்து துவைத்து காய வைத்துக் கொள்ளுங்கள் வேலை முடிந்தது. (ஐஸ் கட்டி உருகி முடித்ததும் ஞாபகமாக உள்ளே இருக்கும் அந்த துணியை வெளியே எடுத்து விடுங்கள்.)


courtesy:https://dheivegam.com/

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி