தொடர்ந்து கரையும் அன்னிய செலாவணி


 தொடர்ந்து கரையும் அன்னிய செலாவணி: 2 ஆண்டில் இல்லாத அளவுக்கு சரிவு


புதுடெல்லி: டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு வீழ்ச்சி அடைந்துள்ள நிலையில், நாட்டின் அன்னிய செலாவணி கையிருப்பு கடந்த 2 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைந்துள்ளது. அமெரிக்க டாலருக்கு நிகராக ரூபாய் மதிப்பின் சரிவைத் தடுக்க, ரிசர்வ் வங்கி அதிகளவிலான டாலர்களை விற்பனை செய்தது. இதன் காரணமாக, அன்னிய செலாவணி கையிருப்பு வேகமாக சரிந்துள்ளது. ஆசியாவின் 3வது பெரிய பொருளாதார நாடாக விளங்கும் இந்தியா,  டாலருக்கு நிகராக ரூபாய் மதிப்பின் சரிவைச் சமாளிக்க முடியாமல் தடுமாறி வருகிறது. பல வாரங்களாக தொடர்ந்து, டாலருக்கு எதிராக ரூபாயின் மதிப்பு ரூ.80க்கு அதிகமாகவே உள்ளது.


வரலாற்றில் முதல் முறையாக, சமீபத்தில் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 83ஐ தாண்டியது. இந்தாண்டு ரூபாய் மதிப்பு 10 - 12 சதவீதம் சரிந்துள்ளது. நாட்டின் அன்னியச் செலாவணி கையிருப்பு அக்டோபர் 21 ம் தேதியுடன் முடிந்த வாரத்தில், 2 ஆண்டுகளில் இல்லாத அளவிற்குச் சரிந்துள்ளது. அக்டோபர் 21ம் தேதியுடன் முடிந்த வாரத்தில் அந்நியச் செலாவணி இருப்பு 3.85 பில்லியன் டாலர் குறைந்து, 52,400 கோடி அமெரிக்க டாலராக இருந்தது. கடந்த வாரத்தை விட 400 கோடி டாலர் குறைந்துள்ளது....

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி