ஆவடி அரசு உயர்நிலைப்பள்ளியில் இனிய உதயம் தொண்டு நிறுவனத்தின் சார்பாக மாதவிடாய் விழிப்புணர்வு
திருவள்ளூர் மாவட்டம்
ஆவடி அரசு உயர்நிலைப்பள்ளியில் இனிய உதயம் தொண்டு நிறுவனத்தின் சார்பாக மாதவிடாய் விழிப்புணர்வு
நவ.19
திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அரசு உயர்நிலைப்பள்ளியில் இனிய உதயம் தொண்டு நிறுவனத்தின் சார்பாக மாதவிடாய் விழிப்புணர்வு நிகழ்வு 18.11.2022 அன்று காலை 10மணி முதல் 11மணி வரை நடைபெற்றது.
இந்த மாதவிடாய் விழிப்புணர்வு அளிப்பதற்காக சரண்யா தேவி அவர்கள் வந்திருந்தார்கள். வளரிளம் குழந்தைகள் மாதவிடாய் காலத்தில் ஏற்படக்கூடிய பிரச்சனைகள் குறித்து ஆலோசனை செய்து அதற்கான நல்ல தீர்வை அளித்தார்கள் இதனைத் தொடர்ந்து துணிலாளான நாப்கின்களை பயன்படுத்தும் போது மாதவிடாய் காலத்தில் ஏற்படக்கூடிய அரிப்புகளை தடுக்கும் என்றும் அது எதிர்காலத்திற்கு நல்லதாக இருக்கும் என்றும் எடுத்து கூறினார்.
இந்த மாதவிடாய் காலத்தில் நாப்கின்களை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் அதை எவ்வாறு அப்புறப்படுத்த வேண்டும் என்பதை தெளிவாக எடுத்த கூறினார். பள்ளியில் படிக்கும் குழந்தைகள் மாதவிடாய் காலத்தில் பயன்படுத்தக்கூடிய நாப்கின்கள் முறையாக எரிக்கவோ அல்லது புதைக்கவும் செய்தல் நன்றாக இருக்கும். அதை தவிர்த்து ஆங்காங்கே போட்டு விட்டு செல்வது தவறான வழிமுறையாகும். ஆகவே, மாதவிடாய் காலத்தில் பெண் குழந்தைகள் சுத்தமாகவும் சுகாதாரமாகவும் இருக்கும் பொழுது அவர்களுடைய எதிர்காலம் சிறப்பாக இருக்கும் என்று தெளிவாக கூறினார் இந்த விழிப்புணர்வு நிகழ்வில் கலந்து கொண்ட நூற்றுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு துணிகளால் ஆன நாப்கின்கள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் இனிய உதயம் தொண்டு நிறுவனத்தின் பவித்த ரஞ்ஜனி உடனிருந்தார்.
Comments