காசி தமிழ் சங்கமம்" தொடக்க விழா
காசி தமிழ் சங்கமம்" தொடக்க விழா
மாண்புமிகு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களால் காசியில் இன்று 19.11.2022 பிற்பகல் 3.00 மணியளவில் துவங்கப்பட்டது.
முதலில் இந்த நிகழ்ச்சியில், தெய்வப்புலவர் திருவள்ளுவர் இயற்றிய திருக்குறள், கம்போடியா நாட்டில் உள்ள கெமர் மொழி உள்பட 13 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டதை பாரதப் பிரதமர் தமது திருக்கரங்களால் வெளியிட்டார்.
பின்னர், பழம்பெரும் இசைக் கலைஞர் ஷேக் சின்ன மவுலானா அவர்களின் மாணவர்களான காசிம் மற்றும் பாபு சகோதரர்களின் நாதஸ்வர இன்னிசை கச்சேரி நடைபெற்றது.
அதன் பின்னர், இசைஞானி இளையராஜா அவர்களின் இன்னிசை கச்சேரி நடைபெற்றது.
சிவ மந்திரங்கள் அடங்கிய பாடல்களையும் பாடியது மட்டுமல்லாமல் மாணிக்கவாசகர் அருளிய யாத்திரைப் பத்து பாடல்களில் இருந்தும் ஆடினார்.
" பூவார் சென்னி மன்னன் எம்புயங்கப் பெருமான் சிறியோ மை
ஓவாதுள்ளம் கலந்துணர் வாய் உருக்கும் வெள்ளக் கருணையினால்
ஆவா என்னப் பட்டன்பாய் ஆட்பட்டீர் வந்தொருப்படுமின
போவோம் காலம் வந்தது காண் பொய் விட்டுடையான் கழல் புகவே ".
என்ற பாடலை இசைஞானி இளையராஜாவே பாடி காசி தமிழ் சங்கம் நிகழ்ச்சிக்கு பெருமை சேர்த்தார்.
பின்னர் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் " காசி தமிழ் சங்கமம்" நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றினார்
ஹர ஹர மஹாதேவா, வணக்கம் காசி என்று தமிழில் பேசி ஆரம்பித்தார்.
காசி தமிழ் சங்கமம் கலை மட்டும் பண்பாட்டை மேலும் வளர்க்க வேண்டும். காசியை காஞ்சிக்கு ஒப்பிட்டும், தமிழகத்தில் தெற்கில் தென்காசி ஒன்று இருப்பதையும் குறிப்பிட்டார்.
காசியில் துளசிதாசர் பெருமை சேர்த்தது போல், தமிழகத்தில் திருவள்ளுவர் பெருமை சேர்த்ததை குறிப்பிட்டுப் பேசினார்
தமிழ்நாட்டைச் சேர்ந்த முன்னாள் ஜனாதிபதி சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவர்கள், பனாரஸ் இந்து யுனிவர்சிட்டியை துவக்கிட முக்கிய அங்கம் வகித்ததை சுட்டிக்காட்டினார்.
காசிப்பட்டும், காஞ்சி பட்டும் இன்றும் சிறந்து விளங்குவதை எண்ணி பெருமிதத் தோடு குறிப்பிட்டார்.
மகாகவி சுப்ரமணிய பாரதியார் காசியில் தங்கி படித்ததையும் நினைவு கூர்ந்தார்.
காசியில் அனுமன் கார்டு பகுதியில் தமிழர்கள் இன்றும் வாசிப்பதையும் குறிப்பிட்டுப் பேசினார்.
காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் இனி வரும் காலத்தில் வடக்கே உள்ள இமயமலயம் முதல் தெற்கே உள்ள குமரியும் , தேச ஒற்றுமை ஏற்படுத்தும் விதமாக இருக்க வேண்டும் என்றும், சங்க நூலான கலித்தொகையில் தமிழ் மொழி காசியின் சிறப்பினையும் எடுத்துச் சொல்வதையும் குறிப்பிட்டு பேசினார்
தர்மபுரி ஆதீனத்திலிருந்து குமரகுருபரர் கேதார் கார்ட் பகுதியில் வந்து தமிழ் மடம் நிறுவியதையும், குமரகுருபரர் காசி விஸ்வநாதரை தரிசித்ததையும் பெருமிதத்தோடு பேசினார்.
தமிழ் வாழ்த்து பாடல் எழுதிய மனோன்மணி சுந்தரனார் அவர்களின் குருவாகிய கோடகநல்லூர் சுந்தரம் பிள்ளை அவர்கள் காசிக்கு வந்து விசுவநாதரை தரிசித்ததையும் நினைவு கூர்ந்தார்.
இராமானுஜர், சங்கராச்சாரியார் இங்கு வந்து விஸ்வநாதரை தரிசித்தோடு மட்டுமல்லாமல் அவர்கள் தேச ஒற்றுமை உணர்வை ஏற்படுத்தியதை சுட்டிக்காட்டினார்.
தமிழ் மொழியின் பெருமையை உலக அளவில் எடுத்துச் செல்ல வேண்டும் என்றும், பழம்பெரும் மொழியான தமிழ் மொழியை பாதுகாக்க வேண்டும் என்றும் காசி தமிழ் சங்கமம் வழியே நல்லதொரு உயர்வினை பெற வேண்டும் என்றும்,
" நாட்டு நலனே நமது நலன் என்றும் " தமிழ் மொழி,கலை பண்பாடு ஆகியவை வளர வேண்டும் என்றும், இந்த நிகழ்ச்சியில் பல மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் வந்தது போல, தமிழகத்திற்கு சென்றும் பெருமை சேர்க்க வேண்டும் என்றும் கூறி தனது உரையை நம் பாரதப் பிரதமர் வணக்கம் என்று சொல்லி முடித்தார்.
by
Comments