தேசிய கண் கொடை நாளின்று ( National Eye Donation Day ):

 


தேசிய கண் கொடை நாளின்று ( National Eye Donation Day ):

👀
இந்தியாவின் தேசிய கண் கொடை நாள் ( National Eye Donation Day ) ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 8 -ஆம் நாள் கடைப்பிடிக்கபட்டு வருகிறது. இந்நிகழ்வு இருவாரக் கொண்டாட்டமாக ஆகஸ்ட் 25 இல் ஆரம்பித்து செப்டம்பர் 8 இல் முடிவடைகிறது. இக்காலக்கட்டத்தில் கண் கொடை சிறப்புகள் பற்றிய பரப்புரைகள், பொதுக்கூட்டம், கருத்தரங்கு முகாம்கள் நடத்தப்படுவதோடு, பொதுமக்களுக்கு கண் தானம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், ஊக்கம் தரும் வகையிலும், இந்திய அரசு சார்பில் கலைநிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது.
உலகம் முழுவதும் 3 கோடியே 70 லட்சம் மக்கள் பார்வையற்றோர் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. அதில் ஒரு கோடியே 50 லட்சம் பேர் இந்தியாவில் உள்ளனர். இதில், 26 விழுக்காடு குழந்தைகள். 75 சதவீதம் பார்வை இழப்பைத் தடுக்கக்கூடியதாகும். போதிய கண் தானம் செய்வோர்கள் இல்லாமையால் இதை குறைக்க முடியவில்லை என ஆய்வறிக்கை கூறுகிறது.
சிறப்புத் தகவல்கள் :
ஒரு வயது முதல், அனைத்து வயதினரும் கண்தானம் செய்யலாம்.
கண்கள் மாற்று அறுவை செய்ய 20 நிமிடங்கள் முதல் 30 நிமிடங்கள் வரையே ஆகும்.
கண் தானம் செய்ய விரும்புவோர், அருகில் உள்ள கண் வங்கியில் பதிவு செய்யலாம்.
கண் தானம் செய்தவர் இறந்ததும், உடனடியாக அவரது கண்களை மூடி, ஐஸ் அல்லது ஈரமான பஞ்சை வைக்க வேண்டும்.
உலகிலேயே இலங்கையே கண் தானம் செய்வதில் முதலிடம் வகிக்கிறது.

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி