ஜெயலலிதா இறப்புக்கும் முந்தைய 28 மணி நேரத்துக்கும் இடையே நடந்தது என்ன? -


ஜெயலலிதா இறப்புக்கும் முந்தைய 28 மணி நேரத்துக்கும் இடையே நடந்தது என்ன
? - 


ஜெயலலிதா மரணம் குறித்து விசாரித்து வந்த நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கையில், ஜெயலலிதாவுக்கு ஆஞ்சியோ சிகிச்சை செய்யப்படாமல் இருக்க அப்போலோ மருத்துவர் தந்திரம் செய்தார் என்பன உள்ளிட்ட கடுமையான குற்றச்சாட்டுகள் கூறப்பட்டுள்ளன.


மேலும், டிசம்பர் 4ஆம் தேதி முதல் 5ஆம் தேதி வரை மருத்துவமனையின் என்ன நடந்தது என்பது பற்றிய முக்கிய தகவல்கள் இதோ:


ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன், 4.12.2016 அன்று பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மறைந்த முதல்வரின் சிகிச்சை அறையில் சலசலப்பு நிலவியதாகக் கூறினார். செவிலியர் மகேஸ்வரி, தான் பிற்பகல் 2 மணியளவில் பணிக்கு வந்ததாகக் கூறினார். அவரிடம் ஜெயலலிதா தொலைக்காட்சியை அணைக்க சொன்னதாகவும், சிறிது நேரம் கழித்து அவருக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டதாகவும் தெரிவித்தார். (பக்கம் - 532, 46.63)


4.12.2016 அன்று, நளினி என்ற தொழில்நுட்ப ஊழியர், பிற்பகல் 3.50 மணிக்கு முன்பு ஜெயலலிதாவுக்கு ECHO ஸ்கேன் எடுத்தார். ஆனால், எந்த நேரத்தில் இதய செயலிழப்பு ஏற்பட்டது என்று தனக்கு தெரியவில்லை என அவர் சாட்சியம் அளித்தார். அவர் அறைக்குள் சென்ற நேரத்தை வைத்து பிற்பகல் 3.50 மணியளவில் என அவர் உறுதிப்படுத்தினார். இன்ஸ்ட்ரூமென்ட் கிளீனரான காமேஷ் என்பவரின் சாட்சியத்துடன் நளினியின் சாட்சியத்தை இணைத்து, அவர் மதிவாணன், பஞ்சாபகேசன் மற்றும் அருண், மூன்று இன்ஸ்ட்ரூமென்ட் கிளீனர்கள் மற்றும் டாக்டர் ரமேஷ் ஆகியோருடன் இணைந்து ஜெயலலிதாவுக்கு இதய மசாஜ் செய்தார்.


சிபிஆர் மாற்றாகச் செய்யப்படலாம், எனவே அவர்கள் பயிற்சி பெறாத நபர்களின் உதவியைப் பெற்றனர். பின்னர் 'ஸ்டெர்னோடமி' செய்யப்பட்டது. டாக்டர் டி. சுந்தர் மற்றும் டாக்டர் டி. என். ராமகிருஷ்ணனின் சான்றுகளின்படி, உடல் அசைக்கப்படாமல், 15 நிமிடங்களுக்கு ஸ்டெர்னோடமி செய்யப்பட்டது. சி.பி. ஆர் செய்யும்போது ஸ்டெர்னோடமி செய்ய முடியாது என்று சொன்னார்கள். ஆனால், டாக்டர் மதன் குமார், சி.பி.ஆர் மற்றும் ஸ்டெர்னோடமியை ஒரே நேரத்தில் செய்யலாம் என்று கூறினார். (பக்கம் - 532, 533 - 46.64)


எக்கோ டெக்னீஷியனின் கூற்றுப்படி, 4.12.2016 அன்று, மாலை 3.50 மணிக்கே 'மாரடைப்பு' என்றால் என்னவென்று அவருக்குத் தெரியும். மேலும் (1) இதயம் செயல்படுகிறதா (2) Pericardial உள்ளதா மற்றும் வால்வுகளிலிருந்து கசிவு ஏதும் இல்லை போன்ற மூன்று பொருண்மைகளைக் கவனித்தார் அப்போது அங்கிருந்த Duty Doctor டாக்டர் ரமாதேவி இருப்பதாக விபிசி மானிட்டரில் அவரால் கவனிக்கப்பட்டதாகவும் இதயத்தின் VF மாறியது, இதயம் மட்டும் அதிர்ந்தது, ரத்த ஓட்டம் இல்லை என்று கூறினார். (பக்கம் 533 - 46.65)


மிகவும் குறிப்பிடத்தக்க வகையில், சி.பி.ஆர் உடன் ஒரே நேரத்தில் ஸ்டெர்னோடமி மேற்கொள்ளப்பட்டது மற்றும் அது சம்பந்தமாக, உடல்நிலை மோசமடைந்துக்கொண்டிருந்த மறைந்த முதல்வருக்கு சிகிச்சையளிக்க மூன்று அறுவை சிகிச்சை நிபுணர்கள் அழைக்கப்பட்டனர். ஸ்டெர்னோடமி செயல்முறையைத் தொடங்குவதற்கு முன்பு, டாக்டர் ராம தேவி கூறியது போல் மறைந்த முதல்வருக்கு ரத்தப்போக்கு அல்லது ரத்த ஓட்டம் எதுவும் இல்லை. இதுவே அவர் அப்போது உயிருடன் இல்லை என்பதைக் குறிக்கிறது. (பக்கம் - 533 - 46. 66)


ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையின் டீன், டாக்டர் ஆர். ஜெயந்தி, நாள்தோறும் சுமார் 12000 பேர் தனது மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதாக தனது சாட்சியில் கூறினார். சிபிஆர் மற்றும் ஸ்டெர்னோடமி பற்றி அவரிடம் கேட்டபோது, உடலில் ரத்த ஓட்டம் இருந்தால் ஸ்டெர்னோடமியின் போது, தோல் வெட்டப்பட்டால், ரத்தம் வர வேண்டும் என்றும் சி.பி.ஆர் செய்தால் அதிக ரத்தம் வெளியேறும் என்றும் கூறினார் ( பக்கம் - 534 - 46. 67)


இந்த விவகாரத்தில் டாக்டர். மினல் எம் வோராவின் மற்றொரு சாட்சியமும் உள்ளது. 04. 12. 2016 அன்று நள்ளிரவு 1 மணிக்கும் 2 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில், மறைந்த முதல்வரின் இதயத்தில் சில நிமிடங்களுக்கு ரிதம் கண்டதாகவும், மறைந்த முதல்வர் ECMO உடன் இணைக்கப்பட்ட பிறகு அவரின் கண் இமைகள் திறைந்து மூடியதாகவும், அவர் சுவாசித்ததாகவும் பின்னிட்டு 05. 12. 2016 அன்று காலை 9. 45 மணிக்கு அது பதிவு செய்யப்பட்டது எனவும் அவரின் முதன்மை விசாரணையில் தெரிவித்தார் (கோப்பு எண். 5, பக்கம் எண் 224).


அவரது குறுக்கு விசாரணையில் (பக்கம் எண். 10) , அதிகாலை 3.25 மணிக்கு 30 நிமிடங்களுக்கு தானாக ரிதம் இருந்ததாகக் கூறினார். (05.12. 2016 அன்று அதிகாலை 4.45 மணிக்கு கோப்பில் எழுதப்பட்டது). டாக்டர் ஏ.எல். அருள் செல்வன் மீண்டும் அழைக்கப்பட்ட போது, எய்ம்ஸ் மருத்துவக் குழுவின் முன்னிலையில், 4.12. 2016 இரவு மற்றும் 5. 12. 2016 அதிகாலையில் அவரது இடது pupillary response காணப்பட்டதாக அவரது சாட்சியத்தில் கூறினார்.


டாக்டர் கே.எஸ்.சிவக்குமார் தனது சாட்சியத்தில் 05. 12. 2016 அன்று அதிகாலை 3.25 மணிக்கு 30 நிமிடங்களுக்கு மறைந்த முதல்வரின் இதயம் செயல்பட்டதை குறித்து தனக்கு தெரிவிக்கப்படவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.


மேலும் அவர்கள் மறைந்த முதல்வரின் வாயில் ஸ்ட்ரா வைத்து, GAG -ஐ கண்டனர் அதுவும் அவருக்குத் தெரிவிக்கப்படவில்லை. எம்பாமிங் செய்வதற்கு 10-15 மணி நேரத்திற்கு முன்பே மரணம் நிகழ்ந்திருக்க வேண்டும் என்று கூறிய டாக்டர் சுதா சேஷய்யனின் சாட்சியத்துடன் ஒப்பிடும் போது, மேற்கண்ட கூற்றை ஏற்க முடியாது. (பக்கம் - 534, 535 - 46. 68)


எம்பாமிங் செய்வதற்கு 10 முதல் 15 மணி நேரத்திற்கு முன்பே இறந்தார்"


மருத்துவ பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரான டாக்டர் சுதா சேஷய்யன், இரவு 11.30 மணியளவில் எம்பாமிங் தொடங்கியபோது, மறைந்த முதல்வர் எம்பாமிங் செய்வதற்கு 10 முதல் 15 மணி நேரத்திற்கு முன்பே இறந்துவிட்டார் என கண்டறிந்தார். மேலும் மறைந்த முதல்வர் ECMO இல் இருந்தபோது மரணத்தை அறிவிக்க, அப்போலோ மருத்துவமனை 5.12 2016 அன்று AIIMS குழுவை வரவழைத்தது. அப்போதுதான் முதல்முறையாக தொராசிக் அறுவை சிகிச்சை நிபுணரிடம் ஆலோசனை பெற வேண்டும் என்று அவர்கள் நினைத்தார்கள். எய்ம்ஸ் மருத்துவர்கள் 5. 12. 2-16 அன்று மாலை 5.00 மணியளில் வந்து, நோயாளியின் உடல் வெப்பநிலைக்கு (normothermia) கொண்டு வருமாறு மருத்துவமனை அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டனர். மேலும் அவர்கள் இரண்டு முதல் மூன்று மணி நேரம் கழித்து பரிசோதித்து, இதய செயல்பாடு எதுவும் காணப்படவில்லை என்று கருத்துத் தெரிவித்தனர். எனவே மறைந்த முதல்வரை ECMO- இலிருந்து நீக்க அறிவுறுத்தினர். மாற்று அறுவை சிகிச்சை செய்யும் எண்ணமில்லாத போது ஏன் அவரை சாதாரண உடல் வெப்பநிலைக்கு அவர்கள் கொண்டுவந்தனர் (normothermia) என்பதை அவர்களால் விளக்க முடியவில்லை. இதிலிருந்து நளினியின் சாட்சியத்தின்படி, மாலை 3. 50 மணிக்கு மறைந்த முதல்வரின் மரணம் உறுதி செய்யப்பட்டது என்பதும், சிபி ஆர், ஸ்டெர்னோடமி மற்றும் AIIMS மருத்துவர்கள் குழுவை அழைத்தது முற்றிலும் நேரத்தை போக்குவது மற்றும் வீணானது என்பதையும் மிகவும் தெளிவாகிறது AIIMS மருத்துவரரான டாக்டர் வி. தேவ கெளரவ் பக்கம் எண். 2இல், சிபிஆர் செய்து 45 நிமிடங்களுக்குப் பிறகும், இதயம் செயல்படவில்லை என்றால், அவர்கள் அந்த நோயாளி இறந்ததாக அறிவிப்பார்கள் என்று கூறினார். அவருடைய இதயம் மீண்டும் செயல்படாது என்றும் அதை செயல்படுத்த முடியாது என்றும் நன்கு அறிந்த அவர்கள், ஏதோ ஒரு உள்நோக்கத்துடன் நேரத்தை நீட்டித்தனர். ( பக்கம் - 535, 536 - 46. 69)


மேற்கூறிய சான்றுகளிலிருந்து சுயநலம் கருதி மறைந்த முதல்வருக்கு மூளைச் சாவு ஏற்படாதது போல் தங்களைத் திருப்திப்படுத்துவதற்காக அப்போலோ மருத்துவமனை கேஸ் ஷீட்டில் ஒப்புதல் அளித்துள்ளது என்பது தெளிவாகிறது. ஆனால், 28. 9.2016 முதல் அவர் இறக்கும் வரை, ஏதேனும் குறைபாடு உள்ளதா என்பதை தெளிவுபடுத்தக்கூடிய ஒரு சாதாரண ஆஞ்சியோகிறாம் செய்ய யாரும் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதை ஆணையம் புரிந்து கொள்ள முடியாமல் திணறுகிறது. அதற்கான காரணமும் கோப்புகளில் குறிப்பிடப்படவில்லை. இது தொடர்பாக யாரிடமும் எந்த அறிக்கையும் இல்லை. ( பக்கம் - 536, 537 - 46.70).



மறைந்த முதல்வரின் இறந்த நேரம் முக்கியத்துவம் வாய்ந்ததும் நீண்டகால விளைவுகளை ஏற்படுத்துவதுமாகும். இறப்பு நேரம் அதிகாரப்பூர்வமாக 05. 12. 16, அன்று இரவு 11:30 மணி என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மருத்துவமனையில் மறைந்த முதல்வரின் இறுதி நேரத்தில் அவரை கவனித்துக்கொண்ட பாராமெடிக்கல் பணியாளர்களின் சாட்சியங்களுக்கும் இதற்கும் பெருமளவில் வேறுபாடுள்ளது. 04.12.16 அன்று பிற்பகல் 3.50 மணிக்கு மறைந்த முதலமைச்சருக்கு இதய செயலிழப்பு ஏற்பட்டது என்றும், இதயத்தில் மின்சார செயல்பாடு எதுவும் இல்லை மற்றும் இரத்த ஓட்டம் இல்லை என்பதே அவரின் உடல்நிலையை கண்காணித்து வந்த செவிலியர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் பணி மருத்துவர்கள் தெளிவான சாட்சியங்களும் சாட்சியங்கள் ஆகும் ( பக்கம் - 537, 46.71).


எக்கோ கார்டியோகிராம் மற்றும் அதனுடன் தொடர்புடைய நோய் அறிதல் நடைமுறைகளால்கூட மறைந்த முதல்வர் பயன் பெற தகுதியற்றவராக அறிவிக்கப்பட்டார். அப்படி இருக்கும்போது மறைந்த முதல்வருக்கு தாமதமாக சிபிஆர் செய்யப்பட்டது சாட்சியங்களின் சாட்சியத்தின் படி மாலை 4:20 மணிக்கு சிபிஆர் தொடங்கப்பட்டதாக கூறப்பட்டது. இந்த ஆணையத்தால் விசாரிக்கப்பட்டபோது மருத்துவமனையின் கருவி சுத்தம் செய்பவர்கள் மூன்று பேரால் சிபிஆர் செய்யப்பட்டது இயக்கத்தக்க வகையில் மறைந்த முதல்வரின் முதலில் மின் முறை மற்றும் ரத்த ஓட்டம் நிறுவப்பட்டல பிறகு அவரின் அந்த மாறமுடியாத நிலையில், அவரின் உடலில் சிபிஆர் செயல்முறை தொடங்கப்பட்டது ( பக்கம் - 537, 538 46.72).


செல்வி மகேஸ்வரி, செவிலியர், 04. 12. 2016 அன்று மதியம் பணிக்கு வந்ததாக அவரது சாட்சியத்தில் குறிப்பிட்டுள்ளார். மறைந்த முதல்வர் 04. 12. 2016 அன்று காலை உணவு எதையும் எடுத்துக் கொண்டதாகத் தெரியவில்லை. மேலும் அவர் பாலுடன் கார்ன்ஃப்ளேக்ஸை/ (cornflakes) எடுத்துக் கொண்டார். பகல் நேர முறைப்பணியில் இருந்தவர்கள் மறைந்த முதல்வர், மதியம் 1 மணியளவில் வாந்தி எடுத்ததாகக் கூறினர். அவர் பணிக்கு வந்தவுடன், உணவு உண்ண விரும்புகிறீர்களா எனக் கேட்க, அவர் காத்திருக்கும்படி சைகை செய்தார். பின்னர் தயாராக வைக்கப்பட்ட உணவை உண்ண மறுத்ததுடன், T.V பார்த்துக் கொண்டிருந்ததை அணைக்குமாறு கூறினார். சிறிது நேரத்திற்குப் பின்னர், அவர் சுவாசிப்பதற்கு சிரமமாக இருப்பதாக சைகை மூலம் அவரிடம் தெரிவித்தார் (பக்கம் 430, 431 - 40.9)


பிரேமா அந்தோணி, Incharge Nurse, 04.12. 2016 - அன்று அவர் இரண்டு முறை மறைந்த முதல்வரின் அறைக்குச் சென்றதாகக் கூறினார். அவரது கூற்றுப்படி, மறைந்த முதல்வர் காலை உணவை உட்கொண்டார். ஆனால், அவருக்கு அது தெரியாது. மேலும் மாலை 3.30 மணியளவில், அவர் கதவு வழியாக அவரைப் பார்த்தார். அவருக்கு உடல்நிலை சரியில்லை; CCU மருத்துவரும், தலைமை மருத்துவரும் அங்கேயே இருந்தனர். (பக்கம் 431 - 40.10)


