: *ஏ. பி. ஜே. அப்துல் கலாம்*

:


*ஏ. பி. ஜே. அப்துல் கலாம்*


இந்தியாவின் தலைசிறந்த விஞ்ஞானி, தொழில்நுட்ப வல்லுநர், மிகப்பெரிய பொருளாளர், இந்தியாவின் 11 வது குடியரசு தலைவர், இந்திய ஏவுகணை நாயகன், இந்திய விஞ்ஞான வளர்ச்சியின் தந்தை, சிறந்த ஆசிரியர் மற்றும் அனைவராலும் மதிக்கதக்க அற்புதமான பேச்சாளர், வருங்கால இளைஞர்களின் முன்மாதிரியாக கருதப்படும் நம் எல்லோருக்கும் தெரிந்த ஏ.பி.ஜே அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாற்றை பற்றி மேலும் தெரிந்துகொள்ள மேலும் படியுங்கள்.


பிறப்பு: அக்டோபர் 15, 1931


மரணம்: ஜூலை 27, 2015


இடம்: இராமேஸ்வரம் (தமிழ் நாடு)  


பிறப்பு:


1931 ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம் 15 ஆம் நாள் ஜைனுலாப்தீனுக்கும், ஆஷியம்மாவுக்கும் மகனாக இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில், பாம்பன் தீவில் அமைந்துள்ள இராமநாதபுரம் மாவட்டத்தில் இருக்கும் ஒரு சிறிய நகராட்சியான இராமேஸ்வரத்தில் பிறந்தார். இவர் ஒரூ இஸ்லாமிய குடும்பத்தை சேர்ந்தவர்.


இளமைப் பருவம்:


அப்துல் கலாம், இராமேஸ்வரத்திலுள்ள தொடக்கப்பள்ளியில் தனது  பள்ளிப்படிப்பை தொடங்கினார். ஆனால் இவருடைய குடும்பம் ஏழ்மையில் இருந்ததால், இளம் வயதிலே இவர் தன்னுடைய குடும்பத்திற்காக வேலைக்குச் சென்றார். பள்ளி நேரம் போக மற்ற நேரங்களில் இவர் செய்தித்தாள்கள் விநியோகம் செய்தார். இவருடைய பள்ளிப்பருவத்தில் இவர் ஒரு சராசரி மாணவனாகவே வளர்ந்தார்.


கல்லூரி வாழ்க்கை:


தன்னுடைய பள்ளிப்படிப்பை முடித்தபிறகு, திருச்சிராப்பள்ளியிலுள்ள “செயின்ட் ஜோசப் கல்லூரியில்” இயற்பியல் பயின்றார். 1954ஆம் ஆண்டு, இயற்பியலில் இளங்கலை பட்டம் பெற்றார். ஆனால், இயற்பியல் துறையில் ஆர்வம் இல்லை என உணர்ந்த இவர், 1955 ஆம் ஆண்டு தன்னுடைய “விண்வெளி பொறியில் படிப்பை” சென்னையிலுள்ள எம்.ஐ.டி-யில் தொடங்கினார். பின்னர் அதே கல்லூரியில் முதுகலைப் பட்டமும் பெற்றார்.


விஞ்ஞானியாக ஏ.பி.ஜே அப்துல் கலாம்:      


1960 ஆம் ஆண்டு வானூர்தி அபிவிருத்தி அமைத்தல் பிரிவில் (DRDO) விஞ்ஞானியாக தன்னுடைய ஆராய்ச்சி வாழ்க்கையைத் தொடங்கிய அப்துல் கலாம், ஒரு சிறிய ஹெலிகாப்டரை இந்திய ராணுவத்திற்காக வடிவமைத்து கொடுத்தார். பின்னர், இந்திய விண்வெளி ஆராய்ச்சி கூடத்தில் (ISRO) தனது ஆராய்ச்சிப்பணிகளைத் தொடர்ந்த அவர், துணைக்கோள் ஏவுகணைக் குழுவில் (SLV) செயற்கைக்கோள் ஏவுதலில் முக்கிய பங்காற்றினார். 1980 ஆம் ஆண்டு SLV -III ராக்கெட்டைப் பயன்படுத்தி ரோகினி-I என்ற துணைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் ஏவச்செய்தார். இது அவருக்கு மட்டுமல்லாமல், இந்தியாவிற்கே ஒரு சாதனையாக அமைந்தது.  இத்தகைய வியக்கதக்க செயலைப் பாராட்டி மத்திய அரசு இவருக்கு 1981 ஆம் ஆண்டு இந்தியாவின் மிகப் பெரிய விருதான “பத்ம பூஷன்” விருது வழங்கி கௌரவித்தது.  1963 ஆம் ஆண்டு முதல் 1983 ஆம் ஆண்டு வரை, இந்திய விண்வெளி ஆராய்ச்சி கூடத்தில் பல பணிகளை சிறப்பாக செய்த இவர், 1999 ஆம் ஆண்டு “பொக்ரான் அணு ஆயுத சோதனையில்” முக்கிய பங்காற்றியுள்ளார். இந்தியாவை அணு ஆயுத வல்லரசாக மாற்றிய ஏ.பி.ஜே அப்துல் கலாம், இதுவரை ஐந்து ஏவுகணை திட்டங்களில் பணிபுரிந்துள்ளார். அவர், அனைவராலும் இந்திய ராணுவ ராக்கெட் படைப்பின் பிதாவாக போற்றப்படுகிறார்.


குடியரசுத் தலைவராக ஏ.பி.ஜே அப்துல் கலாம்:     


2002 ஆம் ஆண்டு நடந்த குடியரசுத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்று, இந்தியாவின் 11 வது குடியரசு தலைவராக ஜூலை 25 ஆம் நாள் 2002 ல் பதவியேற்றார். குடியரசு தலைவராவதற்கு முன், இந்தியாவின் மிகப்பெரிய விருதான “பாரத ரத்னா விருது” மத்திய அரசு இவருக்கு வழங்கி கௌரவித்தது. மேலும், “பாரத ரத்னா” விருது பெற்ற மூன்றாவது குடியரசு தலைவர் என்ற பெருமையைப் பெற்றார். 2007 ஆம் ஆண்டு வரை குடியரசுத் தலைவராக இருந்த இவர் “மக்களின் ஜனாதிபதி” என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்பட்டார். 2007 ஆம் ஆண்டு குடியரசுத் தேர்தலில் மீண்டும் போட்டியிட நினைத்த கலாம், பிறகு பல காரணங்களால் அந்த தேர்தலில் போட்டியிட போவதில்லை என முடிவு செய்து விலகினார்.


மரணம்:


அப்துல் கலாம் அவர்கள் ஜூலை 27, 2015 ஷில்லாங்கில் உள்ள இண்டியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மென்ட்டில் மேடையில் பேசிக்கொண்டிருந்தபோதே மயங்கி விழுந்து மறித்தார்.


விருதுகள்:


1981 – பத்ம பூஷன்


1990 – பத்ம விபூஷன்


1997 – பாரத ரத்னா


1997 – தேசிய ஒருங்கிணைப்பு இந்திராகாந்தி விருது


1998 – வீர் சவர்கார் விருது


2000 – ராமானுஜன் விருது


2007 – அறிவியல் கவுரவ டாக்டர் பட்டம்


2007 – கிங் சார்லஸ்-II பட்டம்


2008 – பொறியியல் டாக்டர் பட்டம்


2009 – சர்வதேச வோன் கார்மான் விங்ஸ் விருது


2009 – ஹூவர் மெடல்


2010 – பொறியியல் டாக்டர் பட்டம்


2012 –  சட்டங்களின் டாக்டர்


2012 – சவரா சம்ஸ்க்ருதி புரஸ்கார் விருது


ஏ.பி.ஜே அப்துல் கலாம் எழுதிய நூல்கள்:


அக்னி சிறகுகள்

இந்தியா 2020

எழுச்சி தீபங்கள்

அப்புறம் பிறந்தது ஒரு புதிய குழந்தை

இறுதிவரைக்கும் பிரம்மச்சாரியாக வாழ்ந்த ஏ.பி.ஜே அப்துல் கலாமின் எளிமையான வாழ்க்கையும், அவரது இனிமையான பேச்சும் எல்லோரையும் கவர்ந்தது என்றால் வியப்பில்லை. ‘எதிர்கால இந்திய இளைஞர்கள் கையில்’ என்ற அவர் “கனவு காணுங்கள்! அந்த கனவை நினைவாக்க பாடுபடுங்கள்” என்னும் வாக்கியத்தை இளைஞர்களின் மனதில் வேரூன்ற செய்தவர்.


உலகம் போற்றும் விஞ்ஞானியான கலாம் தன்னுடைய பொன்மொழிகளாலும், கவிதைகளாலும், வாசகங்களாலும் அனைவரின் மனதிலும் நீங்கா இடம் பிடித்துள்ளார்.

[15/10, 11:06 am] +91 99407 62319: *APJ Abdul Kalam birthday: மக்கள் ஜனாதிபதி ஏ.பி.ஜே அப்துல் கலாமின் கனவு தூண்டலும், நிறைவேறாத ஆசையும்*


கனவு காணுங்கள், கண்களை மூடிக்கொண்டு காணும் கனவை கண்களைத் திறந்து கொண்டு காணுங்கள், கனவு கண்டால்தான் சாதிக்க முடியும்  என்று கனவுக்கு இப்படி ஒரு அர்த்தத்தை புகட்டி இளைஞர்களுக்கு புரிய வைத்தவர் மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம்.  


இப்படியே கனவு கண்டுகிட்டே இரு! பகல் கனவா போகட்டும்! என்று கனவு என்ற வார்த்தையை மிகவும் இளக்காரமாக நினைத்த காலம் இருந்தது. 


ஆனால், கனவு காணுங்கள், கண்களை மூடிக்கொண்டு காணும் கனவை கண்களைத் திறந்து கொண்டு காணுங்கள், கனவு கண்டால்தான் சாதிக்க முடியும்  என்று கனவுக்கு இப்படி ஒரு அர்த்தத்தை புகட்டி இளைஞர்களுக்கு புரிய வைத்தவர் மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம்.  

ஏ.பி.ஜே. அப்துல் கலாம் இன்று உயிரோடு ஒருவேளை இருந்திருந்தால், நடிகர்கள், நடிகைகள் ஆதர்ஷ நாயகர்களாக கொண்டிருக்கும் இன்றைய இளைஞர்களின் பெரும்பகுதியினருக்கு கலாமே ஆதர்ஷ நாயகராக இருந்திருப்பார்


இன்று டாக்டர் அப்துல் கலாமின் பிறந்தநாள். மாணவர்கள் மீது அவர் கொண்டிருந்த பற்றால், மாணவர்கள் தினமாகக் கொண்டாடபப்டுகிறது. அவர் குறித்த சில ஸ்வாரஸ்யமான தகவல்களைப் பார்க்கலாம்.


இளமை வாழ்க்கை


இந்தியாவின் கடைக்கோடி எல்லையில் உள்ள ஒரு சிறிய கிராமம் இல்லை… ஒரு தீவு என்றே சொல்லும் ராமேஸ்வரத்தில்தான் அப்துல் கலாம் 1931ம் ஆண்டு அக்டோபர் 15ம் தேதி சாதாரண முஸ்லிம் குடும்பத்தில் பிறந்தார். 


ராமேஸ்வரத்தில் உள்ள தொடக்கப் பள்ளியில் பள்ளிப்படிப்பு படித்து, குடும்ப வறுமை காரணாக நாளேடுகளை வீடுவீடாக போட்டு இளம் வயதிலேயே கலாம் உழைத்தார். பள்ளிப்படிப்பை முடித்து, திருச்சியில் உள்ள புனித ஜோசப் கல்லூரியில் இயற்பியல் பாடத்தில் 1954-ல் பட்டம் பெற்றார். 


இயற்பியல் பாடத்தில் அப்துல் கலாமுக்கு நாட்டமில்லாததால், சென்னையில் உள்ள மெட்ராஸ் தொழில்நுட்ப நிறுவனத்தில் விண்வெளி அறிவியல் பாடத்தை தேர்ந்தெடுத்து, 1960-ம் பட்டம் பெற்றார்.

அதன்பின், மத்திய அரசின், பாதுகாப்புத் துறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் விமான பிரிவில் முதன்மை விஞ்ஞானியாக அப்துல் கலாம் சேர்ந்து ராணுவத்துக்காக சிறிய  ஹெலிகாப்டரை வடிவமைத்துக் கொடுத்தார்


ஏவுகணை நாயகன்


1969ம் ஆண்டில் இஸ்ரோவுக்கு மாற்றப்பட்ட அப்துல் கலாம், அங்கு உள்நாட்டு ஏவுகணை தயாரிக்கும் லாஞ்சர்கள் தயாரிக்கும் பிரிவின் இயக்குநராக நியமிக்கப்பட்டார். 


அப்துல் கலாம் தலைமையில் செயல்பட்ட குழுவினர், கடந்த 1980ம் ஆண்டு ரோஹினி எனும் செயற்கைக்கோளை, எஸ்எல்வி-111 ஏவுகணை மூலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவினர். அது மட்டுமல்லாமல் அப்துல் கலாம் தலைமையில் போலார் எஸ்எல்வி மற்றும் எஸ்எல்வி 3 ஏவுகணைகளும் வெற்றிகரமாக ஏவப்பட்டன. இதையடுத்து, ஏவுகணை மற்றும் பல்வேறு விண்வெளித் திட்டங்களுக்கு இயக்குநராக அப்துல் கலாமை இயக்குநராக மத்தியஅரசு நியமித்தது. 


Peoples President APJ Abdul Kalam's unfulfilled wish and inspiration

பொக்ரான் அணுகுண்டு சோதனை


1992 முதல் 1999ம் ஆண்டுவரை பிரதமரின் அறிவியல் ஆலோசகராக இருந்த அப்துல் கலாம், பொக்ரான்-2 அணுகுண்டு சோதனையை நடத்திக்காட்டினார். இந்தியாவை உலக நாடுகள் சற்று அச்சத்துடனும், மரியாதையுடனும் பார்க்க வைத்தவர் அப்துல்கலாம்தான். உலக நாடுகள் அறியாவகையில் பொக்ரானில் 2வது அணுகுண்டு சோதனையை அப்துல் கலாம் நடத்திக்காட்டினார்.


ரோஹினி ஏவுகணை வெற்றிகரமாக அமைந்தபின், அடுத்ததாக, பிரம்மோஸ் திட்டத்துக்கு கலாம் இயக்குநராக நியமிக்கப்பட்டார். பிரமோஸ் ஏவுகணையின் தந்தை என்று அழைக்கப்படும் சிவதாணு பிள்ளையும், அப்துல் கலாம் மீது மிகுந்த நம்பிக்கையும், மரியாதையும் வைத்திருந்தார். இது குறித்து சிவதாணு பிள்ளை தனது “தி பாத் எக்ஸ்ப்ளோர்டு” எனும் நூலில் விரிவாகக் குறிப்பிட்டிருப்பார். 


பிரம்மோஸ் ஏவுகணை


இன்று உலகளவில் பிரம்மோஸ் எனும் சூப்பர்சோனிக் ஏவுகணை பேசப்படுகிறது என்றால் அதற்கு மூலக் காரணம் அப்துல் கலாம்தான். இந்தியாவின் வெற்றிகரமான ஆயுதக்கண்டுபிடிப்புகளில் பிரம்மோஸ் ஏவுகணை முக்கியமானது.


உலகிலேயே தரைப்படை, விமானப்படை, கப்பற்படை ஆகியவற்றில் சூப்பர் சோனிக் ஏவுகணை வைத்திருக்கும் சில நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும் அதற்கு காரணம் அப்துல் கலாம்தான்.

குடியரசுத் தலைவர் பதவியை ஏற்கும் முன்பும் சரி, ஏற்றபின்பும்சரி அப்துல் கலாமின் கனவு இந்தியாவை வல்லரசாக்க வேண்டும் என்பதை மூச்சாகக் கொண்டிருந்தார். 2020ம் ஆண்டுக்குள் இந்தியா வல்லரசாக வேண்டும் என்ற தீரா ஆசையை கலாம் கொண்டிருந்தார்


வல்லரசு கனவு


இந்தியப் பொருளாதாரம் முன்னேற வேண்டும், மக்களின் வாழ்க்கைத் தரம் உயர வேண்டும், உற்பத்தியை ஊக்குவிப்பது, சேவை மற்றும் உற்பத்தி துறையை ஊக்கப்படுத்துவது, உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்கி, தொழில்நுட்பத்தில் சிறந்த நாடாக இந்தியாவை வளர்க்க வேண்டும் என்பது அப்துல் கலாமின் தீவிர கனவாக இருந்தது.



அப்துல்கலாம் தான் எழுதிய இந்தியா 2020ம் ஆண்டு நூலில், இந்தியாவின் எதிர்காலம் உற்பத்தி துறைதான், உள்நாட்டு உற்பத்தியை மேம்படுத்த வேண்டும், இந்தியாவிலிருந்து தயாராகி பொருட்கள் ஏற்றுமதியாக வேண்டும் என்பதை கலாம் கனவாக வைத்திருந்தார். அப்துல் கலாமின் கனவை தற்போது பிரதமர் மோடி மேக் இன் இந்தியா திட்டத்தின் மூலம் நிறைவேற்றி வருகிறார். 



இளைஞர்களை ஊக்கப்படுத்துவது, மாணவர்களை எதிர்காலத்துக்காக தயார் செய்வது என்பதை அப்துல் கலாம் கடமையாக வைத்திருந்தார். அதனால்தான் குடியரசுத் தலைவராக இருந்தகாலத்திலும், அந்தப்பதவிக்காலம் முடிந்தபின்பும், அவர் பள்ளி, கல்லூரி தொடர்பான விழாக்களுக்கு செல்வதென்றால் அப்துல் கலாம் உற்சாகத்துடன் செல்வார். 


மாணவர்களை பேசவிட்டு, அவர்களின் கேள்விகளுக்கு விளக்கம் அளிப்பார் அப்துல் கலாம்.  மாணவர்களின் பாராட்டி அவர்களை உற்சாகப்படுத்துவதிலும், அவர்களுடன் உரையாடுவதிலும் அப்துல் கலாமிற்கு அலாதி பிரியம். நடிகரின் பேச்சையும், கிரிக்கெட் வீரர் சொல்லும் பேச்சையும் கேட்டுக்கொண்டிருந்த இளைய சமூதாயத்தை 83 வயது இளைஞர் அப்துல் கலாம் தனது பேச்சாலும், எழுச்சிமிக்க உரையாலும், ஊக்கப்படுத்துதலிலும் கட்டிப்போட்டார், அவர்களை தேசத்துக்காக நல்வழிப்படுத்தினார். 


அப்துல் கலாம் சிறந்த விஞ்ஞானி மட்டுமல்ல பொருளாதார வல்லுநர், பேச்சாளர், எழுத்தாளர் ஆசிரியராகவம் திகழ்ந்தார். அப்துல் காலம் தனது அறிவுரைகளையும், அறிவுசார் கருத்துக்களையும், கண்டுபிடிப்புகளையும் தேசத்துக்காக விட்டுச் செல்லவில்லை. அவரின் சந்தையில் விளைந்த ஏராளமானநூல்களையும் எதிர்வரும் இளைய சமூகத்துக்காக விட்டுச் சென்றுள்ளார்.


