தரணியில் கலைவாணர் கலை வளர்த்தது புதுமை
கலைவாணர் என் எஸ் கே
வெள்ளித்திரையில் முன்பெல்லாம் கருப்பு வெள்ளை படம்
வெள்ளை உள்ளம் கொண்ட கலைஞனுக்கு தனியிடம்
நாடகத்தில் அடி எடுத்த போதே தனித்தன்மை
நடிப்பில் நகைச்சுவையே இன் நாடறிந்த உண்மை
இயல்பான தோற்றம் எளிமையில் இருக்கும்
எதார்த்தம் உடன் ரசிப்போம் எவருக்கும் பிடிக்கும்
இதயத்தை வருடும் அர்த்தமுள்ள பாட்டும்
இனிதாய் சொந்தக்குரலில் மாறும் பல மட்டும்
தமிழ் சினிமா வரலாற்றில் என்றும் தனி அடையாளம்
தன் மனைவி மதுர த்தோடு இணைந்ததும் நடிப்பாலும்
சிரிக்காத மனிதரில்லை படம் பார்த்த பின்னே
சிந்தனையில் உயர்வு ஒன்றே காட்டும் கண்முன்னே
கலைவாணர் பெயரிலே பிரம்மாண்ட அரங்கம்
வேறு கலைஞனுக்கு இல்லையே சென்னையில் ஒரு அரங்கம்
தமிழக அரசு செய்த தனித்துவ பெருமை
தரணியில் கலைவாணர் கலை வளர்த்தது புதுமை
முருக.சண்முகம்
Comments