*உங்கள் உடல்* *ஆரோக்கியத்திற்கு* *இதை ட்ரைப்* *பண்ணிப்பாருங்க*

 *உங்கள் உடல்* *ஆரோக்கியத்திற்கு* *இதை ட்ரைப்* *பண்ணிப்பாருங்க* !!



இதயத்துக்கு ஆரோக்கியம் அளிக்கும் நல்ல கொழுப்பு, உடல்நலத்தைக் காக்கும் செலினியம் போன்றவை நட்ஸ் வகை உணவுகளின் அதிகம் உள்ளது. எனவே தினசரி ஒரு கைப்பிடியளவுக்கு பாதாம் பருப்பு, வேர்க்கடலை போன்ற நட்ஸ் வகை உணவுகளை சாப்பிடுவதன் மூலம் உடல் நலத்தை ஆரோக்கியத்துடனும், இளமையுடனும் வைத்துக்கொள்ள முடியும்.


👉 காலை உணவை தவிர்க்காமல் சாப்பிடுங்கள். காலை உணவையும், இரவு உணவையும் 11 மணிக்கு மேல் சாப்பிடாமல், 8 முதல் 9 மணிக்குள் சாப்பிட பழகிக் கொள்ளுங்கள்.


👉 அதிக பசியின்போது அதிகமாக உணவை சாப்பிடக்கூடாது. இது உடல்நலப் பிரச்சனைகளையும், உடல் பருமனையும் ஏற்படுத்தும்.


👉 தினந்தோறும் அளவாக காபி பருகுவதன் மூலம் சர்க்கரை நோய், உணவுக் குழாய் கேன்சர், ஈரல் நோய்களைத் தடுக்கலாம். உங்கள் தினசரி உணவில், கொழுப்பு 20 கிராம்களுக்கு அதிகமாக இருக்கக்கூடாது.


👉 ஆரோக்கிய வாழ்வுக்கு அடித்தளமிடுவதில் பழங்கள் மற்றும் காய்கறிகளின் பங்கு அதிகம் உள்ளது. எனவே 5 வகை பழங்கள், காய்கறிகளை தினந்தோறும் சாப்பிடுங்கள். உங்களால் முடிந்த உடற்பயிற்சிகளை தினந்தோறும் மேற்கொள்ளுங்கள்.


👉 பழங்கள், காய்கறிகளில் உள்ள ஆன்டி - ஆக்ஸிடன்ட்கள் கேன்சர், இருதய நோய்கள் போன்ற பல நோய்களைத் தடுக்கும் ஆற்றல் கொண்டவை. மேலும் நோய் எதிர்ப்புச் சக்தி நிறைந்த காய்கறி மற்றும் பழங்களை எடுத்துக் கொள்வது மிகவும் நல்லது.


👉 பருவமடைந்த பெண்கள் தினமும் 6 கிராமுக்கு மேல் உப்பு சேர்க்க வேண்டாம். சமையல் செய்யும் போது மட்டும் உப்பை பயன்படுத்தலாம்.


👉 வாரத்தில் இருமுறையாவது மீனை உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள். இரண்டில் ஒன்று எண்ணை வகை மீனாக இருந்தால் நல்லது. ஏனெனில் கொலஸ்ட்ராலை குறைத்து, இதய நோய் அபாயத்தைக் கட்டுப்படுத்தக்கூடிய ஒமேகா 3 பேட்டி ஆசிட் எண்ணை செறிந்த மீன்களில் அதிகம் உள்ளது.


👉 குளிர்பானத்தைத் தொடர்ந்து பருகுவது தொப்பை உண்டாவதற்கு ஒரு முக்கியக் காரணம். எனவே டயட் குளிர்பானங்களை அருந்தலாம் அல்லது ஜுஸுடன் அதிக தண்ணீர் சேர்த்துப் பருகலாம்.


👉 உணவை நன்றாக மென்று சாப்பிடுவது உடல் நலத்திற்கு மிகவும் நல்லது. நீங்கள் ஒருமுறை உணவை விழுங்கும் முன்பு 15 முறை மெல்ல வேண்டும். 







 

.



Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி