2023ம் ஆண்டில் 24 நாட்கள் அரசு விடுமுறை நாட்கள்: அரசாணை வெளியிட்டது தமிழ்நாடு அரசு*
2 023-ம் ஆண்டில் 24 நாட்கள் அரசு விடுமுறை நாட்கள்: அரசாணை வெளியிட்டது தமிழ்நாடு அரசு*
சென்னை: 2023ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசு விடுமுறை பட்டியல் வெளியாகி உள்ளது. இதில் வாராந்திர ஞாயிற்றுக் கிழமைகள் தவிர்த்து, 24 நாட்கள் விடுமுறைகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழக அரசு ஊழியர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் முக்கிய தினங்கள் மற்றும் மத ரீதியான பண்டிகைகள் காரணமாக, அரசு பொது விடுமுறைகள் வழங்கப்படுவது வழக்கம். ஒவ்வொரு ஆண்டும் இந்த பொது விடுமுறை பட்டியல் முன்கூட்டியே வெளியிடப்படும்.
அதன்படி, 2023ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசு விடுமுறை பட்டியல் வெளியாகி உள்ளது. இதில் வாராந்திர ஞாயிற்றுக் கிழமைகள் தவிர்த்து, 24 நாட்கள் விடுமுறைகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக அரசு தலைமைச் செயலாளர் இறையன்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், பொது விடுமுறை நாட்களாகக் குறிப்பிடப்பட்ட ஞாயிற்றுக்கிழமைகளுடன் பின்வரும் நாட்களும் 2023ஆம் ஆண்டிற்கான பொது விடுமுறை நாட்களாகக் கருதப்படும்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி ஆங்கிலப் புத்தாண்டு, பொங்கல், திருவள்ளுவர் தினம், உழவர் தினம், தைப் பூசம், குடியரசு தினம், தெலுங்கு வருடப் பிறப்பு, வங்கிகள் ஆண்டுக் கணக்கு முடிவு, மகாவீர் ஜெயந்தி, புனித வெள்ளி, தமிழ்ப் புத்தாண்டு, ரம்ஜான், மே தினம், பக்ரீத், மொகரம், சுதந்திர தினம், கிருஷ்ண ஜெயந்தி, விநாயகர் சதுர்த்தி, மிலாது நபி, காந்தி ஜெயந்தி, ஆயுத பூஜை, விஜய தசமி, தீபாவளி, கிறிஸ்துமஸ் ஆகிய தினங்கள் பொது விடுமுறை தினங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.
பொது விடுமுறை தினங்களாக அறிவிக்கப்பட்டுள்ள தினங்களில் ஆங்கிலப் புத்தாண்டு, பொங்கல், தைப் பூசம், விநாயகர் சதுர்த்தி, தீபாவளி உள்ளிட்ட 8 நாட்கள், சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வருவது குறிப்பிடத்தக்கது. இந்த அறிவிப்பு, தமிழகத்தில் உள்ள வணிக வங்கிகள் மற்றும் கூட்டுறவு வங்கிகளுக்கு மட்டுமே பொருந்தும் என்றும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது....
Comments