465 நாட்கள் கடலுக்குள் கிடந்த போன்
465 நாட்கள் கடலுக்குள் கிடந்த போன்.. தானாகவே கரை ஒதுங்கியது.. எடுத்து பார்த்த போது காத்திருந்த ஆச்சரியம்!
ஆப்பிள் நிறுவனத்தின் சாதனங்களுக்கு உலகம் முழுவதும் நல்ல வரவேற்பு உள்ளது என்றுதான் கூறவேண்டும். குறிப்பாக இந்நிறுவனம் தனித்துவமான அம்சங்கள் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் போன்கள், டேப்லெட் உள்ளிட்ட பல சாதனங்களை அறிமுகம் செய்கிறது.
எனவே இதுபோன்ற தரமான சாதனங்களை அறிமுகம் செய்வதால் தான் இப்போதும் அதிக வருமானம் பெறும் டெக் நிறுவனமாக ஆப்பிள் உள்ளது. இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் 2021 வாக்கில் சர்ஃபிங் செய்யக் கடலுக்குள் சென்ற கிளார் அட்ஃபீல்டு என்ற பெண் தனது ஐபோனை கடலில் தொலைத்து விட்டார்.
குறிப்பாக 39 வயதான கிளார் தற்போது கடலில் விழுந்து காணாமல் போன தனது ஐபோனை கண்டறிந்து விட்டதாக தெரிவித்துள்ளார். அதுவும் ஒரு வருடத்திற்குப் பின்பு மீட்கப்பட்ட ஐபோன் இப்போது சீராக இயங்குகிறது என்று அவர் தெரிவித்துள்ளார்.
அதாவது கிளார் அட்ஃபீல்டு தெரிவித்த தகவல் என்னவென்றால், நீர்புகாத பையில் வைத்திருந்த ஐபோன் 8 பிளஸ் மாடலை கடந்த ஆண்டு கடலில் தொலைத்துவிட்டதாகக் கூறியுள்ளார். பின்பு கடலில் விழுந்து காணாமல் போன் ஐபோன் தற்போது கரை ஒதுங்கி இருக்கிறது.
மேலும் கரை ஒதுங்கிய ஐபோனை பிராட்லி என்ற பெயர் கொண்ட நாய் கண்டறிந்து இருக்கிறது. ஐபோன் வைக்கப்பட்டு இருந்த நீர்புகாத பையினுள் அட்ஃபீல்டு தாயாரின் மருத்துவ விவரங்கள் அடங்கிய அட்டை இருந்தது.
அதன்பின்பு மருத்துவ விவரங்கள் அடங்கிய அட்டையை வைத்தே அட்ஃபீல்டை தொடர்பு கொண்டிருக்கின்றனர். ஒருவழியாகத் தொலைந்து போன ஐபோன் மறுபடியும் அவருக்கே திரும்பக் கிடைத்துவிட்டது.
அதன்பின்பு மருத்துவ விவரங்கள் அடங்கிய அட்டையை வைத்தே அட்ஃபீல்டை தொடர்பு கொண்டிருக்கின்றனர். ஒருவழியாகத் தொலைந்து போன ஐபோன் மறுபடியும் அவருக்கே திரும்பக் கிடைத்துவிட்டது.
அதேபோல் கடந்த ஆண்டு முதல் தான் சர்ஃபிங் செய்வதை அட்ஃபீல்டு வழக்கமாக கொண்டிருந்தார். குறிப்பாக எப்போதுமே சர்ஃபிங் செய்யும் போது தனது போன் அடங்கிய பையினை கழுத்தில் மாட்டில் கொள்வார். பின்பு இது போன்று சர்ஃபிங் செய்யும் போது எப்படியோ பையைத் தொலைத்திருக்கிறார் அட்ஃபீல்டு.
465 நாடகள் கடலில் இருந்த ஐபோன் ஆனால் தொலைந்து போன ஐபோன் மீண்டும் கிடைக்கும் என்று கனவிலும் எதிர்பார்க்கவில்லை என்று கூறியுள்ளார் அட்ஃபீல்டு. மேலும் 465 நாட்கள் கடலில் இருந்த ஐபோன் மீண்டும் சரியாக வேலை செய்யும் என்பதை நம்ப முடியவில்லை என்று
குறிப்பாக ஆப்பிள் நிறுவனம் எப்போதும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் தான் போன்களை தயாரிக்கிறது. மற்ற நிறுவனங்களை விட சிறந்த தரம் மற்றும் அருமையான பாதுகாப்பு அம்சங்களை கொடுக்கிறது ஆப்பிள் நிறுவனம். அதேசமயம் இந்நிறுவனம் சற்று உயர்வான விலையில் தான் சாதனங்களை அறிமுகம் செய்கிறது. ஆனால் விலைக்கு தகுந்த அனைத்து அம்சங்களும் இதன் சாதனங்களில் இருக்கும்.
thanks
https://tamil.gizbot.com/
Comments