கலாம் எழுதிய நூல்கள்


அதில் முக்கியமானவை, “இந்தியா 2020-தி விஷன் ஃபார் தி நியூ மல்லினியம்”, “விங்ஸ் ஆஃப் பயர்-சுயசரிதை”, “இக்நைட்டட் மைன்ட்ஸ்: அன்லீஸிங் தி பவர் வித்இன் இந்தியா”, “தி லுமினோஸ் ஸ்பார்க்: ஏ பயோகிராபி வெர்ஸ் அன்ட் கலர்”, “கயட் சோல்ஸ்: டயலாக்ஸ் ஆன்தி பர்பஸ் ஆப் லைப்”, “மிஷன் ஆப் இந்தியா: ஏ விஷன் ஆப் இந்தியன் யூத்”, “யுஆர் பார்ன் டூ பிளாஸம்: டேக் மை ஜர்னி பியாண்ட்”, “தி சயின்டிபிக் இந்தியா: தி ட்வென்டி பர்ஸ் சென்சூரி கயிட் டூ தி வேர்ல் அரவுண்ட அஸ்”, “பெயிலியர் டூ சக்சஸ்: லிஜன்டரி லிவ்ஸ்”, “டார்கெட் 3 பில்லியன்”, “யூஆர் யுனிக்: ஸ்கேல் நியூ ஹெயிட்ஸ் பை தாட்ஸ் அன்ட் ஆக்சன்ஸ்”, “டர்னிங் பாயின்ட்: ஏ ஜர்னி த்ரூ சேலஞ்சஸ்”, “இன்டோமிடபிள் ஸ்பிரிட்”, “ஸ்பிரி்ட் ஆப் இந்தியா”, “தாட்ஸ் ஃபார் சேஞ்ச்: வி கேன் டூ இட்”, “மை ஜர்னி: ட்ரான்ஸ்பார்மிங் ட்ரீம்ஸ் இன்டூ ஆக்சன்ஸ்”, “கவர்னன்ஸ் ஃபார் க்ரோத் இன் இந்தியா”, “மேனிவெஸ்டோ ஃபார் சேஞ்ச், போர்ஜ் யுவர் பியூச்சர்,கேன்டிட், போர்த்ரைட், இன்ஸ்பைரிங்”, “ஏ விஷன் பார் டுமாரோஸ் இந்தியா”, “தி கய்டிங் லைட்: ஏ செலக்ஷன் ஆப் கொட்டேஷன் பிரம் மை பேபரேட் புக்ஸ்”, “சயின்ட்டிபிக் பாத்வே டூ ஏ பிரைட் பியூச்சர்”, “தி பேமலி அன்ட் தி நேஷன்”, “டிரான்ஸ்டென்ஸ் மை ஸ்பிரிச்சுவல் எக்ஸ்பீரியன்ஸ்” ஆகிய புத்தகங்களை எழுதியுள்ளார்


கனவு இந்தியா தயார்

அப்துல் கலாம் கன்ட கனவு இந்தியா இன்னும் உருவாகவில்லை, ஆனால் அதை நோக்கிய பாதையில் சென்று கொண்டிருக்கிறது, உருவாகி வருகிறது. அவரின் கனவு தேசத்தை உருவாக்க வேண்டிய அவரை ஆதர்ஷ்ச நாயகராக மனதில் வைத்திருக்கும் ஒவ்வொரு இளைஞரின் கடமையாகும். 


நிறைவேறாத ஆசை

இந்தியாவைப் பற்றி கனவு கண்ட அப்துல் கலாமின் ஒரே ஆசை மட்டும் கடைசி வரை நிறைவேறவில்லை. அப்துல் கலாமின் உதவியாளராக இருந்த பால்சிங், அவர் குறித்த உருக்கமான விஷயத்தை ஒருமுறை தெரிவித்தார். அது “அப்துல் கலாமுக்கு கடைசிவரை ஒருவருத்தம் இருந்தது, அதுஎன்னவென்றால், தனது பெற்றோருக்கு வாழ்நாள்முழுவதும் 24 மணிநேரமும் மின்சாரம் கிடைக்கச்செய்யும் வகையில் வசதியை செய்ய முடியவில்லை என்பதுதான். இதை அடிக்கடி என்னிடம் கூறி வருத்தப்பட்டுள்ளார்” எனத் தெரிவித்தார்


தேசத்தின் ஆசையை நிறைவேற்றி, இளைஞர்களின் ஆசையை,கனவை தூண்டிவிட்ட கலாமின் ஆசை கடைசிவரை நிறைவேறவில்லை

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி