விளக்குகள் அணைந்திருக்கும் இயந்திரங்கள்
ஒரு நாள் இங்கே
விளக்குகள் அணைந்திருக்கும்
இயந்திரங்கள்
கண்மூடி தியானித்திருக்கும்
தோலுரிந்த சன்னல் கம்பிகளில்
சிலந்திகளுக்கு வலைபின்ன
கத்துக் கொடுக்கும்
பாடசாலையாயிருக்கும்
அன்றும் இங்கோர்
தெருக்கூத்து நிகழும்
அன்றும் இங்கோர்
கவிதை களம் ஏறும்
இடிந்ததும் இறந்ததும்
உதிர்ந்ததும் உறைந்ததும்
நீரும் நிலமும் கல்லும் மண்ணும்
இன்னும் எல்லாமும்
கதை சொல்லுது இங்கே
எனினும் சிலர் கேட்கின்றனர்
மானிடப் பிறவியின்
நோக்கம் என்ன என்றே?
-தீபா ஶ்ரீதரன்
Comments