தீபஒளித்திருநாள் வாழ்த்துகள்
தீபஒளித்திருநாள்
வாழ்த்துகள்
*
எழுசீர் விருத்தம்
*
மா மா மா காய்
மா மா காய்
*
தீப ஒளியால் திருப்பம்
விளைந்துமே
தேவை முழுதாய் நிறையவும்
கோபச் செயலால் கொடுமை
விலகியே
கூடும் உறவை வணங்கவும்
சாப மொழியால் சகத்தை
அழிக்கவே
சாடும் வகையோர் திருந்தவும்
தூபப் புகையால் தொழுது
வணங்கவே
தூயத் திருநாள் வருகவே.
.. முனைவர் ச.பொன்மணி
Comments