ஈரான் அமைப்புக்கு அமெரிக்கா பொருளாதார தடை..!!*

 ஈ


ரான் அமைப்புக்கு அமெரிக்கா பொருளாதார தடை..!!*


சல்மான் ருஷ்டியின் தலைக்கு விலை நிர்ணயித்த ஈரான் அமைப்புக்கு அமெரிக்கா பொருளாதார தடை விதித்தது.

வாஷிங்டன்,


பிரபல எழுத்தாளர் சல்மான் ருஷ்டி, 'சாத்தானின் கவிதைகள்' என்ற நூலை எழுதியதற்காக அச்சுறுத்தலுக்கிடையே வாழ்ந்து வருகிறார். கடந்த ஆகஸ்டு மாதம், அமெரிக்காவில் நியூயார்க் நகரில் ஒரு இலக்கிய நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவர் மீது ஒருவர் கொலைவெறி தாக்குதல் நடத்தினார்.


அதில், சல்மான் ருஷ்டி ஒரு கண் பார்வையை இழந்தார். ஒரு கையின் செயல்பாட்டை இழந்தார்.


இதற்கிடையே, சல்மான் ருஷ்டியை கொலை செய்பவருக்கு பல கோடி டாலர் பரிசாக வழங்கப்படும் என்று ஈரான் நாட்டைச் சேர்ந்த கோர்டாட் பவுண்டேசன் என்ற அமைப்பு அறிவிப்பு வெளியிட்டு இருந்தது. அந்த அமைப்புக்கு அமெரிக்கா நேற்று பொருளாதார தடை விதித்தது. அமெரிக்க நிதித்துறையின் வெளிநாட்டு சொத்து கட்டுப்பாட்டு பிரிவு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.


''உலகளாவிய கருத்து சுதந்திரம், மத சுதந்திரம், பத்திரிகை சுதந்திரம் ஆகியவற்றுக்கு ஈரான் ஆட்சியாளர்களால் ஏற்படும் அச்சுறுத்தலை அமெரிக்கா வேடிக்ைக பார்க்காது'' என்று அமெரிக்க நிதித்துறை தெரிவித்துள்ளது

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி