வத்திக்குச்சி பத்திக்காதுடா
வாலி பேசியவை
"தீனா படம்தான் அவனுக்கு முதல் படம். அதுக்கு என் கிட்ட பாட்டு எழுத வர்றான், யுவன் ஷங்கர் ராஜா ட்யூனோட வர்றான். நான் முருகதாஸ பாக்குறேன். நீயா டைரக்டர்ன்னு கேட்டேன் ஆமாம் நான்தான் டைரக்டர் ன்னு சொன்னான். யார்ட்ட இருந்தன்னு கேட்டேன், இந்தமாதிரி எஸ்.ஜே.சூர்யா கிட்ட இருந்தேன்னு சொன்னான். அப்புற என்ன சிச்சுவேஷன்னு கேட்டேன், ஹீரோ ஒரு ரவுடி, அவர் பாடுறார் சார், ஒரு இன்ட்ரோ சாங் சார்ன்னு சொன்னான், அப்புறம் எழுதி வைக்குறேன் வான்னு சொன்னேன், போய்ட்டான். ஒரு 10 நாள் கழிச்சு கால் பண்ணி பாட்டு ரெடி வான்னு சொன்னேன், வந்தான். நான் பாடி காமிச்சேன், "வத்திக்குச்சி பத்திக்காதுடா, யாரும் வந்து ஒரசுர வரையில… வம்புதும்பு வச்சுக்காதடா, யாரும் வந்து உசுப்புற வரையில" ன்னு பாடுறேன். அத கேட்டுட்டு அப்படியே உக்காந்துருக்கான், ஒரு ரியாக்ஷனும் இல்ல. 'இதுக்குதான் புது டைரக்டர்கிட்டலாம் வச்சுக்க கூடாது, பாட்டு நல்லாருந்தா நல்லாருக்குன்னு சொல்லு, நல்லா இல்லனா நல்லா இல்லன்னு சொல்லு, இதென்ன பைபிளா மாத்தக்கூடாதுன்னு சொல்றதுக்கு… நல்லா செத்தவன் கைல வெத்தலபாக்க கொடுத்த மாதிரி உக்காந்துருக்கியே' ன்னு கோவமா பேசிட்டேன்.
அப்போதான் சொல்றான், படத்துல அஜித் சார் கைல ஒரு குச்சிய வச்சு பல் குத்திக்கிட்டே இருப்பார், அது எப்படி உங்களுக்கு தெரிஞ்சுதுன்னு யோசிச்சுக்கிட்டு இருக்கேன்னு சொன்னான். நான் யாதர்த்தமா எழுதினேன்" என்று ஏ. ஆர். முருகதாஸுடன் ஏற்பட்ட முதல் அனுபவத்தை பகிர்ந்தார் வாலி.
நன்றி: ABP நாடு
Comments