அக்னியில் இறங்கும் ஆண் சீதைகள்
- Get link
- X
- Other Apps
அக்னியில் இறங்கும்
ஆண் சீதைகள்
*********************
வறுமை ஆளும்
இல்லத்தில் முளைத்தும்
அறிவையும் திறமையும்
ஆக்கத்தில் இணைத்தும்
எதிர்கால ஆசைகளை
உதிரங்களுக்காக உதிர்த்தும்
இளமைக் கனவுகளை
உறவுக்காகத் தொலைத்தும்
உயிராகிய காதலை
கண்ணீரால் அழித்தும்
ஆணென்ற கம்பீரத்தை
சேலைக்குள் ஒளித்தும்
கற்பனை ஓவியங்களை
இரவுக்குள் புதைத்தும்
இதயத்தின் ஓலங்களை
புன்னகையில் மறைத்தும்
மனம் விரும்பிய
வாழ்க்கையை சிதைத்தும்
இல்லறக் கூட்டுக்ள்
சிறைப்பட்ட புழுக்களாய்
அக்னியில் இறங்கும்
ஆண் சீதைகளை அன்றாடம் கொண்டாடலாம்
- Get link
- X
- Other Apps
Comments