வில்வம் எனும் அற்புதம்!*

 


வில்வம் எனும் அற்புதம்!*


நன்றி குங்குமம் டாக்டர்


வில்வம் இந்தியா  முழுவதும்  சமவெளிகள்,  மலையடி வாரங்களில்  பரவலாகக்   காணப்படுகின்றது.  கோயில்கள், வழிபாட்டுக்குரிய  காடுகளில்  இவை நட்டுப் பராமரிக்கப்படுகின்றன. கூவிளம்,  கூவிளை, மாதுரம் ஆகிய  மாற்று பெயர்களும் வில்வத்துக்கு உண்டு.


*வில்வம்  இலை, பட்டை, பூ, பிஞ்சு, பழம், வேர் ஆகிய அனைத்துமே  மருத்துவ குணம்  கொண்டவை.  வில்வம் துவர்ப்பும், இனிப்பு, கசப்புச் சுவைகளும், குளிர்ச்சித் தன்மையும்  கொண்டவை.  இவை  நோய்களை நீக்கி  உடலைத் தேற்றும்.  ரத்தப் போக்கைக் கட்டுப்படுத்தும், வியர்வையைப்  பெருக்கும், மலமிளக்கும், காய்ச்சலைத் தணிக்கும்.


*சிறுவர்களுக்கான  சீத பேதி  குணமாக வில்வம் பிஞ்சை  நெல்லிக்காய்  அளவு அரைத்து,  1 டம்ளர் மோரில் கலந்து குடிக்கக் கொடுக்க வேண்டும்.


*மாதவிடாயின்போது  ஏற்படும்  அதிக ரத்தப்போக்கு  குணமாக  வில்வ இலைகளை  அரைத்து, பசையாக்கி,  கொட்டைப் பாக்கு  அளவு காலையில்  சாப்பிட வேண்டும்.  தொடர்ந்து  10 நாட்கள்  வரை சாப்பிட்டு  வரலாம்.  இந்தக்  காலத்தில்  குளிர்ந்த  நீரில் குளிப்பதும் நலம்.


*சீதபேதி  குணமாக  நன்கு கனிந்த  வில்வம்  பழத்தை  நீர்விட்டுப் பிசைந்து,  நீரை வடிகட்டி,  பின்னர்  சம அளவாகச் சர்க்கரை கலந்து, தேன் சேர்த்து பதமாகக் காய்ச்சி,  30.மி.லி  அளவு சாப்பிடலாம்.


*மஞ்சள் காமாலை குணமாக ஒரு தேக்கரண்டி வில்வம் இலைத்தூளுடன்  கரிசாலைச் சாறு சேர்த்து, குழப்பி  காலையில்  மட்டும்  சாப்பிட வேண்டும்.  5 நாட்கள் வரை சாப்பிடலாம். இந்தக் காலத்தில் புளி, காரம் மற்றும்  அசைவ  உணவுகள் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.


*வில்வ இலைத்தூள் அரை தேக்கரண்டி அளவு, வெண்ணெயுடன் கலந்து உணவுக்குப் பின்னர் சாப்பிட்டுவர வயிற்றுப்புண்,  மலச்சிக்கல்  குணமாகும்.


*வில்வம்  பழச்சதை,  நாள்பட்ட  வயிற்றுப் போக்கு,  வயிற்றுக் கடுப்பு ஆகியவற்றைக்  குணமாக்கும். குடல்புண் மற்றும்  குடல் புழுக்களால் பாதிப்படைந்த  வயிற்றை,  வில்வம்  பழச்சாற்றிலிருந்து தயாரிக்கப்படும் பானங்கள் சரி  செய்கின்றன.  பாதியளவு  பழுத்த வில்வ பழங்கள்,  பசியையும்,  ஜீரண  சக்தியையும் அதிகமாக்குகின்றன.


*வில்வம் இலை, பழம், வேர் ஆகியவற்றின் நோய்  எதிர்ப்புத்  திறன் உயர்நிலை மருத்துவ ஆய்வுகள் மூலமாக உறுதி செய்யப்பட்டுள்ளது.


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி