மாறப்போகும் "ஆக்சன்"


மாறப்போகும் "ஆக்சன்".. சென்னைக்கு தமிழ்நாடு வெதர்மேன் சொன்ன மெகா நியூஸ்.. நாளை நடக்கும் ட்விஸ்ட்





சென்னை: நாளை சென்னையில் மழை குறைவாக இருக்கும். சென்னை மழை கொஞ்சம் கொஞ்சமாக உள் மாவட்டங்களை நோக்கி நகர தொடங்கும் என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை தீவிரமாக பெய்து வருகிறது. வட இலங்கை கடற்கரையை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக மழை பெய்து வருகிறது. வடகிழக்கு பருவமழை கடந்த சனிக்கிழமை தொடங்கிய நிலையில் தற்போது தமிழ்நாட்டில் தீவிரம் அடைந்து உள்ளது.

நேற்று மாலை முதல் இரவு வரையிலும், பின்னர் இன்று அதிகாலை, பிற்பகலில் சென்னையில் கனமழை பெய்தது. சென்னையில், அரும்பாக்கம், கோயம்பேடு, காசிமேடு , ராயப்பேட்டை, கிண்டி, வடபழனி ,திருவொற்றியூர் , எண்ணூர், தேனாம்பேட்டை, அண்ணா சாலை, மெரினா கடற்கரை, சைதாப்பேட்டை, நுங்கம்பாக்கம், ஆகிய பகுதிகளில் இரவு முழுக்க மழை பெய்தது.

 இந்த நிலையில் சென்னை மழை தொடர்பாக இன்று காலை தமிழ்நாடு வெதர்மேன் வெளியிட்டு இருந்த போஸ்டில், சென்னையில் இது நீண்ட மழை நாளாக இருக்க போகிறது. வடசென்னையை விட தென் சென்னையில் இன்று நல்ல மழை பெய்யும். மழை மேகங்கள் இன்று கொஞ்சம் உள் பகுதிகளுக்குள் செல்லும் வாய்ப்பு உள்ளது. திருவண்ணாமலை, விழுப்புரம், ராணிப்பேட்டை பக்கம் மேகங்கள் செல்ல வாய்ப்பு உள்ளது. புதுச்சேரி, கடலூர் இதில் இணையும் வாய்ப்புகள் உள்ளன. இன்று இல்லையென்றால் நாளையாவது அங்கு மழை பெய்யும்.


இன்று மற்றும் நேற்றோடு ஒப்பிடும் போது நாளை சென்னையில் மழை குறைவாக இருக்கும். சென்னை மழை கொஞ்சம் கொஞ்சமாக உள் மாவட்டங்களை நோக்கி நகர தொடங்கும். இன்று இன்னும் 3-4 மணி நேரம் மழை பெய்யும். நேற்று வடசென்னையில் மழை பெய்த நிலையில் இன்று தென் சென்னையில் மழை பெய்யும். இன்றும், நாளை காலையும்தான் மிக முக்கியம்.

சென்னையில் உள்ள ஏரிகள் தற்போது பாதுகாப்பான அளவில்தான் இருக்கின்றன. வரும் நாட்களில் நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, தென் தமிழ்நாடு மாவட்டங்களில் மழை பெய்யும். காற்று, மேகம் மன்னார் வளைகுடாவில் இருந்து தெற்கில் குமரி நோக்கி நகரும் போது பொதுவாக தெற்கு தமிழ்நாட்டிலும், டெல்டாவில் கனமழை பெய்யும். கடலூரில் கனமழை பெய்யும்.

சென்னையில் நாளையோடு மழை முடிவிற்கு வரும் என்றால் இல்லை. இயல்பான வடகிழக்கு பருவமழை, விட்டு மழை ஆங்காங்கே பெய்யும். ஆனால் இது போன்ற மழை பெய்யாது. கனமழை பெய்தாலும் ஆங்காங்கே மட்டும்தான் பெய்யும் என்று தமிழ்நாடு வெதர்மேன் தனது போஸ்டில் குறிப்பிட்டுள்ளார். நாளை தமிழ்நாட்டின் உள் மாவட்டங்களில் மழை பெய்யும் என்று அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.



Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி