அருட்திரு வள்ளலார் பூமியில் ஜனனம் கொண்ட தினம் இன்று


 அருட்திரு வள்ளலார் பூமியில் ஜனனம் கொண்ட தினம் இன்று


வாடிய பயிரை கண்ட போதெல்லாம் வாடினேன்

என பாடிய எம் அன்பு சித்தர் வடசென்னையில் வாழ்ந்து, 9வது வயதிலேயே கந்தகோட்ட முருகனுக்கு பாமாலை பாடிய கலியுக ஞானசம்பந்தர் எம் வள்ளலார் சுவாமிகள்.


திருவொற்றியூர் தியாகேசப் பெருமானிடம் இராமலிங்கர் ஈடுபாடு கொண்டவர். அடிக்கடி கோயிலிலேயே தியானத்தில் மூழ்கிவிடுவார்.


ஒரு முறை வீட்டுத் திண்ணையில் பசியோடு வருந்திய இராமலிங்கரின் பசி தீர்க்க வடிவுடையம்மையே நேரில் வந்தார். அந்த நள்ளிரவு நேரம் இராமலிங்கரின் தமக்கையார் உருக்கொண்டு வந்த அம்மை அவருக்கு உணவளித்துச் சென்றார்.


வடிவுடையம்மனுக்கு அவர் மீது கொண்ட அளவற்ற பக்தியால் வடிவுடை மாணிக்க மாலை என்னும் 100 பாடல் கொண்ட பாமாலை பாடியுள்ளார் அருட்திரு.வள்ளாலார் சுவாமிகள்


ஆங்கிலேய ஏகாதிப்பத்தியத்தில் இன்னல் பல கண்டாலும், ஆங்கிலேயர்களே அவரின் பக்தியின் உண்மை கண்டு மெய்சிலிர்ந்து போனார்கள். ஆம் ஆங்கிலேயர்கள் வழக்காடு மன்றத்தில் நடந்த அற்புதமே அதற்கு சான்று.


கையில்  வள்ளலார் சுவாமிகளை கைவிலங்கிட்டு (வடசென்னை தங்கசாலை பகுதியில்)  அழைத்து செல்லும் போது திடீர் என்று பைத்தியகார உருவில் இருந்த சித்தர் பெருமான் ஒருவன், மனிதனை நாய் விலங்கிட்டு செல்கிறது, பிற மிருகங்கள் அதனை பார்கிறார்கள் என்று கூறி, இவனே மனிதன், இவனே மனிதன் என்று திசை தெரியாமல் மறைந்தார் என்ற கூற்றும் உண்டு.


அவர் வாழ்ந்த ஏழு கிணறு பகுதிக்கு 1980களில் வள்ளலார் நகர் என்று தமிழக அரசால் பெயர் வழங்கப்பட்டது. பேருந்து நிலையத்திற்கும் அப்பெயரே வைக்கப்பட்டுள்ளது.


ஆனால் மெட்ரோ இரயில் நிலைத்திற்கு மட்டும் வைக்கப்படவில்லை, தமிழக அரசும், இராயபுர சட்டமன்ற உறுப்பினர் திரு.ஜடிரிம்ஸ் மூர்த்தி அவர்கள் இதனை தமிழக அரசுக்கு தெரிவித்து வள்ளலார் புகழ் ஓங்க உதவ வேண்டும்... 

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி