உலக பக்கவாத நோய் விழிப்புணர்வு தினமின்று
உலக பக்கவாத நோய் விழிப்புணர்வு தினமின்று
பக்கவாத நோய் பாதிப்புகளிலிருந்து தப்பிக்க வேண்டுமெனில் பக்கவாத நோயைப் பற்றிய பல்வேறு உண்மைகளை நாம் அனைவரும் அறிந்துகொள்ள வேண்டிய மிக மிக அவசியமாகும்.
பக்கவாதம் என்றால் நம் உடலில் உள்ள ஒரு பாதி முகம், கால், கை செயல் இழந்து போதல். இந்த நிலை எப்படி வருகிறது என்றால் நம் மூளையின் ஒரு பாதிக்கோ அல்லது ஒரு பகுதிக்கோ ரத்த ஓட்டம் தடைப்பட்டால் அல்லது அந்தப் பகுதி மூளை அதன் செயலாற்றலை இழந்துவிடும். அதனால் கை, கால்கள் செயல் இழந்து நோயாளி படுத்த படுக்கையாகிவிடுவார்.
சிலருக்குப் பேசும் திறன் அற்றுப்போகும். ஆதலால் இந்த நோயை ஆரம்பக் கட்டத்திலேயே அறிந்து அதற்கு சிகிச்சை அளிப்பதன் மூலம் மூளையைக் காப்பாற்றி நோயாளியை நிரந்தர ஊனத்திலிருந்து காப்பாற்றலாம்.
இந்த நோய் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தாக்கினாலும், 50 வயது கடந்தவர்களையே, அதிகமாக பாதிக்கிறது. இந்த நோய் பாதிப்பு வராமல் தடுக்க சில வழிமுறைகளை பின்பற்றலாம். உடல் எடையை சீராக பராமரிப்பது மிகவும் முக்கியமானது. மன அழுத்தம் பாதிக்காதவாறு, உடலையும், மனதையும் உற்சாகமாக வைத்துக்கொள்ளுங்கள். புகை, மது பழக்கத்தை தவிர்க்க வேண்டும். இதையெல்லாம் வலியுறுத்தும் வகையில்தான், ஆண்டுதோறும் அக்டோபர் 29-ந் தேதியை, 'உலக பக்கவாத நாள்' என்று கடைப்பிடித்து வருகிறோம்.
Comments