வில்லிவாக்கம் God's Love to the Needy சமூக நல அறக்கட்டளை மற்றும் சிங்காரம் பிள்ளை NSS சார்பாக 02.10.2022 காந்தி ஜெயந்தியை முன்னிட்டு மாபெரும் இரத்த தான முகாம்
சென்னை, வில்லிவாக்கம் God's Love to the Needy சமூக நல அறக்கட்டளை மற்றும் சிங்காரம் பிள்ளை NSS சார்பாக 02.10.2022 காந்தி ஜெயந்தியை முன்னிட்டு மாபெரும் இரத்த தான முகாம் வில்லிவாக்கம் சிங்காரம் பிள்ளை ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. 50க்கும் மேற்பட்ட தன்னார்வ ரத்த கொடையாளர்கள் பங்கேற்றனர். சேகரிக்கப்பட்ட இரத்தத்தை சென்னை, எழும்பூர் அரசு தாய் சேய் மகப்பேறு மருத்துவமனையில் தலசீமியா நோய்க்கு சிகிச்சை பெறும் குழந்தைகளுக்கு வழங்கப்பட்டது.
சிங்காரம் பிள்ளை நாட்டு நல பணி திட்ட அலுவலர் திரு. K. வைத்தியநாதன் மற்றும் அறக்கட்டளை தலைவர் V.D.சாமுவேல் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு சிங்காரம் பிள்ளை மேல்நிலைப்பள்ளி நிருபர் திரு. விஸ்வநாதன், தலைமை ஆசிரியர் திரு. அழகுவேல், துணை தலைமை ஆசிரியர் திரு.சிந்தனைச்செல்வன், சமூக ஆர்வலர் திரு K.M.ராஜன், TAAMS துணை தலைவர் திரு V. தேவதானம், திரு V. வினோத், திரு. V. வெங்கடேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Comments