பிரேமா அந்தோணி, பக்கம் எண் 2, கீழிருந்து 8 வது வரியில், கூறியதாவது:-


"04. 12. 2016- அன்று காலை வழக்கம் போல சிற்றுண்டி சாப்பிட்டார். அன்று மதியம் சாப்பிட்டார்களா என்று தெரியவில்லை அன்று பாக்கியம் 3: 30 மணி சுமாருக்கு அவருக்கு உடல்நிலை சரியில்லை என்றார்கள். CCU மருத்துவரும், chief டாக்டரும் அங்கிருந்தார். நானும் கதவுக்கு வெளியிலிருந்து பார்த்தேன். முதலில் இரண்டு மருத்துவர்கள் வந்தார்கள். நான் கண்ணாடி அறைக்கு வெளியில் நின்று கொண்டிருந்தேன். உள்ளே என்ன நடந்ததென்று எனக்குத் தெரியாது. முதல்வருக்கு கார்டியாக் அரெஸ்ட் ஏற்பட்டு விட்டதாக பின்னர் தெரிந்து கொண்டேன்." (பக்கம் 431, 432 - 40.11)


முதலில், இரண்டு மருத்துவர்கள் உள்ளே வந்தனர்; அதன் பிறகு, பல மருத்துவர்கள் வந்தனர்; உள்ளே நடந்தது என்னவென்று அவருக்குத் தெரியவில்னல. மறைந்த முதல்வருக்கு மாரடைப்பு ஏற்பட்டது என்று அவர்கள் கூறினர். பின்னர் மாரடைப்பு ஏன் ஏற்பட்டது, என்ன நடந்தது என்பனத அவரால் விவரிக்க முடியவில்லை. இதய செயலிழப்பிற்குப் பின்னர், மனறந்த முதல்வருக்கு என்ன ஆனது என்று அவருக்குத் தெரியாது. மேலும் அவருக்கு மனறந்த முதல்வர் ECMO உடன் இணைக்கப்பட்டுள்ளார் என்பதும், எப்போது வெளியே எடுக்கப்பட்டார் என்பது பற்றியும் அவருக்குத் தெரியாது. (பக்கம் 432 - 40.12)


'அழுகை சத்தம் கேட்டது'


பூங்குன்றன், 4.12.2016 அன்று, பிற்பகல் சுமார் 2.00 மணியளவில், மறைந்த முதல்வரின் அறைக்கு வெளியே நின்று கொண்டிருந்தப்போது, ஒரு மருத்துவர் உள்ளே சென்று வெளியே வந்தார்.


சிறிது நேரம் கழித்து, ஜெயலலிதாவின் அலறல் சத்தம் கேட்டது. அதன் பிறகு, பல மருத்துவர்கள் உள்ளே சென்று, அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது என்று தெரிவித்தார். வீர பெருமாள், கூடுதல் டிஜிபி, 4.12.2016 அன்று மாலை 4.30 மணியளவில், அழுகை சத்தம் கேட்டு, மறைந்த முதல்வரின் அறைக்குள் சென்றார். அப்போது, அழுது கொண்டிருந்த ஜெயலலிதாவை, செவிலியர்கள் வெளியே அழைத்து வருவதைப் பார்த்துள்ளார். (பக்கம் 432 - 40.13)



எம். நளினி, 4.12.2016 அன்று, பிற்பகல் சுமார் 3.50 மணியளவில் அவருடைய மாரடைப்பிற்குப் பிறகு, அவர் மறைந்த முதல்வருக்கு ECHO எடுத்தார் என்று கூறினார். அவர் ECHO எடுத்த போது, இதயம் செயல்படுவது நின்று விட்டதாகவும், மறைந்த முதல்வருக்கு மசாஜ் அளிக்கப்பட்டிருந்த ECHO தொடர்பான கோப்பு -கோப்பு எண்.23. தான் எடுத்த ECHO 04.12.2016 அன்றைய கோப்பில் இல்லை என்றும், அந்த ECHO-வை ஆராய்ந்தால், இதயத்தின் இறுதி அசைவுகள் தெரியும் என்றும் அவர் கூறினார்.


மறைந்த முதல்வருக்கு 04.12.2016-அன்று எடுக்கப்பட்ட ECHO வழக்கமானது அல்ல. ஆனால், மருத்துவர்களின் ஆலோசனைப்படி, அது அவசரகாலத்தில் எடுக்கப்பட்டது. பொதுவாக, ECHO எடுத்தால், அந்த நேரம் கருவியிலும், அறிக்கையிலும் காட்டப்படும். அதை அவர்கள் குறிப்பிடுவார்கள். அவரால் குறிப்பிடப்பட்டிருந்த நேரம் மாலை 3.50 ஆகும். அந்த நேரத்தில் தான் அவர் அங்கு சென்றிருந்தார். எந்த நேரத்தில், மறைந்த முதல்வரின் இதயத்தின் செயல்பாடு நின்றது என்பது அவருக்குத் தெரியவில்லை. கடைசியாக அவரால் எடுக்கப்பட்ட ECHO பதிவு செய்யப்படவில்லை; ஏனெனில் அது மறைந்த முதல்வருக்கு சிகிச்சையளிப்பதற்காக எடுக்கப்பட்டதாகும். மேலும், அவர் வெளியே அனுப்பப்பட்டார். தான் ECHO எடுத்ததைப் பற்றி ECHO தற்காலிக படிவத்தில் பதிவு செய்தார். பொதுவாக, ECHO எடுக்கும் நேரத்தை மருத்துவமனையே குறிப்பிடும். அப்போது டாக்டர். P.C. ஜெயின்தான் இதயநோய் நிபுணராக இருந்தார் என்பதும் அவருக்கு நினனவில் இல்லை என்றும் கூறியுள்ளார். (பக்கம் 433, 434 - 40.14.)


காணொளிக் குறிப்பு,

'ஜெயலலிதாவுக்கு கடைசி மூச்சு வரை நடக்காத ஆஞ்சியோ சிகிச்சை' - ஆணைய அறிக்கையில் முக்கிய தகவல்கள்

[19/10, 4:58 am] +91 99407 62319: *ஜெயலலிதா மரணம்: சசிகலா மீது ஆணைய அறிக்கை அடிப்படையில் நடவடிக்கை எடுக்க முடியுமா? - BBC News தமிழ்*



முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரித்த ஆறுமுகசாமி ஆணையம் சசிகலா, விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் குற்றம் செய்தவர்களாக முடிவு செய்திருப்பதாகக் குறிப்பிடுகிறது. இந்த அடிப்படையில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது கட்டாயமா, அப்படி முடிவு செய்தால் நேரடியாக நடவடிக்கைகள் எடுக்க முடியுமா? நடவடிக்கைகள் எப்படிப்பட்டவையாக இருக்கும்?


