மனசுகுள்ள இருந்து பேசுவதுதான் சேரன்..!

 


மனசுகுள்ள இருந்து பேசுவதுதான் சேரன்..!

தமிழ் சினிமா சினிமாவின் மறக்கமுடியாத இயக்குனர் “சேரன்” என்றே சொல்லலாம். இவர் இயக்கிய முதல் படத்தில் தனது முத்திரையை ஆழமாகப் பதித்து விட்டார். பாரதிராஜா வைப்போல் கிராமத்துப் பின்னணியில் படத்தை இயக்கும் ஆர்வம் கொண்ட இவர், கேஎஸ் ரவிக்குமார் அவர்களின் உதவி இயக்குனராக பணியாற்றினார். மூன்றுமுறை தேசிய விருதுகளை பெற்ற இயக்குனர் என்ற பெருமையையுடன் வளம் வரும் இயக்குனர் சேரன்.
சேரனின் ஆரம்பகால வாழ்க்கை
சேரன், மதுரையில் உள்ள பழையூர்பட்டி என்ற கிராமத்தில் பிறந்தார். இவரின் தந்தை “பாண்டியன்” அங்கு உள்ள திரையரங்குகளில் ப்ரொஜெக்டர் ஆபரேட்டராக பணியாற்றி வந்தார். இதனாலேயே இவருக்கு சினிமா மேல் ஆர்வம் அதிகரித்தது. இவரின் தாய் பெயர் “கமலா”. இவர்களைப் பிரிந்து சென்னைக்கு சினிமாவில் சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்திற்கு வந்துள்ளார். ஆரம்பத்தில் கிடைத்த வேலைகளை செய்து வந்த இவர் “புரியாத புதிர்” படத்தில் உதவி இயக்குனராகவும், “சேரன் பாண்டியன்” “நாட்டாமை” போன்ற படத்தில் அசோசியேட் இயக்குனராக பணியாற்றினார்.
வாழ்க்கையை மாற்றிய படங்கள்
1997ஆம் ஆண்டு முரளி நடிப்பில் வெளியான திரைப்படம் தான் “பொற்காலம்”. இந்த படத்தில் சேரன், அண்ணன் தங்கை பாசத்தை அற்புதமாக வெளிக்காட்டி இருந்தார். இதன் தாக்கத்தினால் இந்த திரைப்படம் தேசிய விருதை பெற்றது. இவர் இயக்குநர் ஆக அறிமுகம் ஆன படம் “பாரதி கண்ணம்மா”.அதில் பார்த்திபன், மீனா நடித்திருந்தார்கள். இது மிகப்பெரிய வெற்றியை அடைந்தது. 2000 வருடம் மிகப்பெரிய நிறுவனங்கள் ஏமாற்றம் தொழில் நடத்தி வந்த காலங்கள் அது, அதன் தாக்கத்தினால் “வெற்றிக்கொடிகட்டு” என்ற படத்தை இயக்கியிருந்தார். இதைத்தொடர்ந்து முதல்முதலாக “ஆட்டோகிராஃப்” என்ற படத்தை இயக்கி நடித்திருந்தார் சேரன். ஒரு மனிதனின் நான்கு கட்ட வாழ்க்கையை அற்புதமாக சொல்லி இருக்கும் படம் அது.
விருதுகள்
இவரின் படங்களின் மூலமாக ரசிகர்களை கவர்ந்தது மட்டுமல்லாமல், பல விருதுகளையும் அள்ளினார். கிட்டத்தட்ட 3 தேசிய விருதுகள், 5 தமிழக விருதுகள் மற்றும் ஏராளமான பிலிம்பேர் விருதுகளையும் பெற்றார்.
தந்தை-மகன் பாசத்தை ஓர் திரை நாவலாக வெளியிட்ட திரைப்படம்தான் “தவமாய் தவமிருந்து”. இதுவரை யாரும் எதிர்பார்க்காத முற்றிலும் மாறுபட்ட கதைக்களத்தை கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம் இது. ஓர் அச்சகத் தொழிலாளர் தனது குடும்பத்தை எப்படி வழிநடத்தி தனது வாழ்க்கையை முழுமை அடைய செய்கிறார் என்பதே இப்படத்தின் கதை. கிட்டத்தட்ட மூன்று மணி நேரத்திற்குமேல் ஓடும் இந்த திரைப்படம் எல்லோரின் கவனத்தையும் ஈர்த்தது.
அதைத் தொடர்ந்து “பிரிவோம் சந்திப்போம்”, “ராமன் தேடிய சீதை”, “மூன்று பேர் மூன்று காதல்”, “யுத்தம் செய்” போன்ற படங்களில் நடித்து தனது நடிப்பு திறமையை வெளிக்காட்டினார். கடைசியாக “திருமணம்” என்னும் படத்தை இயக்கினார். ஆனால் படம் வசூல் ரீதியாக வெற்றி அடையவில்லை. இதைத் தொடர்ந்து அவரின் அடுத்தப் படத்திற்கான முயற்சியை மேற்கொண்டு வருகிறார்.
எனவே தன் வாழ்வில் மிக உச்சத்தை அடைந்து இப்போது மீண்டும் ஒரு வெற்றிக்காக ஏங்கிவரும் கலைஞர் இந்த சேரன். மிக விரைவில் இவரின் அடுத்த திரைப்படம் வெளியாக உள்ளது, இத்திரைப்படம் மக்களின் மனதில் எவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தப் போகிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
இணையத்தில் இருந்து எடுத்தது

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி