ஓணம் திருநாள்
ஓணம் திருநாள் வாழ்த்துக்கள்.
******
அத்தப்பூகோலமிட்டு மகாபலியை வரவேற்கும் நன்னாள்
ஆவணித்திங்கள் திருவோண நட்சத்திரமே அந்நாள்
மலர்களின் புன்னகையாய் கேரள மக்களின் இந்நாள்
மகிழ்ச்சியை கொண்டாடும் ஓணமெனும் திருநாள்
கொடைத் தன்மைக்கு உதாரணமாய் மண்ணிலொரு செயலே
நடையில் எளிதாய் உருவில் சிறிதாய் வந்தவர் எழிலே
சோதிக்க வந்தவர் திருப்பாற்கடலிருக்கும் கடவுளே
சோதனையில் மன்னனிடம் கேட்டது மூன்றடிப் பொருளே
வாமனருக்கு தந்திட மகாபலியும் தாரை வார்க்க
வந்தது இறைவனே விஸ்வரூபம் தானெடுக்க
முதலடி அளந்தார் வாமனன் மண்ணின் மேலே
இரண்டாம் அடி அளந்தார் விண்ணின் மேலே
மூன்றாம் அடியை தந்திட வியந்து கேட்டபோது
முடிவில் மகாபலி சிரசின் மேல் வைத்த வரலாறிது
மகாலட்சுமியின் விஷ்ணுபகவான் அவதாரம் கொண்ட திருநாள்
மகிழ்வுடன் மலையாள மக்கள் கொண்டாடும் திருவோணத் திருநாள்
**********
முருக. சண்முகம்
சென்னை - 56
Comments