திருவள்ளூர் மாவட்டம் ஆவடி மாநகராட்சி அரசு உயர்நிலைப் பள்ளியில் உலக பெண் குழந்தைகள் வன்முறை தடுப்பு தின விழிப்புணர்வு
திருவள்ளூர் மாவட்டம் ஆவடி மாநகராட்சி அரசு உயர்நிலைப் பள்ளியில் உலக பெண் குழந்தைகள் வன்முறை தடுப்பு தின விழிப்புணர்வு இன்று (18.11.2022)காலை 9:30 முதல் 11 மணி வரை நடைபெற்றது.
இனிஉதயம் தொண்டு நிறுவனம்(IUCT) மற்றும் பெண்கள் முன்னேற்றம் மற்றும் ஆராய்ச்சி மையம்(CWDR) இணைந்து நடத்திய உலக பெண் குழந்தைகள் வன்முறை தடுப்பு தின விழிப்புணர்வு நிகழ்வு பள்ளி தலைமை ஆசிரியர் திரு ராஜு அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் இனிஉதயம் தொண்டு நிறுவனத்தின் தலைமைச் செயல்பாட்டாளர் திரு அல்லா பகேஷ் முன்னிலை வகித்தார்
. பெண் குழந்தைகளுக்கு ஏற்படும் பலவிதமான அச்சுறுத்தல்கள் பாதுகாப்புயின்மை ஆகியவற்றை முன்னிலைப்படுத்தி “உலக பெண் குழந்தைகள் வன்முறை தடுப்பு தின விழிப்புணர்வு” நிகழ்வு நடத்தப்பட்டது. பெண் குழந்தைகளிடம் இதை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த பயிற்சியாளர் சரண்யா தேவிMSW அவர்கள் வந்திருந்து பெண் குழந்தைகளுக்கு ஏற்படக்கூடிய வன்முறைகளை எவ்வாறெல்லாம் பாதுகாப்புடன் இருக்கலாம் என்பதை பற்றி பெண் குழந்தைகளிடம் மிகத் தெளிவாக எடுத்துரைத்தார். பெண் குழந்தைகள் வாழ்வில் கல்வியை சிறப்பாக கற்றுக்கொள்ள வேண்டும். பெண் குழந்தைகளிடத்தில் மிக மிக அதிகமாக தன்னம்பிக்கை இருக்கவேண்டும். இந்த காலகட்டத்தில் ஏற்படக்கூடிய அனைத்து விதமான வன்முறைகள் ஏற்படாமல் இருக்க தன்னம்பிக்க பாதுகாப்பாக அமையும். அதற்கான வழிமுறைகளையும் பயிற்சியாளர் சரண்யா தேவி அவர்கள் சிறப்பாக விளங்கினார்.
இந்த நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக பள்ளி மேலாண்மை குழு தலைவர் திருமதி அனுபிரியா அவர்களும் மற்றும் பள்ளி மேலாண்மை குழு உள்ளாட்சி பிரிதிநிதியும்,35வது வார்டு மாமன்ற உறுப்பினரும் ஆவடி மாநகராட்சி கல்வி குழு தலைவருமான திருமதி கீதா அவர்களும் 15க்கு மேற்பட்ட ஆசிரியர்களும் இனிஉதயம் தொண்டு நிறுவனத்தின் திருமதி பவித்த ரஞ்ஜனி அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இந்த நிகழ்வில் 250 க்கு மேற்பட்ட பெண் குழந்தைகள் கலந்துக்கொண்டுபயனடைந்தனர்
.
Comments