வள்ளலார் 200-வது பிறந்த நாள்

 

வள்ளலார் 200-வது பிறந்த நாள்: விழா இலச்சினையை வெளியிட்டார் முதல்வர் ஸ்டாலின்!


வள்ளலார் 200-வது பிறந்த நாள்: அதன்படி திருவருட் பிரகாச வள்ளலார் முப்பெரும் விழாவை நடத்துவது தொடர்பாக டாக்டர் பி.கே.கிருஷ்ணராஜ் தலைமையில் 14 பேர் கொண்ட சிறப்புக் குழுவை அமைத்தது

இன்று வள்ளலார் பிறந்தநாள், வள்ளலார் தர்மசாலா தொடங்கியதன் 156-ம் ஆண்டு விழா, வள்ளலார் ஜோதி தரிசனம் காட்டிய 152-ம் ஆண்டு விழா என முப்பெரும் விழாவாக கொண்டாடப்பட்டது.


தனிப்பெருங்கருணை அருட்பெரும் ஜோதி! என கருணையும் ஜீவகாருண்யமுமே மனித குலத்துக்கு மனித குலத்துக்கு மாண்பை தரும் சிறந்த வழிபாடு என உரைத்தவர் வள்ளலார். சமூக நீதியையும் ஆன்மிக வளர்ச்சியையும் செம்மையாக வடித்தெடுத்த வள்ளலாருக்குச் சிறப்பு செய்ய தமிழக அரசு முடிவு எடுத்து, சென்ற நிதி நிலை அறிவிப்பில் பல திட்டங்கள் அறிவித்தது. அதன்படி திருவருட் பிரகாச வள்ளலார் முப்பெரும் விழாவை நடத்துவது தொடர்பாக டாக்டர் பி.கே.கிருஷ்ணராஜ் தலைமையில் 14 பேர் கொண்ட சிறப்புக் குழுவை அமைத்தது.

இதில் 2022 அக்டோபர் 5ம் தேதி தொடங்கி 52 வாரங்களுக்கு “வள்ளலார் 200” என்ற தலைப்பில் முப்பெரும் விழா நிகழ்ச்சிகளை தமிழகம் முழுவதும் நடத்த முடிவு செய்தது. மேலும் அக்டோபர் 5 நாளை இனி ஆண்டுதோறும் “தனிப்பெருங்கருணை நாள்” என்று கொண்டாடுவது, விழாவுக்கான இலச்சினையை (லோகோ)வெளியிடுவது, மாணவர்களுக்கு வள்ளலாரின் கருத்துக்களைக் கூற கட்டுரை, பேச்சுப் போட்டிகள் நடத்துவது, வடலூரில் பல புனரமைப்புப் பணிகளை மேற்கொள்வது என முடிவு செய்யப்பட்டது


வள்ளலாரின் 200-வது பிறந்த நாள் துவக்க நாளான இன்று காலை சென்னை ராஜா அண்ணாமலைபுரத்திலுள்ள ஸ்ரீகபாலீஸ்வரர் கற்பகாம்பாள் திருமண மண்டபத்தில் விழா சிறப்பாக நடைபெற்றது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இந்த விழா நடைபெற்றது. இதில் வள்ளலார் பிறந்தநாள், வள்ளலார் தர்மசாலா தொடங்கியதன் 156-ம் ஆண்டு விழா, வள்ளலார் ஜோதி தரிசனம் காட்டிய 152-ம் ஆண்டு விழா என முப்பெரும் விழாவாக கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் அருள்ஜோதி அன்ன ஆலயம் அமைப்பின் தலைவர் தனலட்சுமி அம்மையார் உட்பட பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

விழாவின் இலச்சினையும், வள்ளலார் சிறப்பு நினைவுப் புத்தகமும் இதில் வெளியிடப்பட்டது. வள்ளலார் வழியில் சிறப்பாகத் தொண்டாற்றிய 10 சேவை நிறுவனங்களுக்கு சிறப்புப் பரிசும் வழங்கப்பட்டது. இந்த விழாவில் வள்ளலார் பக்தர்களும், அவரது வழியில் சேவை ஆற்றும் தொண்டர்களும் பெரும் திரளாகப் பங்கு கொண்டனர். இந்த விழாவில் கலந்து கொண்டவர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.





Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி