*55 ஆண்டுகளுக்கு பின் தந்தை நினைவிடத்தை அறிந்த மகன்*
*55 ஆண்டுகளுக்கு பின் தந்தை நினைவிடத்தை அறிந்த மகன்*
திருநெல்வேலி:மலேசியாவிலுள்ள தந்தையின் நினைவிடத்தை 55 ஆண்டுகளுக்கு பிறகு கண்டறிந்தார்
திருநெல்வேலி மாவட்டம் வெங்கடாம்பட்டி சமூக சேவகர் திருமாறன் 59.திருமாறன் ஆதரவற்றோர் இல்லம் ரத்த தான அமைப்பு நடத்தி வருகிறார். இவரது தந்தை ராமசுந்தரம். 1930ல் மலேசியாவில் பிறந்தவர். அவர் திருநெல்வேலி வந்து உயர்கல்வி பயின்ற பிறகு மீண்டும் மலேசியாவில் சென்று கெர்லிங் எஸ்டேட் பகுதியிலுள்ள பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்தார். அவர் 1967ல் காலமானார்.
திருமாறனின் தாயார் ராதாபாயும் சில ஆண்டுகள் அப்பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்தார். 1970களில் குடும்பத்துடன் தமிழகம் வந்துவிட்டார். ராமசுந்தரம் இறந்து 55 ஆண்டுகள் ஆகிறது. இதுவரை மலேசியாவிற்கு செல்லாத திருமாறன் கூகுள் தேடுதல் மூலம் பெற்றோர் பணியாற்றிய இடம் பள்ளியின் முன்னாள் மாணவர்கள் போன்றவர்களை தேடி கண்டுபிடித்தார்.
சில நாட்களுக்கு முன் மலேசியா சென்று தந்தையின் கல்லறையை கண்டறிந்தார்.
தந்தையிடம் பயின்ற தமிழர்களுடன் கலந்துரையாடினார். தந்தையின் நினைவாக
கோலாலம்பூர் மருத்துவமனையில் ரத்த தான முகாமையும் நடத்தினார்
Comments