"விசாரணை ஆணையத்தின் அறிக்கையை நீதிமன்ற உத்தரவுபோல எடுத்துக் கொள்ளக்கூடாது" என்கிறார் சென்னை உயர்நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி அரி பரந்தாமன்.


"வி.கே.சசிகலா, மருத்துவர் சிவகுமார், அப்போதைய சுகாதாரத் துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன், அப்போதைய சுகாதார அமைச்சர் சி. விஜயபாஸ்கர் ஆகியோர் குற்றம் செய்தவர்களாக முடிவு செய்து, விசாரணைக்கு பரிந்துரைக்கிறது" என ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை குறிப்பிட்டுள்ளது.


இவர்கள் தவிர, "டாக்டர் ஒய்.வி.சி. ரெட்டி மற்றும் டாக்டர்.பாபு ஆபிரகாம் மறைந்த முதல்வருக்கு சிகிச்சை அளித்துள்ளனர். அவர்கள் மும்பை, பிரிட்டன் மற்றும் அமெரிக்க மருத்துவர்களை அழைத்து, ஆஞ்சியோ / அறுவை சிகிச்சை செய்வதற்கான கருத்தைப் பெற்றாலும், ஒரு தனிப்பட்ட நபரின் கட்டாயத்தினால் சட்ட விரோதமாக இலக்கை அடைவதற்காக அதை வெற்றிகரமாக செயல்படுத்தினர். எனவே, விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்." என்றும் ஆணையம் குறிப்பிடுகிறது.


அப்போலோ மருத்துவமனையின் தலைவர் பிரதாப் ரெட்டி, அப்போதைய தமிழக தலைமைச் செயலாளர் ஆகியோர் தொடர்பாகவும் விசாரிக்க வேண்டும் என்று ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.


அரசு நடவடிக்கை எடுக்க வேண்டியது கட்டாயமா?

ஆனால், "உண்மை கண்டறிவதற்காக அமைக்கப்படும் ஒரு அமைப்பின் அறிக்கையை அரசு ஏற்றுக் கொள்ளலாம், அல்லது ஏற்க மறுக்கலாம். அந்த அறிக்கையை அரசு ஏற்றுக் கொள்ள வேண்டும் என்கிற கட்டாயமில்லை." என்கிறார் வழக்கறிஞர் தமிழ்மணி.


"ஜல்லிக்கட்டு தொடர்பான ராஜேஸ்வரன் ஆணையத்தின் அறிக்கை அதிமுக ஆட்சிக் காலத்திலேயே அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டு விட்டது. ஆனால் இன்றுவரை அது சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படவில்லை. ஆனால் இந்த ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கை விரைவிலேயே சட்டப் பேரவையில் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது." என்று அவர் குறிப்பிட்டார்.


முன்னாள் நீதிபதி கற்பகவிநாயகம்


ஆயினும், "விசாரணை ஆணையத்தின் அறிக்கையின் முடிவுகள் வெறும் பரிந்துரைகள் மாத்திரமே. அது எந்த வகையிலும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசை கட்டுப்படுத்தாது." என்கிறார் அவர்.


விசாரணை நடத்த ஆணையம் பரிந்துரை செய்யலாமா?

"அதில் எந்தத் தவறும் இல்லை" என்கிறார் தமிழ்மணி.


அதே நேரத்தில், விசாரிக்க வேண்டும் என்று பரிந்துரை செய்யும் ஆணையமே அவர்களை விசாரித்திருக்கலாமே என்ற கேள்வி எழுகிறது. அதற்கு, "விசாரணை ஆணையத்துக்கு சில அதிகார எல்லைகள் இருக்கின்றன. மேலும் உயர்நீதிமன்றம் 3 ஆண்டுகள் இடைக்காலத் தடை விதித்ததன் காரணமாக, நிதி விரயம் என்ற கெட்டபெயர் ஆணையத்துக்கு வரத் தொடங்கியது. அதனால் விரைவாக முடிக்க வேண்டிய கட்டாயம் ஆணையத்துக்கு ஏற்பட்டிருந்தது. அதனால்தான் விசாரணையை அரசிடம் ஆணையம் ஒப்படைத்திருக்கிறது" என்கிறார் தமிழ்மணி.


அடுத்து என்ன நடக்கும்?

அரசின் முடிவைப் பொறுத்தே அடுத்த கட்ட நகர்வுகள் இருக்கும் என்பது சட்ட நிபுணர்களின் பொதுவான கருத்தாக இருக்கிறது.


"குற்றம் செய்திருப்பதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கும் சசிகலா உள்ளிட்ட 4 பேர் மீது காவல்துறையில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து விசாரணை செய்ய அரசு உத்தரவிட முடியும்" என்கிறார் தமிழ்மணி.


"முதலமைச்சரின் ஒப்புதலுடன் நடவடிக்கை எடுப்பது பற்றி தொடர்புடைய துறைகளுக்கு தலைமைச் செயலாளர் உத்தரவிட வேண்டும். அனேகமாக சிபிசிஐடிக்கு விசாரணை நடத்த உத்தரவிடலாம். அவர்கள் வழக்குப் பதிவு செய்து, குற்றம்சாட்டப்பட்டவர்களின் அலட்சியம், நோக்கம் ஆகியவை குறித்த தகவல்களை அவர்கள் திரட்டுவார்கள். அதன் அடிப்படையில் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யலாம். தேவைப்பட்டால் கைதுகூட செய்யலாம்" என்கிறார் ஜார்க்கண்ட் மாநில உயர்நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி கற்பக விநாயகம்.


ஆணைய அறிக்கையை அரசு கிடப்பில் போட வாய்ப்பிருக்கிறதா?

விசாரணை ஆணையத்தின் அறிக்கைகள் பெரும்பாலும் 'தோல்வியாகவே' முடிந்திருப்பதாக நீதிபதி அரிபரந்தாமன் கூறுகிறார். "விவகாரத்தின் சூட்டைத் தணிப்பதற்காகவே விசாரணை ஆணையங்கள் வழக்கமாக அமைக்கப்படுகின்றன. மிகவும் அரிதாகவே அவை பயனுள்ளதாக அமைந்திருக்கின்றன" என்கிறார் அவர்.


1980-களில் திருச்செந்தூர் கோயில் அதிகாரி கொலை வழக்கில் நீதிபதி பால் ஆணைய அறிக்கை போன்ற மிகச்சில விசாரணை அறிக்கைகள் மீதுதான் அரசுகள் நடவடிக்கை எடுத்திருக்கின்றன என்று அரிபரந்தாமன் குறிப்பிட்டார். 1980-களில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த கருணாநிதி, பால் ஆணைய அறிக்கையின் நகலை வெளியிட்டதன் காரணமாக அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆர். நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.


ஆனால் "அரசு கிடப்பில் போட முடிவெடுத்திருந்தால் அதை சட்டப் பேரவையில் தாக்கல் செய்திருக்க மாட்டார்கள்" என்கிறார் கற்பக விநாயகம். தற்போது அறிக்கை வெளியாகிவிட்ட நிலையில் அரசு தயக்கம் காட்டினால் அதை எதிர்த்து நீதிமன்றம் செல்லவும் வாய்ப்பிருப்பதாக அவர் கூறுகிறார்கள்.


அறிக்கையை எதிர்த்து நீதிமன்றம் செல்ல முடியுமா?

ஆணையத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பரிந்துரைகளை எதிர்த்து அதில் தொடர்புடையவர்கள் நீதிமன்றத்தை நாடலாமா என்று கேட்டபோது, "அவை வெறும் பரிந்துரைகள்தான்; உத்தரவு அல்ல என்பதால் யாரும் நீதிமன்றத்தை நாட மாட்டார்கள்" என்கிறார் அரிபரந்தாமன்.


ஆணையத்தின் அறிக்கையில் குற்றம்சாட்டப்பட்டவர்கள், ஆணையத்துக்கு எதிராக வழக்குத் தொடரும் பட்சத்தில் நீதிமன்றங்கள் அதை ஏற்பதற்கான வாய்ப்புக் குறைவு என்கிறார் ஜார்க்கண்ட் மாநில முன்னாள் தலைமை நீதிபதி கற்பக விநாயகம்.


சசிகலா வழக்கறிஞரின் விளக்கம்

விசாரணை அறிக்கையில் உச்ச நீதிமன்ற உத்தரவு மீறப்பட்டிருப்பதாக ஆணையத்தில் சசிகலா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் கூறுகிறார்.


படக்குறிப்பு,

என். ராஜா செந்தூர் பாண்டியன், வழக்கறிஞர்


"அப்போலோ நிர்வாகம் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், யார் மீது குற்றம் என்பது குறித்து முடிவு செய்யக்கூடாது. சிகிச்சையில் குறைபாடு இருக்கிறதா என்பதை மட்டுமே முடிவு செய்ய வேண்டும் என்று கூறியிருக்கிறது. அதை மீறி ஆறுமுகசாமி ஆணையம் செயல்பட்டிருக்கிறது. ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் ரிச்சர்ட் பீலே கடைசிவரை விசாரிக்கப்படவே இல்லை என்பதும் சந்தேகத்துக்கு உரியது," என்று கூறுகிறார் ராஜா செந்தூர்பாண்டியன்.


சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

[19/10, 4:58 am] +91 99407 62319: *ஜெயலலிதாவுக்கு ஆஞ்சியோவை தவிர்க்க தந்திரம் செய்த மருத்துவர்' - ஆறுமுகசாமி அறிக்கை*


ஜெயலலிதா மரணம் குறித்து விசாரித்து வந்த நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கையில், ஜெயலலிதாவுக்கு ஆஞ்சியோ சிகிச்சை செய்யப்படாமல் இருக்க அப்போலோ மருத்துவர் தந்திரம் செய்தார் என்பன உள்ளிட்ட கடுமையான குற்றச்சாட்டுகள் கூறப்பட்டுள்ளன.


ஜெயலலிதா சுயநினைவுடன் இருந்தபோது தனக்கு அளிக்கப்படவிருந்த சிகிச்சை தொடர்பாக ஒப்புக்கொண்டது என்ன, சசிகலா தவிர வேறு யார் மீதெல்லாம் விசாரணை செய்யப்பட வேண்டும் என வழங்கப்பட்ட பரிந்துரைகள் உள்ளிட்ட அறிக்கையில் இடம்பெற்றுள்ள சில முக்கிய தகவல்கள் இங்கே தொகுக்கப்பட்டுள்ளன.


'சுயநினைவுடன் ஒப்புதல் அளித்த ஜெயலலிதா'

அமெரிக்காவை சேர்ந்த புகழ்பெற்ற கார்டியோ தொராசிக் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் சமின் சர்மா, 25.11.2016 அன்று மருத்துவமனையில் ஜெயலலிதா சுயநினைவுடன் இருந்தபோது அவருடன் விவாதித்து முன்மொழியப்பட்ட சிகிச்சைக்கு மறைந்த முதல்வர் ஒப்புதல் அளித்தார்.


மறைந்த முதல்வரின் இதயத்தில் வளர்ந்த வெஜிடேஷன் மற்றும் இதர உடல்நல கோளாறுகளை கருத்தில் கொண்டு உயிர்காக்கும் இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட வேண்டியது அவசியம் என்பது மேற்சொன்ன அமெரிக்க மருத்துவரின் கருத்தாக இருந்தது. (பக்கம் 551, 552 - 47.16 )


புத்திசாலி பெண்மணியான மறைந்த முதல்வர்...'

மேற்சொன்னவை 25.11. 2016 அன்று டாக்டர் பாபு ஆபிரகாமால் எழுத்துபூர்வமாக அளிக்கப்பட்டிருந்தது. புத்திசாலி பெண்மணியான மறைந்த முதல்வர் அவருக்கு இதே அறுவை சிகிச்சை செய்ய முடிவெடுக்கப்பட்ட உடனேயே அதன் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு அவர் அதற்கு ஒப்புக்கொண்டிருப்பார். இரண்டு மாதங்களுக்கு பின்னர் இங்கிலாந்தில் இருந்து வந்த தீவிர சிகிச்சை மருத்துவரின் கருத்துப்படி இதய அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்று முடிவு மாற்றப்பட்டது.


'ஆனால் அன்று மருத்துவ ரீதியாக மறைந்த முதல்வரை பரிசோதிக்காத இங்கிலாந்து மருத்துவர் எழுத்துபூர்வமாக அல்லாமல் நேரடியாக வாய்மொழியாக கருத்து தெரிவித்தார் என்று கூறப்படுகிறது' என்பது குறிப்பிடத்தக்கது. அப்போலோ மருத்துவமனையில் பணிபுரியும் டாக்டர் பாபு ஆபிரகாம் அறுவை சிகிச்சை தேவையில்லை என்ற இங்கிலாந்து மருத்துவரின் வாய்வழி கருத்தை மட்டுமே மேற்கோள் காட்டியுள்ளார். இம்முடிவை மாற்றுவதற்கான உரிமை அமெரிக்க மருத்துவர் தவிர சசிகலாவுக்கும் இருந்தது. நெருக்கடியின் போது முடிவெடுக்கும் திறன் பெற்றவர்கள், கார்டியோ தொராசிக் அறுவை சிகிச்சையை தொடராமல் தவறிழைத்திருக்கலாம். இது(கார்டியோ தொராசிக் அறுவை சிகிச்சை) அமெரிக்க மருத்துவரின் கருத்துப்படி மறைந்த முதல்வரின் உயிரை காப்பாற்றும் விளைவை ஏற்படுத்தி இருக்கலாம். (பக்கம் 552, 553 - 47.17 )


'தந்திரம் செய்த டாக்டர் பாபு ஆபிரகாம்'

அன்றே நடைமுறையை செய்ய ஒப்புக்கொண்ட டாக்டர் சமின் சர்மாவின் கருத்தை முதல்வர் ஏற்றுக்கொண்ட பின்னர் இம்மாற்றம் பின்னிட்டு யோசனையாக வந்துள்ளது. டாக்டர் சமின் ஷர்மா ஆஞ்சியோ செய்யத் தயாராக இருந்து மறைந்த முதல்வரும் அதை ஏற்றுக் கொண்ட பிறகு நுரையீரல் நிபுணரான டாக்டர் பாபு ஆபிரகாம் ஏன் டாக்டர் ரிச்சர்டு பீலேவை அழைக்க வேண்டும் என்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை என்பது அப்போலோ மருத்துவமனை ஆவணங்களில் பதிவுகளில் இருந்து தெளிவாகிறது. எனவே ஆஞ்சியோவை தவிர்ப்பதற்காக சில அதிகாரம் பெற்றவருக்கு உதவ டாக்டர் பாபு ஆபிரகாம் தீவிர மருத்துவரான டாக்டர் ரிச்சர்ட் பீலே அறுவை சிகிச்சை தள்ளிப் போடலாம் என்று கருத்து தெரிவித்ததாக ஒரு தந்திரம் செய்து அமெரிக்க மருத்துவர் அறுவை சிகிச்சை நிபுணருக்கு ஆலோசனை வழங்கினார் என்று ஆணையம் முடிவு செய்கிறது. (பக்கம் 553 - 47.18)


ஜெயலலிதா இதய செயலிழப்பு ஏற்பட்டது எப்போது?


மறைந்த முதல்வரின் இறந்த நேரம் முக்கியத்துவம் வாய்ந்ததும் நீண்டகால விளைவுகளை ஏற்படுத்துவதுமாகும். இறப்பு நேரம் அதிகாரப்பூர்வமாக 05.12.16, அன்று இரவு 11:30 மணி என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மருத்துவமனையில் மறைந்த முதல்வரின் இறுதி நேரத்தில் அவரைக் கவனித்துக்கொண்ட பாராமெடிக்கல் பணியாளர்களின் சாட்சியங்களுக்கும் இதற்கும் பெருமளவில் வேறுபாடுள்ளது. 04.12.16 அன்று பிற்பகல் 3:50 மணிக்கு முன்பே மறைந்த முதலமைச்சருக்கு இதய செயலிழப்பு ஏற்பட்டது என்றும், இதயத்தில் மின்சார செயல்பாடு இல்லை மற்றும் ரத்த ஓட்டம் இல்னல என்பதை அவரின் உடல்நிலையை கண்காணித்து வந்த செவிலியர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் பணி மருத்துவர்களின் தெளிவான சாட்சியங்களாகும். (பக்கம் 537 - 46.71)


வேறு தேதியில் முதலாம் ஆண்டு நினைவு அனுசரிப்பு

மறைந்த முதல்வரின் மருமகன், தீபக்கின் சாட்சியத்தின்படி, மனறந்த முதல்வரின் மரண நேரத்தை மிகவும் துல்லியமாக நிர்ணயிக்க முடியும். நோயுற்ற மறைந்த முதல்வரை அருகிலிருந்து கவனித்துக்கொண்ட மற்றும் அவர் மருத்துவமனனயில் அனுமதிக்கப்பட்டிருந்த போது நடந்த நிகழ்வுகளையும் முன்னேற்றங்கனளயும், அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையையும் அவ்வப்போது முழுமையாகத் தெரிந்த அவரின் ஓட்டுநர் மற்றும் பூங்குன்றன் ஆகிய இருவரின் தகவலின் அடிப்படையில், 04.12.2016 அன்று மதியம் 3:00 முதல் 3:30 மணி வரை என மறைந்த முதல்வரின் இறந்த நேரத்தைக் கருத்தில் கொண்டு, அவர் இறந்த முதலாம் ஆண்டு நினைவை தீபக் அனுசரித்தார் என்பது அவரது சாட்சியமாகும். (பக்கம் 538 - 46.73)


ஜெயலலிதா ஏன் வெளிநாட்டுக்கு அழைத்துச் செல்லப்படவில்லை

ஜெயலலிதாவின் இதயத்தில் வெஜிடேசன், பெர்ஃபொரேசன் மற்றும் டயஸ்டோலிக் டிஸ்பரேஷன் ஆகியவற்றுக்காக பிரிட்டன் மருத்துவர் ரிச்சர்டு பீலே, அமெரிக்க மருத்துவர் ஸ்டூவர்ட் ரஸ்ஸல், மருத்துவர் சமின் ஷர்மா ஆகியோர் ஆஞ்சியோ அறுவை சிகிச்சை செய்ய பரிந்துரைத்தனர். ஆனால் அவரது கடைசி மூச்சு வரை ஏன் நடக்கவில்லை (பக்கம் 557 - 47.27. ஒ)


இரண்டு நுரையீரல்களிலிருந்தும் (ஒரு நாளைக்கு சுமார் 1000 மிலி) பெருமளவிலான திரவம் வெளியேற்றப்படுவதைக் கருத்தில் கொண்டாவது, மருத்துவமனையில் ஆதரவாக நெருங்கிய உறவினர் இல்லாத மனறந்த முதல்வர் மீது சில அனுதாபங்கள் ஏற்பட்டிருக்க வேண்டும். (பக்கம் 558 - 47.27.ஓ)


டாக்டர் ரிச்சர்ட் பீலே மறைந்த முதல்வரை சிகிச்சைக்காக வெளிநாட்டிற்கு அழைத்துச் செல்லத் தயாரென்று கூறியிருந்தும், அது ஏன் நடக்கவில்லை? (பக்கம் 558 - 47.27. ஃ)


டாக்டர் சமின் ஷர்மா ஆஞ்சியோ செய்வதைப் பற்றி விளக்கியபின், அவரும் அதற்கு ஒப்புக்கொண்டார். ஆனால், அது ஏன் நடக்கவில்லை? (பக்கம் 558 - 47.27. அ.அ)


சசிகலா


47.28. இந்த அனைத்து கருத்துகளில் இருந்தும், வி.கே.சசிகலா, மருத்துவர் சிவகுமார், அப்போதைய சுகாதாரத் துறை செயலாளர் டாக்டர்.ஜே. ராதா கிருஷ்ணன் மற்றும் அப்போதைய சுகாதார அமைச்சர் டாக்டர். சி. விஜயபாஸ்கர் ஆகியோர் குற்றம் செய்தவர்களாக ஆணையம் முடிவு செய்து, விசாரணைக்கு பரிந்துரைக்கிறது.


47.29. டாக்டர் ஒய்.வி.சி. ரெட்டி மற்றும் டாக்டர்.பாபு ஆபிரகாம் மறைந்த முதல்வருக்கு சிகிச்சை அளித்துள்ளனர். அவர்கள் பம்பாய், பிரிட்டன் மற்றும் அமெரிக்க மருத்துவர்களை அழைத்து, ஆஞ்சியோ / அறுவை சிகிச்சை செய்வதற்கான கருத்தைப் பெற்றாலும், ஒரு தனிப்பட்ட நபரின் கட்டாயத்தினால் சட்ட விரோதமாக இலக்கை அடைவதற்காக அதை வெற்றிகரமாகச் செயல்படுத்தினர். எனவே, விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.


அப்போதைய தலைமைச் செயலாளர் டாக்டர் ராமோகன் ராவை பொறுத்தவரை செயல்முறைகளுக்காக பல்வேறு நாட்களில் 21 படிவங்களில் கையொப்பமிடுவது குறித்து அவர் அரசுக்கு கடிதம் வாயிலாகத் தெரிவிக்கவில்லை என்பதைத் தவிர ஆணையம் அவருக்கு எதிராக குறைகள் எதையும் காணவில்லை. நிச்சயமாக இது ஒரு நபரால் செய்யப்பட்ட மாபெரும் குற்றமாகும். குறிப்பாக இது முதல்வரது உயிர் தொடர்பானது என்பதால் அதற்கான விளைவுகளை நிச்சயம் பெறுவார் எனவே விசாரணைக்கு பரிந்துரைக்கப்படுகிறது. (பக்கம் 559 - 47.30)


'அப்போலோ பிரதாப் ரெட்டி வெளியிட்ட பொய்யான அறிக்கை'

அதேபோல அப்போலோ மருத்துவமனையின் தலைவர் டாக்டர் பிரதாப் சி. ரெட்டி உண்மைகளைத் தெரிவிப்பதற்கான அதிகாரம் பெற்ற நபராக இருந்தும் செய்தியாளர் சந்திப்பில் மறைந்த முதல்வர் எந்த நேரத்திலும் டிஸ்சார்ஜ் செய்யப்படலாம் என்ற ஒரு பொய்யான அறிக்கையை வெளியிட்டார். இரண்டாவதாக அவர் தனது அறையில் அடிக்கடி விளக்க கூட்டத்தை நடத்திய போதிலும் மறைந்த முதல்வரின் உடல்நலக் குறைவு மற்றும் அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து உண்மை நிலையை வெளிப்படுத்தத் தவறியதால் இது விசாரிக்கப்பட வேண்டியதாக ஆணையம் கருதுகிறது. (பக்கம் 559, 560 - 47.31)


காணொளிக் குறிப்பு,

'ஜெயலலிதாவுக்கு கடைசி மூச்சு வரை நடக்காத ஆஞ்சியோ சிகிச்சை' - ஆணைய அறிக்கையில் முக்கிய தகவல்கள்

thanks

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி