சிங்கள் சாட்டில் எடுக்கப்பட்ட இரண்டாவது படம் இரவின் நிழல்
பார்த்திபன் டைரக்ட் பண்ணி, நடிச்சு ரிலீஸான படம் இரவின் நிழல். இந்த படத்தை பார்த்திபன் நான் லீனியர் படமாக சிங்கிள் ஷாட்டில் எடுத்திருந்தார். மேலும் இப்படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசை அமைத்திருந்தார். இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் இருந்துச்சு. ஆனால் சிலர் இந்த படத்திற்கு எதிர்ப்புகளையும் தெரிவிச்சு வந்தாய்ங்க.
இந்த படம் ஓடிடியில் வெளியாகாமல் இருந்த நிலையில் சமீபத்தில் அமேசான் பிரைம் ஓடிடி தளம் இரவின் நிழல் படத்தை வாங்கியுள்ளது.
ஆனா இப்போஅந்த தளத்தில் படத்தை வெளியிடும் போது இரண்டாவது சிங்கிள் ஷாட் படம் என்று இரவின் நிழல் படத்தை குறிப்பிட்டுள்ளார்கள்.
அதாவது பார்த்திபன் உலகிலேயே முதல் சிங்கிள் சாட்டில் எடுத்த படம் இரவின் நிழல் எனக் கூறி பிரமோஷன் செய்திருந்தார்.
அதற்கு ப்ளூ சட்டை மாறன், 2013 ஆம் ஆண்டு வெளியான ஃபிஷ் அண்ட் கேட் என்ற ஈரானிய படம் தான் முதலில் சிங்கிள் சாட்டில் எடுத்தது என குறிப்பிட்டிருந்தார்.ஆனால் இதற்கு பார்த்திபன் ரசிகர்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பிச்சு.
இப்போது அமேசான் பிரைம் நிறுவனமே இது இரண்டாவது சிங்கள் சாட்டில் எடுக்கப்பட்ட படம் என குறிப்பிட்டுள்ளதால் ப்ளூ சட்டை மாறன் பார்த்திபனை வச்சு செய்துள்ளார். அதாவது வாய் வெல்லாது, வாய்மை தான் வெல்லும் என மாறன் குறிப்பிட்டுள்ளார். சும்மாவே ஆடும் குதிரைக்கு சலங்கை கட்டி விட்டால் எப்படி ஆடும் என்பது போல ப்ளூ சட்டை மாறன் தற்போது வாய் இருந்தால் மட்டும் ஜெயித்திட முடியாது.. உண்மைதான் ஜெயிக்கும் என பார்த்திபனுக்கு எதிராக பதிவு போட்ட கமெண்ட் ட்ரோல் ஆகுது
From The Desk of கட்டிங் கண்ணையா!
Comments