மினி மீல்ஸ்*

 


மினி மீல்ஸ்*


திசுக்களின் நண்பன் பருப்பு


‘நீ என்ன பருப்பா’ என்று கோபத்தில் சிலர் கேட்பார்கள். பருப்பு அவ்வளவு பெரிய பருப்பா என்று கேட்டால், ‘ஆமாம்பா ஆமாம்’ என்கிறார்கள் உணவியல் நிபுணர்கள். இதற்குக் காரணம் பருப்பில் நிறைந்துள்ள புரோட்டின் எனப்படும் புரதச்சத்து. அந்தப் புரோட்டின் என்பது என்ன என்றுதான் இப்போது சுருக்கமாகப் பார்க்கப் போகிறோம். நம் உடலில் புரோட்டின் இல்லாத இடமே இல்லை. நீருக்கு அடுத்தபடியாக உடலில் நீக்கமற நிறைந்திருப்பது புரதச்சத்துதான். உடலில் உள்ள ஒவ்வொரு செல்லிலுமே இது அமர்ந்திருக்கிறது. உடலின் ஒவ்வொரு பாகத்தையும் நிறைத்திருப்பது இதுதான். குறிப்பாக, நம்முடைய சதைப்பகுதி என்பது புரதத்தால் நிறைந்ததுதான். முடியிலும், சருமத்திலும்கூட புரதச்சத்து நிறைந்திருக்கிறது.


உடல் எனும் கட்டடத்தை உருவாக்கும் செங்கற்கள்தான் திசுக்கள் என்றால் அதில் நிறைந்திருக்கும் செம்மண்தான் புரதங்கள். மேலும், இவையே உடல் இயங்கத் தேவையான ஆற்றலை உருவாக்கும் கார்போஹைட்ரேட்களின் அடர்த்தியை வடிவமைப்பதாகவும் உள்ளன. புரோட்டினின் முக்கியமான பண்புகளில் ஒன்று அதில் இருக்கும் அமினோ அமிலச் சங்கிலித் தொடர்கள். புரதச்சத்து என்பதே இந்த அமினோ அமிலகளாலான பாலிமர் சங்கிலித் தொடர்கள்தான்.


இதில், ஒன்பது வகையான அமினோ அமிலங்கள் உள்ளன என்கிறார்கள். இந்த ஒன்பதின் பெயர்களையும் நாம் உச்சரிக்க முயன்றால் நாக்கு சுளுக்கிக்கொள்ளும் என்பதால் இங்கு அதைச் சொல்லவில்லை. மேலும், உடலில் உள்ள அமினோ அமிலங்கள் ஒன்பதா எட்டா என்பதில் விஞ்ஞானிகளுக்கிடையே இன்னமும் பட்டிமன்றம் நடந்துகொண்டிருக்கிறது. காரணம், ஒன்பதாவது அமினோ அமிலமான ஹிஸ்டிடைன் வளர்ந்தவர்கள் உடலில் காணப்படுவதில்லை என்பதால் ஒரு க்ரூப் அதை முக்கியமான வகைமையாகக் கருதுவதில்லை.


பருப்புகள், லெக்யூம்ஸ் எனப்படும் அவரை, பீன்ஸ் போன்ற காய்கறிகள், சோயா, பால், முட்டை, மீன், நட்ஸ் போன்றவற்றில் பல்வேறு வகையான புரதச்சத்துகள் நிறைந்துள்ளன. இதில், சில உணவுகள் லீன் புரோட்டின் எனப்படும். இவற்றை எடுத்துக்கொள்ளும்போது அளவான புரதச்சத்து உடலுக்குக் கிடைக்கும்.சாளுக்கிய அரசனின் அன்னபோகம் மேலைச் சாளுக்கியர்களில் மூன்றாம் சோமேஸ்வரன் முக்கியமான அரசன். கி.பி.1126 முதல் கி.பி.1138 வரை கல்யாணி என்ற நகரைத் தலைநகராகக்கொண்டு ஆண்ட அரசனவன்.


அந்நகரின் இன்றைய பெயர் பிடார். இது கர்நாடகாவில் அமைந்துள்ளது. ஹொய்சால அரசனான விஷ்ணுவர்தனை தோற்கடித்த இவ்வரசன் ஆந்திர, திராவிட (அதாவது சேர, சோழ, பாண்டிய) மகத, நேபாள அரசர்களை வென்றதாக இவனது கல்வெட்டு கூறுகிறது. இந்த மன்னன் அபிலாஷிதாரத சிந்தாமணி என்ற சமஸ்கிருத நூலை இயற்றியிருக்கிறார். இதனை

மனசொல்லாசா என்றும் சொல்வார்கள். இந்த நூலில் அன்னபோகம் என்ற பகுதியில் உணவு பற்றிய குறிப்புகள் உள்ளன. அசைவம் மற்றும் சைவ உணவுகள் பற்றியும் அவற்றை சமைக்கும் முறை பற்றியும் பதிவு செய்யப்பட்டுள்ளது.


இந்நூலில் குறிப்பிடப்படும் பல உணவுகள் இன்றும் மஹாராஷ்ட்ரா, கர்நாடகா, தமிழ்நாடு, ஆந்திராவில் தயாராகின்றன என்பதுதான் சுவாரஸ்யம். குறிப்பாக, இட்லி, தோசை, வடை, தாஹிவடை, போளி, வடியன், லட்டு ஆகியவற்றைச் சொல்லலாம். அந்நாட்களில் அரசர்களுக்கு தங்கத் தட்டில்தான் உணவு பரிமாறப்பட்டிருக்கிறது. இந்த நூலைப் பற்றிய இந்திய உணவியல் ஆய்வுகளின் தந்தை அக்சயா தனது ‘இந்திய உணவுகள்: ஒரு வரலாற்றுத் துணைவன்’ என்ற நூலில் விரிவாகப் பதிவு செய்துள்ளார்.


தி கிரேட் பூசணிக்காய்


பலருக்கு


ம் தோட்டம் அமைத்தோ மாடித்தோட்டத்திலோ காய்கறிகள், கீரை வளர்ப்பது  வழக்கம்.  இத்தாலியில் டஸ்கன் என்ற விவசாயி 2,707 பவுண்டுகள் எடையுள்ள பூசணிக்காயை இயற்கை முறையில் பராமரித்து அதை பிரமாண்டமாக வளர்த்து கின்னஸ் சாதனையில் இடம் பிடித்துள்ளார். அதனை தொடர்ந்து, சில மாதங்களிலேயே 63 வயதான  நியூயார்க் விவசாயி ஆண்ட்ரூஸ்  தோட்டத்தில் விளைந்த பரங்கிக்காய் அதைவிட பிரம்மாண்டமாக வளர்ந்து அனைவரையும் வியக்க வைத்துள்ளது.  தி கிரேட் பூசணிக்காய் என்ற பெயரைப் பெற்றுள்ளது. இதன் எடை 2554 பவுண்ட் அதாவது 1158 கிலோ.

...

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி